karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 52 ( நிறைவு)

   52

தங்கமென்ற சமாதானங்களையும் 
செல்லமென்ற கொஞ்சல்களையும் 
குண்டு மல்லிகையாய் கோர்த்து 
வாழையிலையில் பொதித்து தந்துவிட்டாய் 
இனி …
அந்தப்பக்கம் தள்ளி நின்று பட்டியலிடு 
உன் தாமதங்களுக்கான காரணங்களை 
அடி முடியெடுத்து பூச்சூட்டிக்கொள்ள வேண்டும் நான் .

” நிஜமாகத்தான் சொல்கிறீர்களா …என்னை பெற்றவளை நான் அறிந்து கொள்ளலாமா …? “




” உன்னை பெற்றவள் உன் அருகேதான் இருக்கிறாள் பேபி .நீ நிறைய முறை அவளை சந்தித்திருக்கிறாய் , பேசியிருக்கிறாய் .ஆனால் அறிந்த்தில்லை .இது இப்படியே போய்விட்ட்டுமென நினைத்தோம் .ஆனால் உன் பிடிவாதம் …ஒரு அளவுக்கு மேல் உன் ஆவலை மறுக்கும் தைரியம் எங்கள் யாருக்குமே இல்லை பேபி .அதுவும் நீ நம் நாட்டுக்காக எல்லை வரை போய் உன் உயிரை பணயம் வைத்து போராடி மீண்டு வந்திருக்கிறாய் .இப்போது நாங்கள் அனைவரும் அந்த பெருமித்த்தில் இருக்கிறோம் .இதற்கு நாங்கள் உனக்கு அளிக்கும் சரியான பரிசு இதுவாகத்தான் இருக்கும் .இறுதியாக உனது தேடல் முடிவிற்கு வருகிறது .திறந்து பார்த்து உன்னை பெற்றவளை அறிமுகம் செய்துகொள் ….”

சாத்விகா அந்த பெட்டியை மார்போடு அணைத்தபடி சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள் ்அவள் முகம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த்து .பிறகு பெட்டியோடு மெல்ல எழுந்தாள் .அடுப்படி நோக்கி நடந்தாள் .அவளை புரியாமல் வீடு அவள் பின் நடந்த்து .அடுப்படியில் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டவள் தோட்டத்திற்கு போனாள் .அங்கே புல்தரையில் அந்த பெட்டியை ஒரு முறை ஆசையாக வருடிவிட்டு வைத்தாள் .அவள் செய்யப் போவதை ஊகித்த வீட்டினர் ஆச்சரியமாக அவளை பார்த்தபடி இருக்க ,அந்த பெட்டியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்தாள் .அது எறிவதை கண் கலங்க பார்த்திருந்தாள் .

” பாப்பா …” சந்திரிகா கண்கலங்க அவளை பார்க்க …

” நான் சண்முகபாண்டியன் – சௌந்தர்யாவின் மகள் . உங்கள் மருமகள் .உங்களை கடைசி வரை அத்தை என்றுதான் அழைக்க போகிறேன் .அந்த ஒரு உறவுமுறைதான் நமக்குள்ளே தவிர வேறில்லை .என்னை பெற்றவள் …நான் சந்தித்த பெண்களில் சுகிர்தாவாகவோ , நிரஞ்சனாவாகவோ , காமினியாகவோ , டாக்டர் பிரேமலதாவின் மருமகள் புவனாவாகவோ …இன்னமும் வேறு பெண்களாகவோ இருக்கலாம் .அந்த கவலை இனி எனக்கு இல்லை .நான் சௌந்தர்யா அம்மாவுக்கு மகளாக , சந்திரிகா அத்தைக்கு மருமகளாக , கேப்டன் வீரேந்தரின் மனைவியாக எனது மீதி வாழ்நாட்களை எந்தவித உறுத்தலும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து முடிக்க போகிறேன் …”

சாத்விகா பேசி முடித்த மறுகணம் வீரேந்தர் அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டான் .ஆசையுடன் அவள் கன்னங்களில் மாறி , மாறி முத்தமிட ஆரம்பித்தான் .

வெட்கத்துடன் சாத்விகா அவனை தள்ள , சுற்றியிருந்தவர்கள் ” ஐயோ …நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் …எனக் கத்த வீரேந்தர் எந்த கவலையுமன்றி தன் மனைவியை கொஞ்சிக் கொண்டிருந்தான் .வேறு வழியின்றி பெரியவர்கள் தங்கள் மரியாதையை தாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேகமாக வீட்டிற்குள் போனார்கள் .

கார்த்திக் மட்டும் கொஞ்சம் நின்று ” கேப்டன் சார் டைவர்ஸுக்கு வக்கீலை பார்க்க வேண்டுமென்றீர்களே …” எனச் சீண்ட …

” டேய் அண்ணா …ஓடிடு , இல்லை கல்லையெடுத்து மண்டையை உடைச்சிடுவேன் …” சாத்விகா மிரட்டிய போது , வீரேந்தர் அங்கு கிடந்த கற்களை பார்வையால. ஆராய தொடங்க , கார்த்திக பாதுகாப்பாய் தனது தலையை இரு கைகளாலும் பொத்தியபடி ஓடிப் போனான் .

அன்று இரவு …

மோகப்பார்வையிடன் தன்னை நெருங்கிய கணவனை காதல் பார்வையுடன் எதிர்கொண்டாள் சாத்விகா .மூச்சு விட முடியாத அவன் முத்தங்களில் திணறியவள் ” போதும் விடுங்க , மூச்சு முட்டுது …” அவனிடமிருந்து விடுபட்டு அவசரமாக வெளிக்காற்றை சுவாசித்தாள் .

” என்னது …அதற்குள் விடச்சொல்கிறாயா …? நம் திருமணம் முடிந்து ஆறுமாதங்களாக என்னை தொடவிடாமல் அலைக்கழித்திருக்கிறாய் .இனி இந்த விசயத்தில் பதில் பேசும் உரிமையே உனக்கு கிடையாது .எல்லாம் என் இஷ்டம்தான் .நான. நினைத்த நேரத்தில் , நினைத்த இடத்தில் , நினைத்தபடியெல்லாம் உன்னை …” சொல்லிக்கொண்டே போனவனின் முதுகில் அடித்தாள் .

” கொஞ்சம் பொறுங்கள் .முதலில் நம் காதலை நாம் முடிவு செய்து கொள்வோம் …”

” கடவுளே …இப்படி ஒரு சோதனை எந்தக் கணவனுக்கும் வரக்கூடாது …” தலையில் கை வைத்திக்கொண்டு அமர்ந்துவிட்ட கணவனின் கைகளை எடுத்தவள் …

எப்போது உங்களை காதலிக்க ஆரம்பித்தேன் வீரா …? “என்றாள் .

உன் காதல் …உன் விசயம் …நீதான் சொல்லவேண்டும் …”

” ஏன் உங்களுக்கு இதில் பங்கில்லையா …? “

” இல்லையே …நான் தெளிவாக இருக்கிறேன் .அதனால் உன் குழப்பத்தில் எனக்கு பங்கில்லை …”

” ஓ…அப்போது சொல்லுங்களேன் .நீங்கள் எப்போது என்னை காதலிக்க ஆரம்பித்தீர்கள் …? “

” நீ என்னை கொல்லும் நோக்கத்துடன் என் மேல் காரை ஏற்ற வந்தாயே அப்போதிருந்து …”

” பொய் .காரால் மேலே இடிப்பவர்களிடமெல்லாம் காதல் வருமா …?

” ஆமாம். அப்போது உன் கன்னத்திலேயே நான்கு அறை கொடுக்க வேண்டுமென்றுதான் தோன்றியது .ஆனாலும் நிர்மலமான உன் குழந்தை முகம் அதை தடுத்தது ….” என்றவன் மனைவியின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான் .

” கள்ளமில்லாத பிள்ளை முகம் பேபி உனக்கு .நீ ஒவ்வொரு முறை குறும்பு செய்யும் போதும் உடனேயே உன்னை தண்டிக்க வேண்டுமென தோன்றும் .எப்படி தெரியுமா …பளபளக்கும் உன் கன்னங்களை கடிக்க வேண்டும் , படபடக்கும் உன் இதழ்களை என உதடுகளால் …”

” ஏய் …சீ …இப்படி ஒரு மோசமான நினைப்புடனா அப்போதெல்லாம் என்னுடன் பழகிக் கொண்டிருந்தீர்கள் …? “

” அதென்னவோ உன்னை பார்த்தாலே இப்படித்தான் ஏதாவது செய்ய வேண்டுமென தோன்றியது .அதனால்ந்தான் உன்னை சந்திப்பதையே தவிர்த்தேன் …”

” ப்ராடு உங்களை போய் உத்தமர் என்று பட்டம் சூட்டி என் அருகிலேயே விட்டு வைத்தருந்தார்களே , என் அப்பாவும் , அண்ணாவும் …”

” அவர்கள் உன. திருமண பேச்சை பேச , பேச தாள முடியாத தவிப்பில் எங்கே என்னை மீறி உன்னிடம் தவறாக எதுவிம் நடந்து கொள்வேனோ எனப் பயந்து அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் …”

” ம் …உங்கள் மீது காதல் எப்போது வந்த்தோ தெரியாது , ஆனால் அந்தக் காதலை நான் உணர்ந்த்து அந்த காஷ்மீரத்து பனிமலையில் .அன்று நிதின் மூட்டையை அவிழ்த்து உங்களை வெளியே தள்ளினாரே அப்போது …என் உடலிலிருந்து யாரோ உயிரை உருவி வெளியே எறிந்த்து போல் இருந்த்து ்என் உயிர்தான் அங்கே பனியில் கிடப்பது போல் தோன்றியது …”

” அந்தக் கடினமான சூழ்நிலையிலும் நீ தன்னிலை இழக்காது நம் நாட்டுக்காக துணிந்து துப்பாக்கி நீட்டினாயே பேபி .உன் தைரியத்தில் நான் பிரமித்து போனேன் .எனக்கு மிகவும் பெருமையாக இருந்த்து …”




” உங்களை கட்டி இழுத்து வந்து பனியில் போட்டிருக்கிறான் .அத்தோடு ரேகைக்காக உங்கள் விரலை வேறு பிடிக்கிறான் .அவன் வேலை முடிந்ததும் உங்களை உயிரோடு விடுவானென என்ன நிச்சயம் …? உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டுமானால் அவன் வேலை முடியக்கூடாது .அதனால்தான் லேப்டாப்பை தட்டிவிட்டு , துப்பாக்கியை நீட்டினேன் .அங்கே நாடு இரண்டாம்பட்சம்ந்தான் .என் வீராவை காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் இருந்த்து .அப்போதுதான் நான் உங்கள் மீதிருந்த காதலின் வலிமையை உணர்ந்தேன் .அந்தக் காதல்தான் அந்த இன்டர்நேசனல் தீவிரவாதியை எதிர்க்கும் வன்மையை என் மனதிற்கு கொடுத்தது …”

வீரேந்தர் பெருமிதம் பொங்க அவளை இறுக அணைத்துக்கொண்டான் .” ஆக உன் காதலை உனக்கு உணர்த்த பாகிஸ்தானிலிருந்து ஒரு தீவிரவாதி வர வேண்டியிருக்கிறது …”

” நான் என்ன செய்யட்டும் வீரா ..? எப்போதுமே உங்களை எதிர்த்துதான் ஏதாவது செய்யவேண்டுமென தோன்றிக் கொண்டேயிருக்கும் .நீங்கள் சொல்வதை கேட்க கூடாது என்ற உறுதி நெஞ்சில் இருந்து கொண்டேயிருக்கும் .இப்படியெல்லாம் தோன்றுவதால் உங்கள் மீது காதலில்லை , ஒரு அழகான ஆணிடம் இயல்பாக தோன்றும் ஒரு வகை ஈர்ப்பு என்று நினைத்தேன் …”

” அது அப்படியில்லை என நிரூபிக்க எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டிருக்காது பேபி ்ஆனால் நீதான் அதற்கான சந்தர்ப்பங்களை எனக்கு கொடுக்கவேயில்லை .பக்கத்தில் வரும்போதெல்லாம் விரட்டிக் கொண்டே இருந்தாய் ..அன்று பார்ட்டி முடிந்து வந்தோமே அந்த இரவு நீ பேசிய பேச்சுக்கு உன்னை அப்படியே …” எனத் தொடர்ந்தவனை …

” சை…என்ன இப்படி பேசுகிறீர்கள் …? ” வெட்கத்துடன் வாயை பொத்தினாள் .

” தப்புத்தான் .இன்னமும் பேசிக்கொண்டே இருப்பது தப்புத்தான் …” வேங்கையாய்   மேலே பாய்ந்த கணவனை சாத்விகாவால் தடுக்க முடியவில்லை .தடுக்க விரும்பவில்லை என்பதுதான் நிஜம் .

” ஏய் , இன்னமும் என்னை காதலிக்கவில்லைதானே நீ …? ” களைத்து படுத்திருந்த மனைவியை சீண்டினான் வீரேந்தர் .

” காதலிக்காதவனிடம்தான்  இப்படியெல்லாம் இருப்பார்களாக்கும் ..? ” சாத்விகாவின் முகம் சிவந்த்து .

” எப்படி எல்லாம் பேபி …எதை சொல்கிறாய் …ஒன்றும் புரியவில்லை …” கணவனின் அந்தரங்க சீண்டலில் சிவந்து , வழக்கம் போல் அவனை அடிக்க கையை ஓங்கி பிறகு மனம் மாறி  நிறுத்தி  அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் .

” அதென்ன பேபி இன்று அடிக்கடி ஊமையாகி விடுகிறாய் …? என்ன சொன்னாலும் , செய்தாலும் பதிலுக்கு பதில் வீம்புக்கு நிற்பாயே .இப்போது கொஞ்ச நேரம் முன்பு , திருதிருவென அந்த முழி முழித்துக் கொண்டிருந்தாய் ..உன்னிடமிருந்து ஒவ்வொன்றுக்கும் பதில் வாங்குவதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகி விட்டது .” மேலும் தன் கணவன் சீண்டலை தொடர்ந்தான் .

” வீரா …ப்ளீஸ் .பேசாதீர்கள் ்எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது …”

” பார்டா என் பொண்டாட்டிக்கு இன்னைக்கு அநியாயத்திற்கு வெட்கமாக வருகிறது …” மனைவியை தன் மேல் இழுத்து போட்டுக்கொண்டு இறுக அணைத்துக்கொண்டான் .

” சை ….உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமேயில்லை …”

” புருசன் , பொண்டாட்டிக்குள் படுக்கையில் வெட்கத்தை மட்டும் நுழைய விடக்கூடாது .அது சரி, எப்போதும் நான் வாயால் பேசுவதெற்கெல்லாம் , கையால்தானே பதில் கொடுப்பாய் …இன்றென்ன கையால் பேசுவதற்கு  கூடஉன் வாய்  பதில் சொல்ல மறுக்கிறது …? “

மனைவியின் பெண்மையை வென்ற அவன் ஆண் கர்வம் திமிருடன் பேசியது .

” நீங்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் , நான் எழுந்து ஙெளியே போய்விடுவேன் …” சாத்விகா வெட்கத்தின் தவிப்பில் உடல் முழுவதும் சிவக்க கணவனுடன் ஊடினாள் .

” ம் …போய்விடுவாயா நீ …எங்கே பார்க்கலாம் …? ” அவளை புரட்டி கீழே தள்ளி மேலே படர்ந்து     மீண்டும் ஒரு புதுக்கதையை ஆரம்பித்தான் .  சளைக்காமல ஆண்மையும் ,சலிப்பது போன்ற பாவனையில் பெண்மையும் அங்கே போராட ஆரம்பிக்க , கட்டில் போர்க்களமாக தொடங்கியது .மோகத்தின் வேகத்தை தாங்க முடியாத கட்டில் கால்கள் கிறீச்சிட தொடங்கின .

ஒரு வருடம் கழித்து ,

குன்னூர் – சண்முகபாண்டியனின் வீடு .கல்யாணக் களையில் மின்னிக் கொண்டிருந்த்து .அன்று கார்த்திக்கிற்கு திருமணம் முடிந்திருந்த்து . புது மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

” ஆரத்தி தட்டு ரெடியா …? “

சாத்விகாவை கேளு .

” பீரோ சாவியை எங்கே …? “

சாத்விகாவிடம் இருக்கும் .

” பாலும் , பழமும் தயாராக இருக்கிறதா …? “

சாத்விகாதான் தயார் செய்தாள் .

வீரேந்தர் சோபாவில் அமர்ந்து வீடு முழுவதும் பரவி படர்ந்து கொண்டிருந்த மனைவியின் பெயரை ரசித்துக்கொண்டிருந்தான் .

நல்ல நேரத்தில் உள்ளே வந்த மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க அழைக்க , ஆரத்தி தட்டுடன் வந்த சாத்விகா எட்டு மாத கர்ப்ப வயிற்றுடன் , தாய்மை பொலிந்த முகத்துடன் இருந்தாள் .

” வயிற்று பிள்ளைக்காரி பார்த்து போம்மா …” பாசமாக சொன்ன ரங்கநாயகிக்கு ” சரி பாட்டி …” என பவ்யமாக தலையசைத்து மெல்ல நடந்தாள் .

ஓரமாக மனைவியுடன் நின்றிருந்த சுகுமார் சாத்விகாவை அவன் மனைவியிடம் ” இவள் ,என் மாமா மகள் .காஷ்மீர் தீவிரவாதியையே …” என சாத்விகாவை விவரித்த வித்த்தில் கொஞ்சம் பயம் இருந்த்து .அதே பயமும் , மரியாதையும் அவர்களுருகே நின்றிருந்த சுகுமாரின் அம்மா , அப்பாவிற்கும் இருந்த்து .அவர்கள் இருவருமே சாத்விகாவை ஒரு பய பக்தி பார்வைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

சாத்விகா நிறைவான மனதுடன் அண்ணனுக்கும் , அண்ணிக்கும் ஆரத்தி எடுத்து விட்டு , அதற்கு பரிசாக அண்ணனிடமிருந்து ஒரு வைர ப்ரேஸ்லெட்டை பெற்றுக்கொண்டு அவர்களை உள்ளே அழைத்தாள் .பிறகு மணமக்களுக்கு பாலும் , பழமும் தரப்பட்டது .எல்லா வேலைகளிலும் தனது கர்ப்ப வயிற்றோடு , லேசான மூச்சிரைப்போடு சாத்விகா காட்டிய ஈடுபாடு. வீட்டினர்  அனைவருக்கும் ஆச்சரியத்தையளித்தது .நம்ம பொண்ணா இவ்வளவு அடக்கமாக   , பொறுப்பாக மாறிவிட்டாள் …எல்லோரும் வீரேந்தரை இதெல்லாம் நீ செய்த மாயம்தான் பார்வை பார்க்க , அவன் கொஞ்சம் வழிசலோடு இளித்து வைத்தான் .

தங்கை ஒரு பயங்கரவாதியை அவனது இடத்திற்கே சென்று தைரியமாக சுட்டு கொன்ற கதையை கார்த்திக் தன் மனைவி கனிகாவிடம் விவரிக்க அவள் பசு போல் சாதாரணமாக நடமாடும் சாத்ஙிகாவை பார்த்து அலட்சியமாக உதட்டை சுழித்தாள் .இவள்தான் தீவிரவாதியை சுட்டவளாக்கும் …

சுகுமார் வீரேந்தரை  அதெப்படி அவனால் சாத்விகாவுடன் பயமில்லாமல் குடும்பம் நடத்த முடிகிறது …எனப் பார்வையாலேயே கேட்டுக் கொண்டிருக்க …ம் …என் தலையெழுத்து என அவன் சலிப்பான பதில் பார்வை தந்தான் .நல்லவேளை நான் தப்பித்தேன் சுகுமார் நிம்மதி மூச்செறிந்தான் .

” கனிகா உன் நாத்தனார் பாகிஸ்தான் தீவிரவாதியையே சுட்டவளாமே …” அவள் அம்மா அவளிடம் கிசுகிசுக்க …

” அடப் போங்கம்மா …அவளை பார்த்தால் அப்படியா தெரிகிறது …ஒன்றுமறியாத பச்சை புள்ளை போல் இருக்கிறாள் .இவர்கள் எல்லோரும் சேரந்து ஏதோ பில்டப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் …” அலட்சியமாக பேசிய கனிகாவின் தோள் தட்டப்பட திரும்பி பார்த்தவள் முகம் வெளுத்தாள் .

சாத்விகா முகம் முழுவதும் நிரம்பிய புன்னகையுடன் நின்றிருந்தாள் .” ஆமாம் அண்ணி நான் இயல்பாகவே ரொம்ப சாது .என்னை பற்றி இவர்களெல்லாம் ஏதேதோ புரளியை கிளப்மி விடுகிறார்கள் .நீங்கள் நம்பாதீர்கள் .” தனது வழக்கமான குழந்தை முகத்துடன் கூறிவிட்டு உள்ளே நடந்தாள் .

கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்த கனிகா அதிர்ந்தாள் .” ஏன்டா அண்ணா , உன் பொண்டாட்டிகிட்ட என்னை பத்தி நீ சொல்லலையா …? இவளா தீவிரவாதியை கொன்னாள்னு அலட்சியமாக பேசிக்கொண்டிருக்கிறாள் .இது சரி வராது …என் புகுந்தவீட்டினர் ரொம்பவும் சொல்கிறார்களே என்று என் பிரசவத்தை டில்லியிலேயே வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் .இப்போது மறு யோசனையே கிடையாது …என் பிரசவம் இங்கே என் பிறந்த வீட்டில் தான் .நான் பிள்ளையை பெத்து எடுத்துட்டு போறதுக்குள்ள உன் பொண்டாட்டிக்கு நான் யாருன்னு காட்டிட்டுத்தான் போவேன. …” கார்த்திக்கின் சட்டையை பிடித்து உலுக்கியபடி சாத்விகா சூளுரைத்துக் கொண்டிருக்க…கனிகா கலக்கத்துடன் நின்றிருக்க …” அவள் பிள்ளை முகத்தை பார்த்து ஏமாந்தவர்கள் லிஸ்டில் நீயும் சேர்ந்து விட்டாயம்மா ….” வீரேந்தர் சோக முகத்துடன் சொன்னான் .

” என்னண்ணா இது …? ” கனிகா அழுபவள் போல் கேட்க ,

” இவள் அந்த தீவிரவாதியிடமே இப்படி தன் பச்சை பிள்ளை முகத்தை காட்டித்தான் , அவனையே பாசமழை பொழிய வைத்தாள் தெரியுமா….? ” மனைவியின் பெருமைகளை அவன் கதை கதையாய் சொல்ல ஆரம்பிக்க …




அங்கே …

சாத்விகாவின் அலம்பல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன .கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தினர் அவளது விளையாட்டுத்தனத்தை ரசித்து கொண்டிருக்க , தான் வாழ வந்த வீட்டின் சூழலை புரிந்து கொண்ட கனிகாவும் மெல்ல , மெல்ல சாத்விகாவுடன் ஒன்ற தொடங்கினாள் .முடிவில் ….

                                                                    

                                                                   – நிறைவு –

பின்குறிப்பு :

இந்தக் கதையின் ஆணிவேரே சாத்விகா தன்னை பெற்றவளை  அடையாளம் காண துடிப்பதுதான் .ஆனால் அந்த முக்கியமான விசயமே கடைசியில்    சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது .இது வாசகர்களுக்கு சிறிது ஏமாற்றமாக இருக்கலாம் . ஆனால் சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் குழந்தை , தனது வேதனை காலங்களை மறந்து புதியதோர் வாழ்வை ஏற்பதற்கு இயற்கையே அவளுக்கு துணை நிற்கும் போது , நாமும் இயற்கையை மதித்து அவள் வாழ்விலிருந்து சாத்விகாவோடு சேர்ந்து விலகிக் கொள்வதுதான் சரியானது என்று நினைக்கிறேன் . நம் நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வன்முறை அதிக சதவிகிதங்களை பிடித்துள்ளது .இந்த நிலைமை மாறவேண்டும் .மனைவி தவிர்த்து மற்ற பெண்களை …ஒரு சக மறுஷியாய் ,சக  உயிராய் பார்க்கும் பக்குவம் ஆண்களுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலோடு  துன்பமான அடித்தளமாக இருந்தாலும் , அதை இன்பமாக    நிறைவடைத்த. திருப்தியுடன் இந்த கதையை நான் முடிக்கிறேன் .

,                                                                         –

                                                                  – மிக நிறைவு –

What’s your Reaction?
+1
29
+1
21
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
lavanya
lavanya
4 years ago

super ending mam…

Priya
Priya
4 years ago

Super mem வாசிப்பவர்களுக்கு ம் மிகவும் நிறைவு நன்றி

2
2
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!