karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-27

27

இவர் ….அங்கே கோவிலில் இல்லமல் இங்கே எதற்கு வந்தார் …? பூந்தளிர் அறையோடு இருந்த அடுப்படியினுள் நுழைந்து கொண்டாள் .கதிர்வேலன் எதையாவது எடுக்க வந்திருக்கலாம் …எடுத்து விட்டு போகட்டும் .பிறகு போகலாம் என நினைத்தபடி அவள் உள்ளே மறைய , கதிர்வேலனோ வெளியேறும் எண்ணமின்றி கட்டிலில் உட்கார்ந்து கொண டான்.ஐய்ய்யோ இவர் போகமாட்டாரா ….பூந்தளிர் தவித்துக் கொண்டிருக்கும் போதே அவன் …

” அரை தம்ளர் போதும் பொன்னி .நல்லா சூடாக இருக்கட டும் ” என வெளியே பார்த்து சொன்னான் .

ஓ…பொன்னி அக்காவும் இருக்கிறாளா…ஆனால் இருவரும் அங்கே கோவிலில் தானே இருந்தார்கள் …இங்கே எப்போது வந்தார்கள் …? பூந்தளிருக்கு எதுவோ புரிவது போல் இருந்த்து .மெல்ல எட்டிப் பார்த்தாள் .கதிர்வேலன் கட்டிலில் உட்கார்ந்திருக்க பொன்னி கையில் ஒரு டம்ளரோடு வந்தாள் .பூந்தளிர் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள் .

” இந்த மாத்திரையையும் சேர்த்து போட்டுக்கோங்க …”

பொன்னி கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்ட கதிர்வேலன் காபியை குடித்தபடி அவளையே பார்த்தான் .கணவனின் பார்வையின் தீவிரத்தில் பொன்னியின் உடலில் ஓர் நடுக்கம் பரவியது .கதிர்வேலன் கை நீட்டி அவள் தோள்களை பற்றி இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டான் .

” என்ன பயம் பொன்னு …? ” கொஞ்சலாக கேட்டான் .

உள்ளே …பூந்தளிர் எச்சில் விழுங்கினாள் .ஐய்யய்யோ கடவுளே இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே …படபடப்புடன் அடுப்படியின் ஓரத்தில் தரையில் சுருண்டு அமர்ந்து கொண்டாள் .

” எத்தனை பெரிய பாவி நான் …? அறிவில்லாமல் இவ்வளவு நாட்கள் என் சொர்க்கத்தையே தள்ளி வைத்திருந்தேனே ….” எவ்வளவுதான் காதுகளை இறுக்க மூடினாலும் , கதிர்வேலன் உணர்ச்சிவசப்பட்டு பேசிய காதல் வசனம் எப்படியோ ….பூந்தளிர் காதுகளில் வந்து விழுந்து கொண்டுதான் இருந்த்து .

அடக்கடவுளே …இன்னைக்கு என் நேரம் இப்படியா இருக்கனும் …? இவர்கள் இருக்கிற வேகத்தை பார்த்தால் இப்போதிற்கு கதவை திறக்க மாட்டார்கள் போலவே …நான் எப்படி வெளியே போக …? இரவு முழுவதும் இங்கே இருக்க முடியாதே …பதறி தவித்த பூந்தளிர் …ஒரு யோசனை வர தன் போனை எடுத்து குருபரனுக்கு மெசேஜ் அனுப்பினாள் .

” எங்கே இருக்கீங்க …? “




” கோவிலில்தான் …நீ எங்கே இருக்கிறாய் ..? அம்மா பக்கத்தில் உன்னை காணோமே …நான் உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் …”

” நான் வீட்டில் …இங்கே வாங்க …”

” என்னடா திடீர்னு வீட்டிற்கு …உடம்பு சரியில்லையா …? “

தான் வந்து பத்துநிமிடத்தில் தன்னை தேடத் தொடங்கி விட்ட கணவனையும் , உடம்பு சரியில்லையா என்ற அவனது கரிசனத்தையும்  நெகிழ்வோடு உள் வாங்கிக் கொண்டவள் …

” தலைவலி ..மாத்திரை போடலாமென வந்தேன் .இங்கே உங்கள் அண்ணன் இருக்கிறார் …”

” சரி …அதனால் என் ன …? நீ மாத்திரை போட்டுட்டு படு .நான் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் .மாத்திரை இருக்குதானே”

” மாத்திரை இருக்கு .ஆனால் நீங்கள் உடனே இங்கே வரனும் .நான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன….

” என்னடா ….நம் வீட்டில் என்ன சிக்கல் …? “

ஐயோ …இவனுக்கு எப்படி புரிய வைக்க …பூந்தளிர் தவிப்புடன் அடுத்த செய்தியை டைப் செய்தாள் .

” இங்கே உங்கள் அண்ணனும் , மதினியும் …இருக்கிறார்கள் “

” ஓ…சரி …சரி …அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள் …நீ பாட்டுக்கு ….நம் ரூமில் இருக்க வேண்டியதுதானே ….”

” நான் பொன்னி அக்கா ரூமிற்குள் யார் இருக்கிறார்களென பார்க்க வந்தேன் …அப்போது அவர்கள் இருவரும் இங்கே வந்துவிட்டார்கள் .நான் இப்போது வெளியே போக முடியாமல் உள்ளே அடுப்படிக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்….” ஒரு வழியாக தன் நிலைமையை டைப் செய்து அனுப்பி விட்டாள் .

குருபரனிடமிருந்து கொஞ்ச நேரம் எந்த செய்தியும் வரவில்லை .பிறகு வந்த ” என்ன செய்ய போகிறாய் …? ” கேள்வியில் அவன் எழுத்துக்களை டைப் செய்திருந்த்திலேயே அவனது சிரிப்பு தெரிந்த்து ..

” சிரிக்காதீர்கள் …” கோபமாக மெசேஜ் அனுப்பினாள் .

” சரி …நீ இரு .நான் வருகிறேன் ….”

சை …என்னை நக்கலாக சிரித்துக் கொண்டே வருகிறான் …வரட்டும் வச்சிக்கிறேன் …கோபத்துடன் கால்களை தரையில் உதைத்தவள் , அவசரமாக காதுகளை கைகளால் பொத்திக் கொண்டாள் .

பத்து நிமிடத்தில் பூந்தளிரின் போனில் மெசேஜ் வந்த்து .

” புகைக் கூண்டு பக்கத்தில் வா ….”

பூந்தளிர் எழுந்து அடுப்படி புகைக்கூண்டு வழியாக மேலே பார்த்தாள் .அதன் மேலிருந்த ஸ்லாப் அகற்றப்பட்டு மேலே குருபரனின் முகம் தெரிந்த்து .அவன் மேலிருந்து ஒருதடிமனான வடக்கயிற்றை உள்ளே விட்டான் .அதை பிடித்து கொள்ளுமாறு ஜாடை செய்தான் .பூந்தளிர் அதை பிடித்துக் கொள்ள குருபரன் மேலிருந்து அவளை தூக்கினான் .




ஜில்லென்ற காற்று உடம்பில் பட்டதும் பூந்தளிரின் உடலில் நிம்மதி பரவியது . தன் கை தொட்டு மேலேற்றிய கணவனின் தோள்களை கட்டிக் கொண்டாள் .குருபரன் கயிற்றை விட்டு விட்டு அவள் இடையை கட்டி அணைத்துக் கொள்ள இருவருமாக தடுமாறி புகைக்கூண்டின் மேலிருந்து தரையில் சரிந்தனர் .

கவனமாக அவளுக்கு அடிபடாமல் அவளை தன் மேல் சரித்துக் கொண்டவன் , தரையில் விழுந்த்தும் அவளை தன் மார்பில் தாங்கிக் கொண்டான் .சற்று முன்னிருந்த பொறிக்குள் மாட்டிய எலி நிலைமை மாறி சுதந்திரம் கிடைத்த நிம்மதியில் ஆழ மூச்சு விட்டு கணவன் மார்பிற்குள் கதகதப்பாய் அடங்கிக் கொண டாள் பூந்தளிர் .

” அவுங்களை எழுப்ப வேண்டாம்னு நான்கதவை தட்டாமல்   தண்ணிக்குழாயை பிடிச்சு ஏறி மொட்டை மாடி வந்தேன் .” ரகசியமாக அவள் காதிற்குள் கிசுகிசுத்தான் .

” ம் …” பூந்தளிரின் மூக்கு நுனியை அவன் மார்பு முடி குறுகுறப்பூட்டியது .

திடுமென அவன் உடல் மெல்ல அதிர்ந்த்தில் அவன் சிரிப்பது தெரிந்த்து . ” இப்படியா உள்ளே போய் மாட்டுவ …? “

மெல்லிய கோபத்துடன் அவன் மார்பில் குத்தினாள் .” எனக்கென்ன ஜோசியமா தெரியும் …இவர்கள் இரண்டு பேரும் இந்த எண்ணத்தோடு வீட்டிற்கு வந்திருப்பார்களென …? ” கொலுசின் முத்துக்களாய் சிதறியது பூந்தளிரின் குரல் .

” இந்த மாதிரி ஐடியாவெல்லாம் நமக்கு வர மாட்டேங்குது பாரேன் .அனுபவசாலிகள் …அனுபவசாலிகள்தான் ….”

” ம்ஹூம் …பேசாதீர்கள் ….” கையை  உயர்த்தி கணவன் வாயை பொத்தினாள் .

தன் வாயில் இருந்த விரல்களை உதட்டை விரித்து மென்மையாக கடித்தான் .அவள் ” ஷ் ” என விரலை உதறிக் கொள்ள …அவன் விரல்கள் அவள் முதுகில் கோலமிட்டன.

” தளிர் ….”

” ம் …”

” இப்போது நாம் என்ன செய்வது …? “

” ம் …”

” திரும்ப கோவிலுக்கு போகனுமா …? “

” ம் …”

” அங்கே பட்டிமன்றம் ரொம்ப போர் …”

” ம் …”

” அது முடிந்த்தும் கிராமிய கூத்து இருக்கிறது …”

” ம் …”

” எல்லாம் முடிய இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும் …”

” ம் …”

” நம் வீட்டு ஆட்கள் எல்லாம் முடிந்த்தும் தான் வருவார்கள் “

” ம் …”

” ஏய் …என்ன எல்லாத்துக்கும் ” ம் …”




” ம் …ம் …ம் …தான் …” பூந்தளிர் வெட்கத்துடன் அவன் மேலிருந்து எழுந்து கீழே ஓடினாள் .குருபரன் பின்னாலேயே கீழிறங்கி  வந்தான் .கதிர்வேலன் , பொன்னியின் பூட்டப்பட்டிருந்த அறையை கடக்கும் போது வெட்கத்துடன் தன் முகத்தை மூடியபடி ஓடினாள் .அடுத்திருந்த   அவர்கள் அறை முன்னால்ஒரு விநாடி தயங்கி தாமதித்தன அவள் கால்கள் .அந்த ஒரு நொடியில் பின்னாலிருந்து அவளை கைகளில் அள்ளியிருந்தான் குருபரன் .

” இப்படி தயங்கி தயங்கியே …நிறைய நாட்களை வீண்டித்து விட்டோம் .இனி ஒரு விநாடி கூட வீணாக்க போவதில்லை …” சொன்னதை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அவன் இதழ்கள் அங்கேயே  அவள் கன்னத்தில் புதைந்தன. பூந்தளிர் அவசரமாக விழியை சுழற்றி பார்க்க …

” இங்கே யாருமில்லை தளிர் …இனி விடியும் வரை நீ …நான் …நான் …நீ …நாம் …நாம் …நாம்   மட்டும்தான் ….” அறைக்கதவை அழுத்தி பூட்டினான் .பூந்தளிருக்குள் புதுப்புது மாயலோகங்கள் விரியத் தொடங்கியது .

————————–

பூந்தளிர் கண் விழித்தபோது விடிந்திருந்த்து . பாரமாய் மீண்டும் படுக்கைக்கு இழுத்த அயர்ந்த உடல் முன்தின நிகழ்வை நினைவுறுத்த , சுக சொக்கலில் விழிகளை படபடத்துக் கொண்டவள் திரும்பி பார்க்க , நிறைவான முகத்துடன் அருகே உறங்கிக் கொண்டிருந்தான் குருபரன் .அவளது  அசங்கலில் உண்டான சிறு இடைவெளியை விரும்பாமல்   அவள் இடையை இழுத்து தன்னோடுமீண்டும்  இணைத்துக்கொண்டு தூங்க தொடங்கினான் .

அவன் கைகளிலிருந்து பூந்தளிர் விடுபட முனைய மேலும் இறுக்கினான் .

” விடிஞ்சுடுச்சு ….விடுங்க …”

” ம் ….” கண்களை திறக்காமலேயே அவள் கழுத்தில் முகம் பதித்தவன் அவளை எழுந்திருக்க விடாமல் வம்பு பண்ணினான் .

” ஐயோ …அத்தை …கூப்பிட போறாங்க .விடுங்க ப்ளீஸ் ….”

” ம் …சரி போ ….அரை மணி நேரத்தில் எனக்கு காபி எடுத்துட்டு வரனும் ….” நிபந்தனையோடு பிடியை தளர்த்தினான் .பூந்தளிர் ஓடிப்போய் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள் .நல்லவேளை அவன் கண்களை திறக்கவே இல்லை .இப்போது அவன் கண்களை சந்திக்கும் தைரியம் அவளுக்கு இல்லவே இல்லை .

அவசரமாக குளித்து தலையில் சுற்றிய ஈரத்துண்டுடன் அவள் அறைக்கதவை திறந்து வெளியே வந்த அதே நிமிடத்தில் சரியாக பக்கத்து அறைக்கதவும் திறந்த்து . அங்கே  பொன்னி நின்றிருந்தாள் . அவளைப் போலவே சடுதிக் குளியலும் , அவசர கோலமுமாக …தலையில் சுற்றிய ஈரத்துண்டுடன் .ஒன்றையொன்று கவ்விய விழிகள் சொன்ன …கண்டுபிடித்த சுப செய்தியில் இரு பெண்ளும் கன்னம் சிவந்தனர் .

” வந்து …எந்திரிக்க ….கொஞ்சம் லேட்டாயிடுச்சு ….”

” ஹி….ஹி …எனக்கும் …எழுந்திரிக்க லேட்டாயிடுச்சு ….”

ஒருவருக்கொருவர் ரகசிய சேதியொன்றை பரிமாறிக் கொண்டிருந்த போது …

” ஏய் …என்னடி  நீ மட்டும் நின்னுட்டு இருக்க ? அவளுக ரெண டு பேரையும் எங்கே ?மணி ஏழாயிடுச்சு …அடுப்படி பக்கம் ஒருத்தியையும் காணோம் ….” சொர்ணத்தாயின் கத்தலில் அலறியடித்து அடுக்களைக்கு ஓடினர் .

” மன்னிச்சிருங்கத்தை …எழுந்திரிக்க லேட்டாயிடுச்சு …”

” சாரித்தை …இப்போ சமையலை முடிச்சிடுறோம் …”

மூச்சு வாங்க நின்ற இரு மருமகள்களையும் ஏற இறங்க  பார்த்த சொர்ணத்தாய் என்ன நினைத்தாளோ …” சரி …சரி மசமசன்னு நிக்காமல் போய் வேலையை ஆரம்பிங்க .” என்றுவிட்டு வெளியே போனாள் .

அனுராதா முதலில் எழுந்து வந்துவிட்டு , இன்று அவர்கள் இருவரும் அத்தையிடம் வாங்கி கட்டிக் கொள்ளட்டுமென மிக பொறுப்பான மருமகளாக பாவனை செய்து கொண்டிருந்தாள் .ஆனால் சொர்ணத்தாய் இப்படி சப்பென விட்டு செல்லவும் பற்களை நரநரத்தாள் .காலையிலிருந்து அவள் கஷ்டப்பட்டு செய்த அத்தனை வேலைகளும் கவனக்கப்படாமலேயே போய்விட்டன .

” நீங்க நேத்து நைட்  கூத்து பார்க்கலையாக்கா …?” பூந்தளிர் கிண்டல் தொனிக்க பொன்னியிடம் கேட்டள் .

” ம் …ம் …நீ மட்டும் பார்த்தியாக்கும் …? ” பொன்னி அவளுக்கே கேலியை திருப்பினாள் .




வெட்கத்தில் சிவந்த முகத்துடன் இருவரும் தலை குனிந்து கொண்டனர் .அனுராதா குரோத்த்துடன் இருவரையும் பார்த்தாள் .இவர்கள் இருவருக்கும் என்ன ஆனது …புதிதாக நடந்து கொள்கின்றனரே …

” நீ ராத்திரி வீட்டுக்கு எப்போ வந்த பூவு …? “

” நீங்க வந்த்துக்கு அப்புறந்தான்கா …” பூந்தளிரும் , பொன்னியும் கேலியுடன் ஒருவரையொருவர் வாரிக் கொண்டிருந்தனர் .

” பொன்னி …கீர்த்து குளிக்க அடம்பிடிக்கிறா …நீ வா …” சமையலறை வாசலில் நின்று கதிர்வேலன் அழைக்க , பொன்னி …

” அடுப்பை பார்த்துக்கோ பூவு வந்திடுறேன்….” எனக் கிளம்ப ,
சரி …சரி …போங்க ….” பூந்தளிர் சொல்ல அவளை முறைத்தாள் .பொன்னி .

” ஏய் …குழந்தைக்காக கூப்பிடுறார்டி …”

” ம் …நம்பிட்டேன் …போங்க …” என்றவளை கன்னத்தில் செல்லமாக கிள்ளிவிட்டு அவள் அந்த பக்கம் போகவும் …

” தளிர் காபி வேணுமே …” என வந்து நின்றான் குருபரன் .

” உட்காருங்க தர்றேன் …” அவன் பக்கம் திரும்பாமலேயே அவள் பாலை சுட வைக்க ஆரம்பிக்க , அவன் உட்காராமல் அ ளருகே அடுப்பிடம் வந்து நின்றான் .

” ஏய் …உன்னை காபி எடுத்துட்டு ரூமுக்கு வரச் சொன்னேனே …” அவள் பக்கம் குனிந்து கிசுகிசுத்தான் .

” ஸ் …உங்க மதினி …நீங்க தள்ளி நில்லுங்க …”

” அவுங்க அப்போவே போயிட்டாங்க ” குருபரன் லேசாக திரும்பி பார்க்க அனுராதா சுருங்கிய முகத்துடன் பின்வாசல் வழியாக வெளியேறினாள் . அவளிக்கு ஒரே குழப்பமாக இருந்த்து . இந்த பொன்னக்கும் , பூந்தளிருக்கும் என்ன ஆனது …? அவர்கள் வீட்டுக்கார்ர்களுக்கு என்ன ஆனது …? அந்த வீட்டிற்குள் ரகசிய சமிக்ஞைகளும் , கசியும் காதலுமாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள் முருகேசனும் , அனுராதாவும்தான் .நாங்கள் லவ் மேரேஜாக்கும் சொல்லாமல் சொன்னபடி அனுராதா தலை நிமிர்த்தியபடி அந்த வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருப்பாள் .   இப்போதோ  இவர்கள் இரண்டு பேரும் ஏதோ நேற்றுத்தான் திருமணமான புதுதம்பதி போல் கொட்டமடித்து கொண்டிருக்கன்றனரே .பூந்தளிரையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம் …இந்த பொன்னிக்கு என்ன ஆனது .அனுராதா மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தாள் .

——————————

ததும்பி வழிய …வழிய காவிரி நீரை சும்ந்தபடி யானைகள் ஊருக்குள் வலம் வந்து கொண்டிருந்தன. முற்றத்து தூணை சாய்ந்து கட்டியபடி யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பூந்தளிர் .இந்த யானை மட்டும் எந்த வயதினரையும் சிறு குழந்தையாய் உணர வைத்துவிடுகிறது .

” தளிர் வாய்க்குள் ஈ …” அவளை வம்பிக்கிழுத்தான் குருபரன் .

” நக்கலா …? ” முறைத்தாள் .

” யானையையே பார்த்தில்லையா …இந்த பார்வை பார்க்கிறாய் …? “

அதுதான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேனே …மனதிற்குள் நினைத்தவள் ” யானை கூடத்தானே போய்கொண்டிருந்தீர்கள் .இங்கே ஏன் வந்தீர்கள் ..? ” யானை பின்னால் ஊர்வலத்தில் போய் கொண்டிருந்தவன் தன் வீட்டு வாசலில் மனைவியை பார்த்ததும் இங்கே வந்துவிட்டிருந்தான் .கேட்டவளின் முகம் முன்பு குனிந்து பார்த்தான் .

” அதென்ன தளிர் நேற்றிலிருந்து நிமிர்ந்து என் முகத்தை பார்க்கவே மாட்டேனென்கிறாய் …ம் …? “

அச்சச்சோ …கண்டுபிடிச்சுட்டானா …ராட்ச்சன் இவனிடம் எதையும் மறைக்க முடியாது .உதட்டை கடித்து கொண்டவள் ” இங்கிருந்து போங்கள் ….” தலை குனிந்து முணுமுணுத்தாள் .

” ம் ..்போகிறேன் .என் கேள்விக்கு பதில் யோசித்து வை .இன்னைக்கு ராத்திரி சொல்லனும் …” அத்தனை கூட்டத்திலும் பிரத்யோகமாக அவள் இடையை ஒரு விரலால் தீண்டிவிட்டு கூட்டத்தோடு போய் சேர்ந்து கொண்டான் .

வெள்ளை வேட்டி , சட்டையுடன் பெரிய மனுசன் மாதிரி இருந்து கொண்டு , செய்கிற வேலையை பார் .பொறுக்கி …கணவனை செல்லமாய் வைது கொண்டு வீட்டினுள் போனாள் .

வீட்டு வேலையில் மனம் ஒன்றாமல் தனது போனை எடுத்து சும்மா பார்த்துக் கொண்டிருந்தவள் அதிர்ந்தாள் ்அந்த உழவன் மகனிடம் இருந்து காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு கவிதை வந்திருந்த்து அவளுக்கு .




What’s your Reaction?
+1
31
+1
15
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!