karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-30 (நிறைவு)

30

” எனக்கு சூடாக இன்னொரு கப் காபி பூந்தளிர் …” அனுராதாவின் அதிகார குரலுக்கு பணிந்து காபி கொண்டு வந்து கொடுத்த தன் மனைவியை வித்தியாசமாக நோக்கினான் குருபரன் .

” இன்னைக்கு போட்டுக்க போற என்னோட பட்டு ப்ளவுஸை கொஞ்சம் அயர்ன் பண்ணி வச்சிடுறியா …? அப்படியே ராஜா , ரவி டிரஸ்ஸை கூட அயர்ன் பண்ணிடு ….” உத்தரவிட்டு எழுந்து போனாள் .

அனுராதா முன்பு இதுபோன்ற வேலைகளை பொன்னியிடம் ஏவுவாள்தான் .ஆனால் அதில் சிறிது பவ்யம் இருக்கும் .வயதில் மூத்தவளென்ற காரணமாக இருக்கலாம் . பூந்தளிரிடம் அவளுக்கு வயதுக்கான கட்டுப்பாடு இல்லையாதலால் அவள் குரலில் அதிகாரம் தூள் பறந்த்து .

” என்னாச்சு பூவு உன்னையெல்லாம் இப்படி வேலை சொல்ல அனு யோசிப்பாளே …? ” பூந்தளிர் அயர்ன் பண்ண கையில் எடுத்த ப்ளவுஸை தான் வாங்கி அயர்ன் செய்தபடி கேட்டாள் பொன்னி .

” எதுவும் அவசரமாக இருக்கலாம்கா …கோவிலுக்கு கிளம்பும் நேரம் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் ….”

இருவருமாக தனது துணிகளை அயர்ன் பண்ணுவதை திருப்தியாக பார்த்தபடி தன் தலையை உலர்த்தியபடி நின்றாள் அனுராதா .

ராஜாவின் குர்தாவை அயர்ன் பண்ண பிரித்தபடி ஓரக்கண்ணால் கவனித்தாள் பூந்தளிர் .குருபரன்  அங்கேதான் அந்த பெரிய ஹாலின் மறுமுனையில்தான் நின்றிருந்தான் .பண்ணை ஆட்கள் இருவருக்கு கோவில் சம்பந்தமான வேலைகள் சில சொல்லிக் கொண்டிருந்தான் .நேற்றிலிருந்தே நிறைய வேலை போல. அவன் பூந்தளிரிடம் சரியாக பேசவுமில்லை .அதிகம் அவள் பக்கம் பார்க்கஙுமில்லை .வேலை காரணமாக ஒருநாள் கொஞ்சம் என்னை கவனக்காமல் இருந்த்தையே என்னால் தாங்க முடியவில்லையே …இவன் காலம் பூராவும் என்னை ஒதுக்கினால் எப்படி பொறுத்துக் கொள்வேன் நான் …?

அழுத்தி இழுத்த சுடு பெட்டியின் நுனி கவனமின்மையால் பூந்தளிரின் விரல் நுனியை சுட்டது .” உஷ் ” என்ற எரிச்சலோடு விரலை வாயில் வைத்தபடி திரும்பி பார்த்த போது , குருபரன் அங்கிருந்தபடி இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் .இவள் பார்வையை சந்தித்ததும் திரும்பி வாசலுக்கு நடக்க தொடங்கினான் .என் விரல் சூட்டை கூட கவனிக்காமல் போகிறானே …? ஏனோ பூந்தளிரின் மனம் கலங்கியது .குருபரன் வீட்டின் வாசல்படியில் ஏறியவன் அங்கிருந்தே திரும்பி இவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தான் .இவளிடம் எதையோ எதிர்பார்த்த , ஏதோ கேட்ட பார்வை . பூந்தளிர் திகைத்து நின்றபோதே வீட்டை விட்டு வெளியேறி போய்விட்டான் .




” இன்று நீ கோவிலுக்கு வர வேண்டாம் ….” அனுராதாவின் உத்தரவு குரலில் அதிர்ந்தாள் பூந்தளிர் .

” அக்கா  நான் இன்று மொளைப்பாரி தூக்கவேண்டும் .அதற்கான ஏற்பாடெல்லாம் செய்தாயிற்று .என்  அம்மாவீட்டிலும் , எங்கள் பக்கத்து ஆட்களும் கூட எனக்காக காத்திருப்பார்கள் ….”

” அதனால்தான் வேண்டாம் என்கிறேன் .ஒரு தாழ்ந்த சாதி பெண் பரம்பரை பெருமை வாய்ந்த எங்கள் கோவிலில் மொளைப்பாரி தூக்குவதா ….? இந்த சாதிப்புரட்சியையெல்லாம் சீக்கிரமே நான் மாற்றுவிடுவேன் .அத்தோடு இன்று நீ என் சொல்லுக்கு எந்த அளவு கட்டுப்படுகறாய் என நான் பார்க்கஙேண்டும் ….” ஆணவம் பொங்க பேசிவிட்டு போனாள் .

கனத்த மனதுடன் உடல்வலி , காய்ச்சல் என பல காரணங்கள் சொல்லி வீட்டிலுள்ளவர்களை கஷ்டப்பட்டு சமாளித்து அனுப்பிவிட்டு தனிமையில் வீட்டினுள் புழுங்கியபடி இருந்தாள் பூந்தளிர் .மதிய உணவு வேளையில் தனியாக வீடு திரும்பிய அனுராதா தட்டு நிறைய சாப்பாடை போட்டு சாப்பிட்டுவிட்டு ,” உஷ் மொளைப்பாரியை கொண்டு போய் கோவிலில் வைத்தாயிற்று .இப்படியா ஊர் முழுதும் சுற்ற விடுவார்கள் .ஒரே உடம்பு வலி .கொஞ்சம் என் கால்களை பிடித்து விடு பூந்தளிர் ” என்றாள் .

இதுவரை பூந்தளிர் இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை பறந்த்து .” முடியாது ….” உறுதியாக மறுத்தாள் .

” ஏன் …? நான் உன் கண்களுக்கு அவ்வளவு கேவலமாக தெரிகிறேனா …? “

” உடல்வலியால் கஷ்டப்படும் ஒருவருக்கு கால் பிடித்துவிடுவது கேவலம் அல்ல .ஆனால் அதற்கு மனம் நிறைய அன்பு வேண்டும் .அது நிச்சயம் எனக்கு உங்களிடம் கிடையாது .அதனால் இதை செய்ய முடியாது . உங்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் வீட்டில் ஓய்வெடுங்கள் .நான் கோவிலுக்கு போகிறேன் ….”

” ஏய் நில்லடி .உனக்கு ரொம்ப தைரியம்தான் .அதெப்படி என் சொல் கேளாமல் நீ கோவிலுக்கு போவாய் …? உன் புருசனிடம் நான் பேசவேண்டுமா …? “விரைந்து நடந்து கொண்டிருந்த பூந்தளிரின் கால்கள் தயங்கி நின்றன .

” பேசலாமே .நானும் வேலைகளையெல்லாம் ஒதுக்கிக்கொண்டு அதற்காகத்தான் இப்போது வந்தேன் .சொல்லுங்க மதினி , என்னிடம் என்ன பேசவேண்டும் …? ” நிதானமாக கேட்டபடி உள்ளே வந்து நின்றான் குருபரன் .அனுராதா அதிர்ந்து நின்றாள் . பூந்தளிர் முதலில் அதிர்ந்தாலும் பிறகு தன்னிரக்கம் சுரக்க அவளையறியாமல் கண்களிர் நீர் வரத்துவங்கியது .குருபரன் அவளை நோக்கி கைகளை நீட்ட இரண்டே எட்டுக்களில் அவன் மார்பில் விழுந்தவள் விம்ம தொடங்கனாள் .

சுழலாய் சுழற்றும் எத்தனையோ பிரச்சனைகளிலும் முன்பு இது போல் அவள் கலங்கியதில்லை .ஆனால் இப்போதோ …கணவனின் அன்பு அவளை பலவீனப்படுத்தியிருந்த்து .

” என் பாசம் உனக்கு பலத்தைத்தான் கொடுக்க ஙேண்டுமே தவிர , பலவீனத்தை இல்லை தளிர் .முதலில் கண்ணை துடைத்து நிமிர்ந்து என் முகத்தை பார் .”

கணவனின் அன்பு அதட்டலில் தன்னை சாமாளித்து நிமிர்ந்தவளின் நீர் வழிந்த கன்னங்களை தன் கைகளால் அழுத்தி துடைத்தான் .” இப்போது சொல் …” ஆதரவாக கணவன் மேல் லேசாக சாய்ந்தாற்போல் நின்றபடி பூந்தளிர் சொல்ல தொடங்கினாள் .

பொன்னியின் நிலைமையை அனுராதா அறிந்து கொண்டதை , அதை சொல்லி தன்னை மிரட்டுவதை …பள்ளிக்கூடத்தை எழுதித் தரச்சொல்லி கேட்பதை ….அவள் சொல்ல சொல்ல  ரௌத்ரம் ஏறிய குருபரன் முகத்தையும் , சோகம் ததும்பிய பூந்தளிரின் முகத்தையும் கைகளை கட்டிக் கொண்டு நின்றபடி சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்மிருந்தாள் அனுராதா .

” இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை …? ” கணவனின் கேள்வியில் தடுக்கி விழுந்தாற் போல் விழித்தாள் .ஏன் …சொல்லவில்லை .ஐயோ …அதை மறந்து போனேனே …நான் பாட்டுக்கு எல்லாவற்றையும் உளறிவின்டேனே …பயமாய்  திரும்பி அனுராதாவை பார்த்தாள் .




” சொல்லேன் பூந்தளிர் .உன் கணவர் ஆசையாக கேட்கிறாரே …சொல்லேன் …” கோணல் சிரிப்புடன் பேசினாள அனுராதா ..

” அ…அது ..வ..வந்து …” தடுமாறிய பூந்தளிரை தன் இறுக்கமான கையணைப்பிற்குள் கொண்டு வந்தான் .

” தளிர் சொல்லுடா …எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் ..பயப்படாமல் சொல்லு ” இதை சொல்லும்போது அவன் பார்வை கோபத்துடன் அனுராதாவை தொட்டு மீண்டது .

” நான் பேஸ்புக்கில் …நிறைய ப்ரண்ட்ஸ் வைத்திருக்கறேனில்லையா …அதில் ஒருத்தன் ….அந்த …உ…உழவன்மகன் …”

அனுராதா இதனை எதிர்பார்க்கவில்லை .இந்த விசயம்தான் அவளுக்கு துருப்புசீட்டு . இதுவே இப்படி வெளியே வந்துவிட்டால் …இல்லை .பூந்தளிர் இதனை சொல்லவிடக்கூடாது .அப்படி சொல்வாளென்றால் அவளது பேச்சின் போக்கை மாற்றவேண்டும் …வேகமாக அவர்கள் பேச்சில் குறுக்கிட்டவள்  ”  அந்த உழவன் மகனும் உங்கள் பொண்டாட்டியும் பேஸ்புக்கிலேயே காதலிக்கிறார்கள் கொழுந்தனாரே …சந்தேகமென்றால் நீங்களே உங்கள் தளிரின் போனை வாங்கி பார்த்து செக் பண்ணிக்கொள்ளிங்கள் ….” சாதாரணத்தை அசாதாரணமாக்கி ஊதிப் பெரிதாக்கினாள் .

” வாயை மூடுறீங்களா …? ” குருபரனின் கத்தலில் பயந்து வாயை இறுக மூடிக்கொண்டாள் .

” வேறு என்ன …? ” என்றான் சாதாரணமாக மனைவியிடம் .அவள் வியப்பில் விழி விரிக்க , குடையாய் சேர்ந்து விரிந்த அவள் இமை மயிர்களை எப்போதும் போல் இதமாய் வருடியவன் ” இதையா பிரச்சினை என்றாய் தளிர் …? அந்த உழவன்மகனும் நீயும் காதலிக்கவில்லையென்றால் தான் பிரச்சினை ….” பூடகமாக பேசினான் .

புரியாமல் பார்த்தவளின் தோள்களை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி அனுராதாவின் அருகே சென்றவன் ” புரசனும் , பொண்டாட்டியும் காதலிக்கிறது குத்தமா மதினி …? ” என்றான் நிதானமாக .

அனுராதாவின் முகம் அதிர்ச்சியில் வெளுக்க , பூந்தளிரின் முகம் சந்தோசத்தில் மலர்ந்த்து .

” அ…அப்போ …அ…அந்த உழவன்மகன் …”

” நானேதான் . கொஞ்சநாட்களாகவே இதை நீயாகவே உணர்ந்து கொள்வாயென்று காத்துக்கொண்டிருந்தேன் .அப்படி இது உனக்கே தெரியவரும்போது உன் முகத்து உணர்ச்சகளை பார்க்க வேண்டுமென்றுதான் காத்திருந்தேன் .ஆனால் பாரேன் எப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் அதனை தெரிந்து கொண்டிருக்கிறாய் ….” கண்களால் அனுராதாவை காட்டியபடி அவன் பூந்தளரின் கன்னங்களை பற்றி அவள் கண்களுக்குள் பார்த்தான் .

அனுராதா தொய்ந்து சரிந்து தரையிலேயே அமர்ந்துவிட்டாள் . பூந்தளிரோ உற்சாக பந்தாய் குதித்துக் கொண்டிருந்தாள் .கைகளால் செல்லமாக கணவனின் மார்பில் குத்தியவள் ” ஏன் என்கிட்ட முதலிலேயே சொல்லவில்லை …? ” சிணுங்கலும் , அழுகையுமாக கேட்டாள் .

” நான் ஸ்மார்ட் போன் வாங்கியதும் சும்மா பொழுதுபோக்காக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கினேன் .எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாத்தால் தமிழில் டைப் செய்ய கற்றேன்    இது பெரிய நெட்ஒர்க .இதன்மூலம் நிறைய நல்லவிசயங்கள் செய்யலாமென தெரிந்து கொண்டு ,.எனக்கு தெரிந்த விவசாய முறைகளை இதில் பதிவிட்டேன் .அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகமாகி என் நட்பு வட்டம் விரிவடைந்த்து .அதில் நீயும் ஒருத்தியாக இருப்பாயென நான் நினைத்து பார்க்கவில்லை ….”

” ஐயோ …இது தெரியாமல் நான் உங்களிடமே …உங்கள் ஐடியாக்களை சொல்லி …அதுவும் அந்த வெங்காய சேமிப்பு கிடங்கை எனக்கே சொல்லி …உங்களுக்கே மெயில் அனுப்பி …சை …இப்படியா என்னை ஏமாற்றுவீர்கள் …? ” வெட்கமும் , கூச்சமுமாய் கணவனின் மார்பை குத்தியவள் அவன் மீசையை பிடித்திழுத்தாள் .

” கொஞ்சநாட்களாகவே நீ என்னை கண்டுகொள்வாயென நினைத்தேன் தளிர் .குறிப்பாக அன்றிலிருந்து ….”

” என்றிலிருந்து …? “

” அன்று நீ எனக்கு போனில் மெசேஜ் அனுப்பிய நாளிலிருந்து , பதிலுக்கு நான் தமிழில் மெசேஜ் அனுப்பினேனே …அன்றிலிருந்து .எனது தமிழ் டைப்பிங்கை நீ உணர்ந்து கொள்வாயென நினைத்தேன் .அதற்காக காத்திருந்தேன் …”

குருபரன் சொன்ன நாள் நினைவு வர பூந்தளிரின் முகம் சிவந்த்து .அன்று அவள் இதையெல்லாம் கவனிக்கும் நிலையிலா இருந்தாள் .முதலில் அறைக்குள் மாட்டிக்கொண்டு தனிமை தவிப்பு ….பிறகு கணவனிடம் கொண்ட மோக தவிப்பு .இத்தனைக்குமிடையே அவள் எந்த டைப்பிங்கை கண்டாள் …?

” நானாக கண்டுபிடிக்கட்டுமென இருந்தீர்களாக்கும் …? “சிணுங்கினாள்.

” எனக்கு பொறுமையே இல்லை தளிர் .அதனால்தான் காதல் வசனங்களும் , கவிதைகளும் உனக்கு அனுப்பி என்னை நானே உனக்கு காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ….” பூந்தளிர் உடனே தனது போனை எடுத்தாள் .

” ஐயோ …அவன் யாரோ …எவனோன்னு அந்த வசனம் , கவிதையெல்லாம் சரியாக படிக்கவில்லையே …” வேகமாக அந்த கவிதைகளை அவள் திரும்ப படிக்க ஆரம்பிக்க , அவள் தோள்களை பற்றி அருகிலிருந்த சோபாவில் அமர்த்திவிட்டு , தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளது வெட்கம் குவிந்த முக பாவனைகளை ரசிக்க தொடங்கினான் . இருவருமே குன்றி போய் தரையில் அமர்ந்திருந்த அனுராதாவை கவனிக்கவேயில்லை .தங்களுக்கான தனி உலகிற்குள் நுழைந்து கொண்டார்கள் .

சில நாட்களாக தான் பார்த்து பார்த்து கட்டிய கோபுரம் சீட்டுக்கட்டு போல் சரிந்து போனதை ஜீரணிக்க முடியாமல் வியர்க்க , விறு விறுக்க பரிதாபமாக தரையில் கிடந்தாள் அனுராதா .

————————-

” ஐயா நீங்க இந்த ஊர் பெரியவர் .இந்த கோவிலுக்காக பணத்தை தண்ணீராக செலவழித்திருக்கிறீர்கள் .அதனால் கோவில் கோபுர உச்சியில் தீபமேற்றும் உரிமை உங்கள் வீட்டு பெண்களுக்குத்தான் ….” பூந்தளிர் பக்கத்து ஆட்கள் நிறைந்த மனதுடன் சொன்னதில் நெஞ்சம் நெகிழ்ந்தார் பொன்னுரங்கம் .அந்த கோவிலுக்கான அதிகாரம் தனக்கு வரவேண்டுமென அவர் நினைக்கவில்லை. ஆனால் அந்த ஊர்க்கார்ர்கள் எல்லோரும் …எல்லோருக்கும் அந்த அதிகாரத்தை பொதுவாக நினைக்க வேண்டுமென எண்ணினார் .இது போதும் …இனி இந்த ஊரில் பொன்னுரங்கமும் ஒன்றுதான் …பலவேசமும் ஒன்றுதான் .

அன்று காலை ஊர் முழுவதும் ஒற்றுமையாக கூடி கும்பாபிசேகம் நல்லபடியாக  முடிந்த்து . இனி நாளை தேரோட்டம் .தேரின் முதல் வடம் பிடித்து இழுக்கும் உரிமையென எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கும் தராமல் பொதுவாக அனைவருக்குமென கூறியிருந்தார் .அதற்கு முன் அன்று இரவு அபிசேகம் முடிந்து புதுப் பொலிவுடன் இருந்த கோபுரங்களில் தீபமேற்றி அழகுபடுத்த நினைத்தபோது , இந்த ஏற்பாட்டினை ஊர்க்கார்ர்கள் சொல்ல பொன்னுரங்கத்தின் மனம் நிறைந்தது .




” உங்கள் வீட்டு பெண்தான் இன்று என் வீட்டு மகாலட்சுமி .அவள் கையால் கோபுர விளக்கேற்றலாம் .இந்தக் கோவில் நூற்றாண்டு காலங்கள் நீண்டு வாழும் .சரிதானே ..? ” திருப்தியாக தலையசைத்தனர் ஊரார் .

——————

” என்னோடு பொன்னி அக்காவும் தீபமேற்ற  வரட்டும் மாமா ….” தன் கைகளை கோர்த்துக் கொண்ட பூந்தளிரை பிரியமாக பார்த்தாள்  பொன்னி.

” ஆமாம் மாமா …பூந்தளிர் மட்டுமில்லை .உங்கள் வீட்டு மருமகள்கள் எல்லோருமே உங்களுக்கு மகாலட்சுமிகள்தானே .அதனால் எங்களோடு அனுவும் வரட்டும் ….” பொன்னி நகர்ந்து அனுராதாவின் கைகளையும் கோர்த்துக் கொண்டாள் .மனதில் அடி வாங்கிய அனுராதா குற்றவுணர்ச்சியுடன் பொன்னியை நிமிர்ந்து பார்த்தாள் .

ஒற்றுமையாக கை கோர்த்து நின்ற தனது மருமகள்களை பெருமையாக பார்த்தனர் பொன்னுரங்கமும் , சொர்ணத்தாயும் .

” நீங்கள் மூன்று பேரும் எனக்கு ஒன்றுதான் .முப்பெருந்தேவியர் மாதிரி …நீங்கள் மூவரும் இந்த வீட்டிற்கு. ….”

மகாலட்சுமியா நீ …மூதேவி …கண்களால் அனுராதாவை வைதபடி நின்றாள் பூந்தளிர் .அனுராதாவை குற்றவுணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தின்று கொண்டிருந்த்து . அந்த அற்புதமான குடும்பத்திற்கு தான் சற்றும் பொருத்தமில்லாதவள் என முதன் முறையாக தோன்றத் தொடங்கியது .

இப்போது உன்னை பற்றி ஐயாவிடம் சொல்லி விடவா …என குருபரனின் ஜாடை பார்வையில் உள்ளூற நொறுங்கினாள் .முன்தினம்  பூந்தளிரும் , குருபரனும் தங்கள் உலகத்திற்குள் ஆழ்ந்து போனதை வெறுப்புடன் பார்த்தவள் , திடீரென வேகத்துடன் எழுந்து பொன்னியின் விசயத்தை பொன்னுரங்கம் , சொர்ணத்தாய் காதிற்கு கொண்டு செல்ல போவதாக கத்தினாள் .

” உஷ் …கத்தாமல் பேசாமல் உட்காருங்கள் …” குருபரன் அதட்டினான் .

” உங்களை பற்றி நான் ஐயாவிடம் , உங்கள் புருசனிடம் சொல்லவா …? “

” அப்படி எதை சொல்வாய் …? “

” நீங்க தளிர்கிட்ட என்னையும் , பொன்னி மதினியையும் பற்றி தப்பாக பேசவில்லை …? அதை …முதலில் ஐயாவிடம் …பிறகு உங்க புருசனிடம் ….”

அனுராதாவிற்கு திரும்பவும் அதிர்ச்சி .இது மட்டும் அவள் கணவனுக்கு தெரிந்த்து முதல் வேலையாக அவளை வீட்டை விட்டு அடித்து துரத்தி விடுவான் …பயத்தில் வெளுத்தாள் .

” அதை சொன்னது இவர்கள்தானென உங்களுக்கு எப்படி தெரிந்த்து ….? ” பூந்தளிர் கணவனை ஆச்நரியமாக கேட்டாள் .

” இதைக் கண்டுபிடிக்க பெரிய ஞானம் வேண்டுமாக்கும் .வீட்டிற்குள் விசம் கக்கி கிடந்தால் , அதற்கு இந்த வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு விசப்பாம்புதான் எனபதை தெரிந்து கொள்ளக் கூட முடியாத முட்டாளா நான் …? “

” வே …வேண்டாம் …இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் …? ” கெஞ்சலின் திசை திமிடங்களில் மாறிவிட்டதை ஆச்சரியமாக பார்த்தாள் பூந்தளிர் .

காலையிலிருந்தே அனுராதாவை ஒவ்வொரு வேலைக்கும் விரட்டிக் கொண்டிருந்தாள் பூந்தளிர் .வாய் மூடி தலை குனிந்து அவள் சொன்னதை செய்த அனுராதாவை ஆச்சரியமாக பார்த்தாள் பொன்னி .

” பூவு என்னடி நடக்குது இங்கே …? “

” ஷ் …பேசாமல் என்ஜாய் பண்ணுங்க அக்கா . நீங்களும் அவுங்களுக்கு நாலு வேலை சொல்லுங்க . உடம்பை வருத்தி செய்யட்டும் …” பூந்தளிர் வன்ம்மாய் சொல்ல பொன்னி மறுத்தாள் .

” தப்பு பூவு .அவள் செய்வதையே நாமும் அவளுக்கே திரும்பி செய்தால் அவளுக்கும் ,நமக்கும் என்ன வித்தியாசம் …? ” பொன்னி ஒரு வேலை கூட அனுராதாவை ஏவ்வில்லை .

” இன்று இரவு என் வீட்டு மகாலட்சுமிகள் மூவரும் கோபரமேறி கார்த்திகை தீபங்களை ஏற்றுவார்கள் …” அறிவித்த பொன்னுரங்கம் திடீரென ஓடிவந்து தன் காலில் விழுந்து கதறிய அனுராதாவை புரியாமல் பார்த்தார் .புரிந்து கொண்டு நிறைவாய் புன்னகைத்தது குருபரனும் , பூந்தளிரும்தான் .

——————-

கார்த்திகை தீபங்களால் மினுங்கிய கோபுரத்தை அதன் அருகில் நின்று ரசித்து கொண்டரந்தனர் .குருபரனும் , பூந்தளிரும் .எல்லோரும் கோவிலினுள் நடந்து கொண்டிருந்த கலைநிகழ்ச்சியில் கவனமாக இருக்க கணவனும் , மனைவியும் நழுவி வந்து கோபுர உச்சியில் நின்று கொண்மிருந்தனர் .

” அனு அக்கா நம் குடும்பத்தை புரிந்து கொண்டார்கள். இனி நம் குடும்பத்தில் கவலை என்பதே இருக்காது ….” பூந்தளிர் மனநிறைவுடன் கோபுரத்தின் மேலிருந்து கீழே பார்த்தாள் .

” உன் அனு அக்கா திரும்ப பழையபடி ஏதாவது பேசினால் , கைவசம் ஒரு அணுகுண்டு வைத்திருக்கறேனே …அதை தூக்கி போட்டு விட மாட்டேன் ….அதற்காகவாது பயந்து இனி அவர்கள் திருந்தியே ஆகவேண்டும் ….”

” சை பாவங்க …சும்மா அவர்களை மிரட்டாதீர்கள் …”

” சரி அவர்கள் எப்படியும் போகிறார்கள் .உன்னை அடிக்கடி மிரட்டி என் சொல்பேச்சு கேட்க வைக்க வேண்டியிருக்கிறது .அதற்கு என்ன செய்வது …? “

” நான் நீங்கள் சொல்வதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன் …”




” அப்படியா அப்போ …இப்போது நான் சொல்வதை கேள் ….” என்றவன் சொன்ன பேச்சிற்கு அ வனை அடிக்க தொடங்கினாள் .

” சீ …கோவில் கோபுரத்தின் மேலிருந்து கொண்டு என்ன பேச்சு இது …? “

” பார்த்தாயா ….எங்கே என் பேச்சை கேட்கிறாய் …? ” அவன் சலித்து கொள்ள …

” நல்லவேளை நாம் இங்கிருப்பதை யாரும் பார்க்கவில்லை”  என பூந்தளிர்  திருப்தி பட்டுக்கொண்டாள் .

அவள் சமாதானம் தவறென்பது போல் கோபுர அடியிலிருந்து கோபர உச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொன்னுரங்கம் அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தார் .மகனும் ,மருமகளும் கோபுர உச்சியில் இருப்பதை பிரியமுடன் திருப்தியாக பார்த்துக் கொண்டார் .இந்த கோபுர உச்சியில் ஏறுவதற்காக தான் முதன் முதலாக பூந்தளிரை அனுப்பி வைத்ததை நினைவு படுத்திக் கொண்டார் .அன்று …அவர் செய்த அந்த நல்ல காரியத்தால்தான் …இதோ இன்று இந்த கோபரம் குடமுழுக்கு கண்டு புதுப் பொலிவுடன் தீபங்கள் மின்ன காட்சியளிக்கிறது .

” சாதிகள் ஒழிந்து இந்த ஊர் தீபமாக ஒளி விட வேண்டும் தாயே …” கோபரத்தை வணங்கியபடி வேண்டிக்கொண்டார் .

அவரது வேண்டுதலை ஏற்றுக்கொள்வது போல் கோபுரத்தின் கார்த்திகை தீபங்கள் சுடர் விட்டு பிரகாசித்தன.

,- நிறைவு –




What’s your Reaction?
+1
34
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!