karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள் -22

22

” இன்னைக்கு மதினி கூட படுக்கலையா …? ” குருபரன் கேட்டான் .

” இல்லை ….” தனது வழக்கமான சோபாவில் படுத்துக்கொண்டாள் பூந்தளிர் .

” ஏன் …? நீதானே உன் அக்காவை பாதுகாப்பவள் மாதிரி அவுங்க கூடவே சுத்திட்டிருந்த …? ” லேசான கேலி அவன் குரலில. .

” ம்ப்ச் …அவ்வளவு பயம் தேவையில்லைன்னு தோணுச்சு …அதான் ….”

” ம் …” என்றபடி கட்டிலில் படுத்தவன் சிறிது நேரம் கழித்து….

” தளிர் ..திடீரென்று உனக்கு ஏன் அப்படி தோணுச்சு …? ” என்றான் .

பூந்தளிர் தடுமாறினாள் . ” அ …அது வந்து …அ…அவுங்க …ரெண்டு …பேரும் …வந்து …இ…இல்லை …அவுங்களை தனியாக விடலாம்னு ….அப்போ சமாதானமாயிடுவாங்கன்னு ….” எந்த வார்த்தைகளை போட்டு எப்படி பதில் சொல்ல …திணறியபடி பார்த்தவள் திடுக்கிட்டாள் .இவன் இப்போது எதற்கு இங்கு வந்து நிறகிறான் …?

குருபரன் கட்டிலிலிருந்து எழுந்து வந்து அவள் சோபாவினருகில் நின்றபடி விடி விளக்கின் மஞ்சள் ஒளியில் திணறும் அவள் முகத்தை பார்த்தபடி நின்றான் .பூந்தளிருக்கு சுத்தமாக பேச நினைத்தது அத்தனையும் மறந்து போனது .விடிவிளக்கின் சிக்கன ஒளியில் ஒரு பக்கம் மஞ்சளாகவும் , ஒரு பக்கம் கருமையாகவும் தெரிந்த அவன் முகத்தை பார்த்தபடி அப்படியே படுத்திருந்தாள் .




” தூங்கிட்டியா ….உன்கிட்டதான் கேட்கிறேன. ….” விரல்களை அவள் முகத்தின் முன் சொடுக்கினான் .

” இ…இல்லை …ஒரு வேளை நைட் அவுங்க இரண்டு பேரும் தனியாக இருக்க …பேச… நினைக்கலாம்னு ….” பூந்தளிர் பேசிக்கொண்டிருக்கும் போதே குருபரன் ஙேகமாக அவர்கள் அறைக்கதவை நோக்கி நடந்தான் .லேசாக அறைக்கதவை திறந்தவன் தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்தான் . பின் திரும்பி பூந்தளிரை கை அசைத்து கூப்பிட்டான் .பூந்தளிர்  எழுந்து போனாள் .அவள் தோள்களில் கைகளை போட்டு தன்னருகில் இழுத்துக் கொண்டவன் ” மெல்ல எட்டிப் பாரு …” அவள் காதுமடல்கள் சிலிர்க்க கிசுகிசுத்தான் .

தன் காதின் குறுகுறுப்பை கைகளால் தேய்த்தபடி எட்டிப் பார்த்தாள் .” அங்கே பார் .அண்ணன் வெளியேதான் படுத்திட்டிருக்கிறார் ….”

கதிர்வேலன் எப்போதும் போல் அவர்கள் அறை வாசலில் மடாக்கட்டிலை போட்டு படுத்திருந்தான் . பூந்தளிர் குழப்பத்துடன் உள்ளே வந்தாள் .நேற்று அவன் பொன்னியை பார்த்த பார்வைக்கு இன்று இப்படி வெளியில் படுப்பானென நினைக்கவில்லை.

திரும்ப போய் சோபாவில் அமர்ந்தவள் குருபரனை நிமிர்ந்து பார்த்தாள் .” ஏன் …? ” ஏதோ அவனுக்கு விடை தெரிந்தாற் போல் கேட்டாள் .குருபரன் பெருமூச்சுடன் அவளை படுத்துக் கொள்ளுமாறு சைகை செய்துவிட்டு அறை ஜன்னலருகே போய் அவளுக்கு முதுகை காண்பித்தபடி  நின்று வெளியே வெறித்து பார்க்க துவங்கினான் .

”  நீ அன்று சொன்ன போதே நான் கவனித்திருக்கனும் தளிர் .அண்ணனுக்கும் , மதினிக்கும் இந்த பிரச்சனை ரொம்ப நாட்களாக இருக்கிறது என்று நினைக்கறேன் …”

” என்ன பிரச்சனை …? “

” தெரியலை …ஏதோ பிரச்சினை இருக்கிறது .அது ….” தயங்கி வெளியே இருளை பார்த்தபடி நின்றான் .

அவன் எதையோ சொல்ல நினைத்து தயங்குவது பூந்தளிருக்கு தெரிந்த்து .அவனருகே சென்று ஆறுதல் கூறலாமென்று எழுந்தவளை ” வேண்டாம் தளிர் .நீ அங்கேயே இரு .நான் …எனக்கு …என்னை நானே கொஞ்சம் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன் ….” விரைத்திருந்த அவனது முதுகுபுறத்தை கவலையாக பார்த்தாள் பூந்தளிர் .அவளை அருகில் அனுமதிக்காத  அளவு என்ன பிரச்சினை …?

” அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து மதினி இந்த வீட்டிற்கு வரும்போது எனக்கு பதினோரு வயது .சின்னப்பையன்தான் .என்னை விட இரண்டு வயது மூத்த தம்பி ஒருவன் மதினிக்கு உண்டு . உன்னை பார்த்தால் என் தம்பி நனைவு வருகிறதென அவர்கள் கூறியிருக்கிறார்கள் .தம்பி …தம்பியென்றுதான் ஆசையாக அழைப்பார்கள் .அண்ணனும் , மதினியுமாக தனியாக எங்கும் வெளியில் செல்லும் போது கூட என்னையும் கூட்டிக் கொண்டுதான் போவார்கள் .எனக்கு பிடித்த சமையல் , எனக்கு தேவையான உடைகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள் .அப்போது அம்மாவிற்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்த்து . சின்ன ஆபரேசன் ஒன்று அம்மாவிற்கு செய்திருந்தோம் .அதனால் அம்மா ஓய்வில் இருக்க , மதினி எனக்கு இன்னோரு அம்மாவாக மாறி என்னை கவனத்துக் கொண்டார்கள் .அம்மா குணமாகி எழுந்துவிட்டார்கள் .முருகேசன் அண்ணனுக்கும் திருமணம் ஆகிவிட்டது .அப்போது வரை பொன்னி மதனிக்கு குழந்தைகள் இல்லை ….” குருபரன் சிறிது நிறுத்தினான் .




இன்னமும் அவன் முகம் சன்னல்வழியாக வெளிப்புறம் திரும்பித்தான் இருந்த்து .எழுந்து போய் அவனை பின்புறமாக அணைத்து நின்று ஆறுதலளிக்க பூந்தளிர் நினைத்தாலும் , இதோ இப்படி பிடிவாதமாக   தனிமையில் தன் துயரை கொண்டாடுபவனை எப்படி கையாள்வதென தெரியாமல் , அவன் விருப்பம் போலவே சோபாவில் படுத்தபடியே ” குழந்தை இல்லை என்பது உங்கள் அண்ணனை மிகவும் பாதித்ததோ ்..? ” மேலே பேச கணவனை தூண்டினாள் .

” நான் முன்பே உன்னிடம் சொல்லியிருக்கிறேன் பூந்தளிர் .அண்ணன் ஒரு மிகச் சிறந்த கணவர் .எனக்கு தெரியும் ்நிறைய தடவை அவர்கள் அன்பை நான் கவனித்திருக்கிறேன் .சிலசமயங்களில் வியந்திருக்கிறேன் .இப்போது…இந்த இக்கட்டான நிலையிலிருந்து  மதினியை  அரண் போல் அன்புசெய்து மீட்டார் .இன்னொரு திருமணம் என பேசிய உறவுகளை விழியாலேயே சுட்டார் .என் மனைவி , என் குடும்பம் என உரிமை பேசினார் .அவரது தீச்சொற்களால் அவரிடமிருந்து தள்ளி நின்ற உறவினர்கள் விச சொற்களை மதினி மேல் வீசினர் .இப்போது அனுராதா மதினியும் குழந்தை உண்டாகி விட , பொன்னி மதினியின் நிலைமை மேலும் பரிதாபமானது .அந்த நேரத்தில்தான் ஆண்பிள்ளைக்கு எதற்கு மருத்துவ பரிசோதனை என்ற சொந்த பந்தங்களின் கேலி சொற்களை மீறி அண்ணனும் , அண்ணியுடன் சேர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் ்இருவருமாக தொடர் சிகிச்சையில் இருந்த்தன் பயனாக மதினி குழந்தை உண்டானார் . கீர்த்தனா பிறந்தாள் .எல்லாம் நல்லபடியாகவே நடந்த்து ்…”

” இப்போது இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை இருக்ககூடும் ….? ” பூந்தளிர் மனதில் எழுந்த கேள்வியை கேட்டாள் .குருபரன் பதிலின்றி வெளியே பார்த்தபடி நின்றான் ்பின் …

” எனக்கு தெரிந்து இருவருக்குள்ளும் எந்த பிரச்சினையும் கிடையாது . ஒருவேளை அன்று உன்னிடம் யாரோ …ஏதோ …சொன்னார்களென சொன்னாயே ….    எனக்கும்….அண்ணிக்கும்
….என்று …அ…அப்படி யாராவது …” பேச்சை பாதியில் நிறுத்தினான் .அவன் மனம் படும் பாடு பூந்தளிருக்கு புரிந்த்து .

” இங்கே வாங்க ….” படுத்தபடியே அவனை அழைத்தாள் .எட்டி சோபாவின்  ஓரமாக கிடந்த சிறிய ஸ்டூலை இழுத்து போட்டு அதில் அவனை அமருமாறு சைகை செய்தாள் . அவன் அமர்ந்த்தும் அவன்  கைகளை சேர்த்து எடுத்து தன் கைகளுக்குள் வைத்து பிடித்து கொண்டாள் . ” இப்போ சொல்லுங்க ….”

” உன்னிடம் கூட யாரோ எங்களை பற்றி தவறாக சொன்னார்கள் என்றாயே தளிர் .அது போல் அண்ணனிடமும் யாரோ …உன்னிடம் சொன்ன ஆளே கூட …ஏதாவது சொல்லி …அண்ணனும் அதனை நம்பி …” குருபரன் பேசிக் கொண்டிருக்கும்போதே படுத்தபடியே எட்டி அவன் தலையில்நறுக்கென  கொட்டினாள் .அவன் திகைத்து தலையை தடவயபடி அவளை பார்க்க , அப்படியே அவன் தலையை இழுத்து தன் வயிற்றில் பொதித்துக் கொண்டாள் .

” உளறக்கூடாது ….” அன்னையின் பரிவும் , மனைவியின் அன்பும் கலந்து அதட்டினாள் . அந்த ஒற்றை வார்த்தை ஆறுதல் குருபரனுக்கு போதுமானதாக இருந்த்து . அவ்வளவு நேரமாக என்னை நானே சமாளிப்பேனென ஆணாக உயர்ந்து நின்று கொண்டிருந்தவன் இந்த சிறு செய்கையில் துவண்டான் . சரிந்து அவள் வயிற்றில் முகம் பதித்து தன் துயர் அடக்கினான் .அதன்பிறகு அவர்கள் இருவரிடையேயும் பேச்சில்லை . இந்த சிறு வருடலே ஒருவருக்கொருவர் ஆறுதலாக இரவு முழுவதும் சிறதும் விலக பயந்து அதே நிலையிலேயே கழித்தனர் .

———————–




” நேற்று மச்சான் உங்களிடம் என்ன சொன்னாருக்கா ….? ” பொன்னி பதிலின்றி அம்மியில் வத்தலை நைக்க தொடங்கினாள் .

” உங்க நைட்டி மச்சானுக்கு ரொம்ப பிடிச்சிருந்த்துன்னு நினைக்கிறேன் . அதைப் பற்றி என்ன சொன்னார்னு கேட்டேன் ….? “

” நான் நேற்று நைட்டி போட்டுக்கலை ….” மசாலாவை வழிக்க தொடங்கினாள் .

” ஏன்கா….நைட் அது ரொம்ப ப்ரீயாக இருக்கும் .நீங்க போட்டு பாருங்களேன் ….”

” வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு .வடகம் போட ஆரம்பிக்கனும் . நாளைக்கு காலையிலேயே கிண்ட ஆரம்பிக்கனும் .உனக்கு என்னென்ன வடகம் செய்ய தெரியும் …? ” சம்பந்தமில்லாமல் பேசினாள் .

” நேற்றும் மச்சான் வெளியிலதான் படுத்தாங்க போல …? ” கைகளை கட்டி நின்றபடி தன்னை துருவுபது போல் பார்த்து கேட்ட பூந்தளிரை பொன்னி எளிதாக அலட்சியப்படுத்தினாள் .

” எனக்கு நிறைய வேலை இருக்கு. நீயும் பள்ளிக்கூடம் போகனுமில்லையா …? முடிந்தால் எனக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணு .இல்லைன்னா நொச நொசன்னு பேசாமல் இடத்தை காலி பண்ணு ….” உறுதியாக பேசிவிட்டு கறிவேப்பிலை இலையை உருவ ஆரம்பித்தாள் .

——————–

” ம்ஹூம் …என்னால் முடியலை .உங்க மதினி வாயை திறக்க மாட்டேங்கிறாங்க ….” தோல்வியுடன் கன்னத்தில் கை தாங்கி அமர்ந்திருந்தவளை புன்னகையுடன் பார்த்தான் குருபரன் .

” இது எதிர்பார்த்ததுதான் .இதற்கு இவ்வளவு சோகம் வேண்டாம் .விடு நான் பார்த்துக்கிறேன்….” கன்னம் தாங்கியிருந்த அவள் கைகளை விடுவித்தான் .

” நீங்க என்ன பண்ண போறீங்க …? “

” பேசத்தான் போகிறேன் ….அண்ணனிடம் …”

” அவர் மட்டும் ஒழுங்காக பேசுவாராக்கும் …? ” கதிர்வேலன் அன்று பேசிய பேச்சுக்களை நினைவுபடுத்தி முகம் சுளித்தாள் .

” ம் …கஷ்டம்தான் .அவர் போக்கில் போய்தான் பிடிக்கனும் .நீ கிளம்பு , உன்னை ஸ்கூலில் விட்டுட்டு போறேன் ….”




” உங்கள் அண்ணனிடம் கொஞ்சம் பார்த்து பேசுங்க …” ஸ்கூலில் இறங்கிக் கொண்டு கவலையாய் சொன்னவளின் கன்னத்தை புன்னகையுடன் தட்டி விட்டு போனான் .கதிர்வேலனுக்கு இருக்கிற கோபத்திற்கு கை நீட்டிவிடுவானோ என்ற பயம் பூந்தளிருக்கு .

அன்று இரவு பத்து மணி வரை அண்ணனும் , தம்பியும் வீட்டிற்கு வரவில்லை .

” அவர்கள் தோப்பில் வெட்டிப்போட்ட காய்களை சரிபார்த்துட்டு வர்றேன்னாங்க ….” பொன்னுரங்கம் சொன்னது எட்டு மணிக்கு .மணி பதினொன்றை நெருங்க பூந்தளிர் கொஞ்சம் பயத்துடன் குருபரனுக்கு போன் செய்தாள் .அவன் கட் செய்தான் .இதற்கு முன்பும் இப்படித்தான் இரண்டு முறை கட் பண்ணினான் .ஆன் செய்து இரண்டு வார்த்தை பேசுவதற்கென்ன ….வரட்டும் வச்சிக்கிறேன் ….தூக்கம் பிடிக்காமல் அறையினுள்ளேயே நடந்தாள் பூந்தளிர் .

வெளியே ஜீப் நிற்கும் சத்தம் கேட்க , வேகமாக ஓடிப்போய் அவர்கள் தட்டும் முன்பே கதவை திறந்தாள் . ஜீப்பிலிருந்து தடுமாறியபடி இறங்கி நின்ற கதிர்வேலனை பார்த்து அதிர்ந்தாள் .இவன் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறான் ….?

ஜீப்பின் ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கி வந்த குருபரன் அண்ணனை தாங்கிக் கொண்டான் .பார்த்துக் கொண்டு நின்றவளை ” கதவை நன்றாக திற …” என்றான் .

உள்ளே அண்ணன் வழக்கமாக படுக்கும் மடாக்கட்டிலில் அவனை படுக்க வைத்தான் .தங்கள் அறைவாசலில் நின்று பார்த்தபடி இருந்த பூந்தளிரிடம் ” உள்ளே வா ….” என்றுவிட்டு அறையினுள் நடந்தான் .அறைவாசலில் அவன் தன்னை கடக்கும்போது வித்தியாசத்தை உணர்ந்த பூந்தளிர் சட்டென கைகளை நீட்டி அவன் சட்டைக் காலரை பிடித்து தன் பக்கம் .  இழுத்தாள் .

” குடிச்சிருக்கீங்களா …? ” கோபமாக கேட்டாள் .

” ஆமாம் …விடு ….” அவளை உதற முனைந்த குருபரனிடம் தடுமாற்றம் தெரிந்த்து .

” எவ்வளவு தைரியம் …என்னவோ பிரச்சினை ….ஏதோ பேசப்போகிறேன்னு சொல்லிட்டு …அண்ணனும் தம்பியுமாக சேர்ந்து குடிச்சுட்டு வந்திருக்கீங்களே …சீ வெட்கமாயில்லை …? “

” ஏய் மரியாதையாக பேசு ….” குழறிய அவன் குரலில் கோபமிருந்த்து .

” ஒரு குடும்பம் நடத்துற வீட்டுக்குள்ள குடிச்சுட்டு வந்து கூசாமல் நிக்கிற ஆம்பளைக்கு மரியாதை என்ன வேண்டியிருக்கு …? “

” வாயை மூடுடி ….” உறுமிய குருபரனின் கைகள் பூந்தளிரின் தோள்களை வெறியோடு பற்றி நசுக்கின .

” ஷ் …சை நீங்க மனுசனா …மிருகமா ….இப்படி நடுராத்திரியில் குடிச்சிட்டு வந்து நிற்கிறவனெல்லாம் ஆம்பளையே இல்லை ….” ஆத்திரத்தில் பூந்தளிர் பேசிக்கொண்டே போக , குருபரன் அவளை அருகே இழுத்து அவள் திமிற …திமிற இதழ்களை கவ்வினான் .நடப்பதில் அதிர்ந்து நின்று பின் சுதாரித்து அவனை தள்ள முயன்று முடியாமல் இறுதியாக பூந்தளிர் தொய்ந்து போய் நின்றாள் .

தன் மனதில் சேர்ந்திருந்த வெறியையெல்லாம் அவள் இதழ்களில் இறக்கி  அவளை புண்ணாக்கியவன் கொஞ்ச நேரத்திலேயே அவளது மரத்து நின்ற தன்மையை அந்த போதையிலும் உணர்ந்து அவளை விலக்கி நிறுத்தி முகம் பார்த்தான் .கண்களிலிருந்து தானாக கண்ணீர் வடிய , நம்பாத அதிர்ச்சியுடன் தன்னை பார்த்தபடி நின்றிருந்தவளை பார்க்கவும் கண்களை இறுக மூடி நின்று பற்களை கடித்து தன்னை கட்டுப்படுத்தினான் . .

” நீ …போய் …படு ….” அவளை தள்ளிவிட்டவன் தடுமாறியபடி நடந்து போய் கட்டிலில் விழுந்தான் .கொஞ்ச நேரத்தில் சோபாவிலிருந்து வந்த பூந்தளிரின் விசும்பல் சத்தங்களை செய்வதறியாது கேட்டபடி தன்னை தானே வெறுத்தபடி கண்களை மூடிக்கிடந்தான் .

——————

 




What’s your Reaction?
+1
23
+1
17
+1
2
+1
0
+1
0
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!