karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள் -24

24

அருகில் கேட்ட சலசல சத்தத்தில் திரும்பி பார்த்த கோபாலன் , பூந்தளிர் வேக நடையுடன் வருவதை கண்டதும் பீதியில் கண் பிதுங்கினான் .இவளா ….ஐய்யய்யோ ….இவகிட்ட மாட்டுனேன்னா என்னை கிழிச்சி தோரணமாய் தொங்க விட்டடுவாளே …ஆர்டர் செய்து வந்து கொண்டிருந்த உணவை மறந்து எழுந்து ஓட  முடிவெடுத்தான் .வேகமாக எழுந்து சுற்றியிருந்தோர் கவனத்தை கவராமல் நடந்து ஹோட்டலின் பின்வாசல் நோக்கி நடந்தவன் வாசலின் முதல் படியில் காலெடுத்து வைத்த போது சட்டைக் காலரை பிடித்து இழுக்கபட்டான் .

” ஏய் …எங்கே ஓடுற …? எத்தனை நாள் என்னை ஏமாற்றுவ …? இத்தனை நாள் எங்கே ஒளிந்துகொண்டிருந்தாய் …? சொல்லு …” சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கியவளை கெஞ்சுதலாக பார்தான் கோபாலன் .

” பூந்தளிர் ப்ளீஸ் …எல்லோரும் பார்க்கிறாங்க .சட்டையை விட்டுடேன் …நான் உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன் ….”

” நீ முதல்ல சொல்லு .அப்புறம் விடுறேன் ….”

” அவனை விடு பூந்தளிர் ….” குருபரன் பின்னாலேயே வந்து நின்றபடி சொன்னான் .

” இவன் என்னவெல்லாம் செய்தான் தெரியுமா …? எனக்கிருக்கற ஆத்திரம் இவனை கொன்னால் கூட குறையாது …”

” அவரை கொன்றுவிட்டால் என் கதி என்ன ஆவது பூந்தளிர் …? ” கேட்டபடி வந்து நின்ற பெண்ணை பார்த்ததும் பூந்தளிரின் பிடி தளர்ந்த்து .

” டெய்சி …நீயா …? “

” நானேதான் .அவர் இப்போது என் கணவர் பூந்தளிர்….”

பூந்தளிர் சட்டென தன் கைகளை கோபாலனின் சட்டையிலிருந்து எடுத்துக் கொள்ள அவன் நிம்மதி பெருமூச்சுடன் கசங்கிய தனது சட்டையை நீவி விட்டுக் கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டான்.

” உன்னை காண்டாக்ட் பண்ணவே முடியவில்லையே டெய்சி .நீ எங்கே இருந்தாய் …? உங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா …? எப்போது ….எப்படி …? “




” போன மாதம்தான் .நான் கோபாலன் வீட்டினருக்கு பயந்து ஆந்திரா பக்கம் ஒரு வேலை தேடிக்கொண்டு  ஓடிவிட்டேன் .உன்னையோ …. தொடர்பு கொள்ள பயமாக இருந்த்து .என்னால் ஊருக்குள் உனக்கு எதுவும் பிரச்சனை வந்துவிடக் கூடாதே …அதனால் என் வாழ்க்கையை நொந்தபடி அங்கிருந்த போது , உன் கணவர் என்னை அங்கே தேடி வந்து பார்த்தார் ….” டெய்சி மரியாதையாக குருபரனை நோக்கினாள் .

பூந்தளிர் ஆச்சரியமாக அவனை பார்த்தாள் .” நீங்களா …? உங்களுக்கு எப்படி ..தெரியும் ..?? “

பூந்தளிர் , டெய்ஸி இருவரும் ஒரே காலேஜில் படித்தனர் .டெய்ஸி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிறிஸ்டியன் மத பெண் .அவளுக்கும்,ஊருக்குள்   உயர்ஜாதியை சேர்ந்த  , கோபாலனுக்கும் எப்படியொ  காதல் வர , இருவருமே தங்கள் ஊர் ஜாதி வெறியை நினைத்து பயந்தனர் .படிப்பு முடிந்த்தும் யாருக்கும் தெரியாமல் மணம் முடித்துக்கொண்டு சென்னைக்கு ஓடிவிட முடிவெடுத்து பூந்தளிரின் உதவியை கேட்டனர் .அவளும் உதவ ஒப்புக்கொண்டாள் .

கொஞ்சமும் சந்தேகம் வரக்கூடாதென டெய்ஸி முதல்நாளே வேலை விசயமாக போவதாக கூறி தஞ்சாவூர் போய்விட , அவளுக்கான துணிமணிகளுடன் பூந்தளிர் கோபாலனுடன் தைரியமாக தஞ்சாவூர் வர ஒத்துக்கொண்டாள் .பஸ்ஸில் போனால் ஊரார் கண்ணில் பட்டு பிரச்சனையாகி விடக்கூடிய வாய்ப்பிருந்த்தால்  , தன் நண்பனின் கார் இருப்பதாக கூறி கோபாலன் குருபரனின் காரை ஏற்பாடு செய்தான் .

” நான் கோபாலனை நேரில் போய் பார்த்தேன் பூந்தளிர் .ஒரே அறையில் அவன் எல்லா உண்மையையும் ஒத்துக் கொண்டான் .தனது சாதி ஆட்களின் மிரட்டலுக்கு பயந்துதான் டெய்ஸியை தள்ளி வைத்திருப்பதாகவும் , இப்போதும் அவளுடனேயே சேர்ந்து வாழ நினைப்பதாகவும் சொன்னான் . பிறகு நாங்கள் டொய்ஸியை தேடத் தொடங்கினோம் …”

”  டெய்ஸி மேல் உனக்கு  இவ்வளவு அன்பிருந்தால் அன்று ரிஜிஸ்தர்ர் ஆபிசில் எங்களை அம்போவென்று விட்டு விட்டு ஏன் பின்வாசல் வழியாக ஓடினாய் …? ” பூந்தளிர் கேட டாள் .

” நாம் எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் அன்று எங்கள் வீட்டிற்கு விசயம் தெரிந்துவிட்டது பூந்தளிர் .என் அப்பாவும் , அண்ணனும் நம் பின்னாலேயே வந்து இருக்கிறார்கள் . நாம் திருமணத்தை பதிவு செய்த்தும் முதல் வெட்டு டெய்ஸிக்கு , இரண்டாவது எனக்கு …என்று அரிவாளை தீட்டி இடுப்பில் சொருகிக் கொண்டிருந்தனர் .நாம் ரிஜிஸ்டர்ர் ஆபீசில் காத்திருந்த போது வெளியே அவர்கள் பக்க சந்தில் நின்று பேசிக்கொண்டிருந்த்தை கேட்டுவிட்டேன் . அப்போது எங்கள். முறை வந்து ரிஜிஸ்டரார் அழைக்க அந்நேரம் உங்கள் இருவருக்கும் விளக்க நேரமில்லாமல் பின்வாசல் வழியாக ஓடிவிட்டேன் .பிறகும் என்னை என் வீட்டில் கண்காணித்தபடி இருந்த்தால் உன்னையோ , டெய்ஸியையோ தொடர்பு கொள்ளவில்லை .அண்ணன் டெய்ஸி வீட்டிற்கே நேரடியாக போய் அவளையும் , அவள் அம்மாவையும் மிரட்டியிருக்கிறான் .அவர்களும் பயந்து போய் எங்கேயோ போய்விட்டனர் ….உன்னையும் மிரட்டியிருப்பார்கள் .ஆனால் உன் அப்பாவை நினைத்து பயந்து போய் விட்டு விட்டார்கள் …”

இது பூந்தளிருக்கு தெரியும் .அவளது அப்பா பலவேசத்தின் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை ஊருக்குள் அனைவருக்குமே உண்டு .அந்த தைரியத்தில்தான் இவள் டெய்ஸியின் காதலுக்கு உதவ முடிவெடுத்தாள் .

” கோபாலனை நான் சென்னைக்கு ஒரு வேலையாக போன போது ரோட்டில் பார்த்தேன் ்என்னை பார்த்ததும் அவன் ஓட முயன்றது சந்தேகத்தை கொடுக்க , தனியாக இழுத்து போய் விசாரித்தேன் .நம் இருவருக்கும் திருமணம் முடிந்த நாளிலிருந்து அ வன் மிகுந்த பயத்துடன் இருந்திருக்கிறான் .நான் ஒரு அதட்டல் போடவும் எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான் .பிறகு நாங்கள் டெய்ஸியை தேட ஆரம்பித்தோம் .அவளை கண்டுபிடித்து …இதோ போனமாதம் இங்கே ரிஜிஸ்டர்ர் ஆபிசில் வைத்து திருமணத்தை முடித்தாயிற்று ….”




” நாங்கள் இருவரும் சந்தோசமாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .இதற்காகத்தானே அப்போது நீ அவ்வளவு முயற்சிகள் எடுத்தாய் …? இப்போதும் உன்னால் …உன் கணவரால்தான் இந்த எங்கள் வாழ்வு சாத்தியமானது .உங்கள் இருவருக்குமே நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் …எத்தனையோ இடைஞ்சல்கள் வந்தாலும் கடைசியில் எங்கள் உண்மைக் காதல் ஜெயித்துவிட்டது ….” டெய்ஸி நகர்ந்து தன் கணவனின் கைகளை பற்றிக் கொண்டாள் .

காதல் மின்னும் கண்களுடன் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்ற இருவரையும் எரிச்சலாக பார்த்தாள் பூந்தளிர் . கல்யாணம் வரை வந்துவிட்டு …எனக்கென்னன்னு விட்டுட்டு ஓடியிருக்கிறான் .பிறகும் அவளை பற்றிய கவலையின்றி வேலையை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் .யாரோ கண்டுபிடித்து வந்து கல்யாணம் முடித்து வைத்தால் …இவள் இப்போது புருசனை கொஞ்சுவாளாமா …பூந்தளிருக்கு பற்றிக் கொண்டு வந்த்து .

” எல்லாம் சரிதான்டி உன் புருசன் அன்னைக்கு என் புருசன்கிட்ட என்னை காட்டி நானும் , அவனும் காதலிப்பதாக சொல்லியிருக்கிறான் .அதை ஏன்னு கேளு …” தோழியை தூண்டிவிட்டாள் .

” என்னது …அப்படியா சொன்னார் …? ” டெய்ஸி இடுப்பில் கை தாங்கி கோபாலனை முறைக்க , குருபரன் பூந்தளிரின் காதிற்குள் ” பத்த வச்சிட்டியே பரட்டை …” என்றான் .

” ஐய்யய்யோ அன்னைக்கு என்னால் குருபரனிடம் அதிக விளக்கம் கொடுக்க முடியவில்லை .சும்மா காதல் ,திருமணம் உதவ்வேண்டுமென்று விட்டு …வெளியே நின்ற பூந்தளிரை கை காட்டிவிட்டேன் . ஒரு பெண் வந்து காத்துக் கொண்டு நின்றிருப்பதை பார்த்தால் அதிகம் துருவாமல் இவன் காரை தருவானென நினைத்தேன் .அது போல் பூந்தளிரை பார்த்தவுடனேயே இவன் உடனடியாக தலையாட்டியதோடு அவனே காரை எடுத்துக் கொண்டு தஞ்சாவூர் வரை வந்தான் .அது எங்களுக்கு ஒரு பாதுகாப்பாக கூட இருந்த்து ….”

” ஓ…அதறகாகத்தானா …தப்பான எண்ணத்தில் அவர் அப்படி சொல்லவில்லையடி ….” டெய்ஸி மீண்டும் கணவன் புறம் மாறினாள் .

” அட அப்படியா கோபாலா …அப்போ …அதுக்கப்புறம் ஒரு தடவை இவர்கிட்ட நம்ம ஊருக்குள் வைத்து …நான் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் விட்டதாக சொன்னாயாமே …அது எதற்கோ …? ” பூந்தளிர் தொடர்ந்து தோழிக்கு தூபம் போட்டாள. .அதன் பலன் உடனே தெரிந்த்து .

” அடப்பாவி இவுங்க ரெண்டு பேரும் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு உதவியிருக்காங்க .அவுங்க நிம்மதியையே நீ குலைத்தாயா …? ” டெய்ஸி புருசனின் சட்டையையே பிடித்துவிட்டாள் .

” இப்போ நிம்மதியா …? இதைத்தானே டெய்ஸியிடம் எதிர்பார்த்தாய் …? ” குருபரன் பூந்தளிரிடம் கிசுகிசுக்க ,

அவள் ” பரம திருப்தி ….” என்றபடி எகிறும் டெய்ஸியையும் , திணறும் கோபாலனையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்

சை ..்எந்த நேரங்கெட்டு இவள் சட்டையை பிடித்தாளோ ….அப்போதிருந்து …வரிசையாக  எல்லோரும்  சட்டயை பிடிக்கிறார்கள் …கோபாலன் நொந்தபடி ” ஹி …ஹி …அதை சட்டையை விட்டுட்டு கேளேன் டெய்ஸி டார்லிங் .உனக்கு சொல்லாமல் நான் யாருக்கு சொல்ல போகிறேன் ….? “

” அப்போ முதலிலேயே இதை எனக்கு சொல்லியிருக்கனுமே ….”

” இதோ …இப்போதுதான் …இந்த ஹோட்டலில் வைத்துத்தான் .   சொல்லலாம்னு சாப்பாடெல்லாம் ஆர்டர் கொடுத்துவிட்டு  நினைத்துக் கொண்டிருந்தேன் . அதற்குள் நீ பாத்ரூம் போய்விட்டாய் .நீ வருவாயென்று காத்திருந்தால் பூந்தளிர் புயல் போல் வந்து நிற்கிறாள் ….”

” உங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு மாதம் ஆயிடுச்சுல்ல டெய்ஸி .ஏங்க அந்த சம்பவம. நடந்து எத்தனை நாளிருக்கும் …? ” பூந்தளிர் கணவனையும் தனபுறம் இழுத்தாள் .




வேண்டான்டா …சொல்லாதடா ….கோபாலனின் பார்வை கெஞ்சலை மீறி குருபரன் விரல் விட்டு எண்ண ஆரம்பித்தான் .”  ஒன்று …இரண்டு … ஐந்து ….ஆறு மாதமிருக்கும் டெய்ஸி .அதாவது உங்கள் படிப்பு முடிந்து , நீங்கள் தஞ்சாவூர் போய் திருமணம் முடியாமல் திரும்பி வந்து சென்னையில் இருந்தீர்களே ….அப்போது இந்த தடியன் ஊருக்குள்தான் சுற்றிக் கொண்டிருந்தான் ….அப்போதுதான் என்னிடம் இப்படி சொன்னான் ….” நூல் பிடித்தாற் போல் கணக்கை ஒப்படைத்தான் .

” டேய் நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன் …ஏன்டா என்னை இப்படி மாட்டி விடுற …? ” கோபாலன் அழுது விடுவான் போலானான்.

” டெய்ஸிம்மா நாம் பேசலாம்டா .நீ முதலில் இந்த கையை எடுத்து விட்டியானால் ….அதோ அங்கே ஹோட்டலில் பாத்திரம் கழுவும் பெண்கள் இரண்டு பேர் நம்மை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .அவர்களை பார்த்தால் அடுத்து என் சட்டையை பிடிக்க வாருவார்கள் போலுள்ளது .பெண்களெல்லாருமே இவன் சட்டையை பிடித்து இழுக்கலாமென்று நினைத்து விட்டார்களோ என்னவோ …? நான். உன் புருசனில்லையா …? எனக்கொரு அவமானமென்றால் அது உனக்குமில்லையா …? ” கஷ்டப்பட்டு மூச்சை பிடித்து வசனம் பேசி டெய்ஸியை மலையிறங்க வைத்தான் .

அரை மனதுடன் அவன் சட்டையை விட்டவள் ” ம் …சொல்லுங்க ….” என்றாள் .

” அன்னைக்கு குருபரன் என்னிடம் கேட்ட போது நான் அவர்கள் வயல்காட்டுக்குள் நடந்து வந்து கொண்டிருந்தேன் .அவன் அப்போது தோளில் மண்வெட்டி வைத்திருந்தானா …? அதொடு கூப்பிடும் தூரத்தில்தான் அவன் அப்பா , அண்ணனெல்லாம் இருந்தார்கள் .தடித்தடியாய் நாலைந்து பண்ணையாட்கள் வேறு இருந்தார்பள் .அப்பொது போய் நான் அவனிடம் …என் கதையை …நான் காதலித்தது வேறு பெண் , கல்யாணம் முடிக்க உன் முன்னால்   கூட்டிப் போனது வேறு பெண்ணுன்னு சொல்ல முடியுமா …? அப்படியே இளநீர் சீவுற மாதிரி சீவிட மாட்டானா …? அதுதான் முதல்ல நான் சொன்ன பொய்யையே தொடர வேண்டியதாயிடுச்சு ….”

” நீ பொய்யே சொன்னாலும் அன்னைக்கு உன் தலையை சீவனும்னுதான் எனக்கு தோணுச்சு ….” குருபரன் பூந்தளிருக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்க , அவள் அவன் பேச்சு காதில் விழாத பாவனை காட்டியபடி டெய்ஸியை பார்த்தாள் .அவள் திரும்பவும் தன் கணவன் மீது காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் .

” ஓ…அப்படியாங்க . பாவம் அப்போது நீங்களும்தான் என்ன செய்வீர்கள் ….? ” என்று பரிதாபம் காட்டி குழைந்து கொண்டிருந்தாள் .பூந்தளிர் நிஜம்மாகவே தலையிலடித்துக் கொண்டாள் .என்ன பெண்ணிவள் …இப்படி பொய் சொல்லி  புருசனிடம் இந்த மாதிரி குழைகிறாளே …

” எல்லா பெண்களும்  உன்னை போலவே இருக்கமாட்டார்கள் தளிர் .திமிரா …தெனாவட்டா ….” குருபரனின் பேச்சில் அவனை முறைத்தவள் விடு விடுவென ஹோட்டலுக்குள் திரும்பி முன்பு அமர்ந்திருந்த மேசையில் அமர்ந்தாள் .எதிரே வந்து அமர்ந்த குருபரனிடம் ” திமிர் பிடித்தவளா நான் …? ” கோபமாக கேட்டாள் .

” நிறைய …    உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்  வரை திமிர் உனக்கு …” தயங்காமல் சொன்னவன் பூந்தளிர் விழியில் பொறி பறக்க அந்த மேசையை ஆராயும் பார்வை பார்க்க ஆரம்பிக்க சட்டென தண்ணீர் ஜக்கை தன்புறம் கைப்பற்றி வைத்துக்கொண்டு  ” இதுதானே …வேண்டாம் .பொது இடத்தில் வைத்து தலையில் தண்ணீர் ஊற்றினாயானால் ,நான் சொன்ன மாதிரிதானே எல்லோரும் உன்னை நினைப்பார்கள் .சிலர் உனக்கு கொஞ்சம் ….” என்றவன் நிறுத்தி தனது நெற்றியருகே ஒற்றை விரலால் சுழட்டி ” இப்படி   கூட நினைப்பார்கள் ” எனவும் பூந்தளிர் பொங்கிய கோபத்தில் மேசையை இரண்டு கைகளாலும் தட்டென தட்டினாள் .

” நான் …லூசா …? ” இதற்கு பதில் குருபரன் சொல்ல வேண்டியதிருக்கவில்லை .பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த இரு ஆண்கள் அப்படி ஒரு பாவனையோடுதான் பூந்தளிரை பார்த்துக் கொண்டிருந்தனர் .அதில் ஒருவன் குருபரனை வேறு பரிதாப பார்வை பார்த்து வைத்தான் .பற்களை நறநறத்த பூந்தளிர் வந்த சாப்பாடை சர்ரென தட்டோடு தள்ளிவிட்டு எழுந்து ஹோட்டலை விட்டு வெளியேறினாள் .

” ஐயோ பாவம் .உங்கள் மனைவியா சார் …? எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறார்கள் …? என்ன ட்ரீட்மென்ட் எடுக்கிறீர்கள் …? ” என்ற பச்சாதாப வார்த்தைகள் பின்னால் கேட்க , பூந்தளிரின் கோப டெசிபல்கள் கூடிக்கொண்டே போனது .

பின்னால் வந்து ஜீப்பில் ஏறிய குருபரனை இழுத்து ஸ்டியரிங் மேல் கவிழ்த்தவள் அவன் முதுகை குத்த தொடங்கினாள் .” நான் திமிரா …நான் லூசா …? “

” ஆ …ஐயோ வலிக்குது தளிர் விட்டு விடு ….” வலி போல் கத்தியவனின் குரலில் இருந்த பாவனை முகத்தில் இல்லை . அவனது முகமும் , உடலும் ஏதோவொரு சொர்க்கலோக மயக்கத்தை காட்டிக்கொண்டிருக்க , எதிர்பற்றதோர் விடுதலுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தபடி குனிந்து கொண்டருந்தான் .ஒரு நமிடத்தில் அதனை உணர்ந்து கொண்ட பூந்தளிர் சட்டென தனது குத்துக்களை நிறுத்திக் கொள்ள முன்புறம் சரிந்திருந்தபடி அவளை நிமிர்ந்து பார்த்து கண் சிமிட்டினான் .” அடிக்கவில்லை …? “

சை …இவனை போய் தொட்டு அடித்தேனே …” பொறுக்கி ….” முணுமுணுத்தாள் .

” ம் …எந்த பொறுக்கி …இப்படி பொண்டாட்டியை பக்கத்தில் வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கிறானாம் …? ” தாபம் தெறித்தது அ வன் கேள்வியில் .

” போகலாம் ….” பூந்தளிர் வெளிப்புறம்   தனது தீவிர வேடிக்கையை ஆரம்பித்திருந்தாள் .

” கோபாலன்  விசயம் என்னிடம் ஏன் முதலிலேயே சொல்லவில்லை ..? “




” அவன் விசயம் நம் இருவருக்கிடையே இனியொரு முறை வர வேண்டாமென நினைத்தேன் .நீ இருக்கும் மனக்குழப்பத்தில் அவன் விசயம் உன்னிடம் பேச வந்தால் , என்னை பற்றிய சந்தேகத்தை தெளிந்து கொள்ளத்தானே அவனை போய் பார்த்தாய் …என கேட்டாலும் கேட்பாய் …”

” கேட்டாலும் என்ன ….அப்படித்தான் நினைக்கிறேன் .என் கேரக்டரின் சுத்தத்தை தெளிவு படுத்திக் கொள்ளத்தானே கோபாலனை போய் பார்த்தீர்கள் …? ” இரக்கமின்றி கேட்டாள் .

முகம் முழுவதும் சிவக்க பொங்கிய கோபம் துடித்த மீசையில் தெரிய , சட் …சட்டென கியரை டாப்புக்கு மாற்றி ஜீப்பை பறக்கவிட்டான் குருபரன் .




What’s your Reaction?
+1
25
+1
25
+1
1
+1
6
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!