karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 48

    48

கண்ணாமூச்சி காட்டிகொண்டிருந்த காதல்

கை சேரும் தருணமொன்றில்

தவறுதலாக

கண்ணோரம் வியர்க்க தொடங்கியது …




முன்தினம் சாத்விகாவை சமாதானப்படுத்தும் அவசரத்தில் சக்கரவர்த்தியும் ,வீரேந்தரும் லேப்டாப்பை ….வீரேந்தர் அறையிலேயே விட்டு வந்த்தை பார்த்திருந்தாள் . இப்போது அதனை எடுத்து வருவது அவளுக்கு கடினமாக தோன்றவில்லை .ஆனால் அந்த அதிகாலையில் வாசலில் இருக்கும் செக்யூரிட்டியை தாண்டி போவதுதான் அவளுக்கு கடினமாக தோன்றியது .

ஆனால் செக்யூரிட்டி அவளது தோழிக்கு உடம்பு சரியில்லையென்ற அரைகுறை காரணத்தை எளிதாக நம்பி கேட்டை திறந்து விட்டுவிட்டான் .ஆச்சரியப்பட்டபடி வேகமாக நடந்த சாத்விகா அந்த தெருவை தாண்டியதுமே ஒரு கார் வந து அவளை ஏற்றிக்கொண்டது .காரை ஓட்டி வந்தவனை கண்டதும் ஆச்சரியமானாள் சாத்விகா . அவன் மாலிக் .

” நீங்களா …? “

” என் அனபு சகோதரியை எங்கள் நாட்டிற்கு அழைத்து செல்ல நானே வந்துவிட்டேன் …” புன்னகைத்தான் .

” இப்போது எங்கே போகிறோம் …? “

” ஏர்போர்ட் .அங்கிருந்து காஷ்மீருக்கு இரண்டு மணிக்கு ப்ளைட் .அங்கிருந்து நமது நாட்டிற்கு …”

” உங்கள் நாட்டிற்கு …” திருத்தினாள் .

” சரி …சரி …எங்கள் நாடு .உங்கள் நாடு இந்தியாவாகவே இருந்து விட்டு போகட்டும் .லேப்டாப் கொண்டு வந்திருக்கிறீர்கள் தானே ….”

” ம் …” தன் கையிலிருந்த பேக்கை இறுக்கி இடுக்கிக் கொண்டாள் .

” பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் ….”

” வஹீப்பும் , சாந்தினியும் பத்திரமாக வந்துவிட்டார்களா …? “

” நேற்றே வந்துவிட்டார்கள் .நாம் போகும் போது நமக்காக காத்திருப்பார்கள் “

” முதலில் அவர்கள் திருமணத்தை முடித்து விட வேண்டும் …”

” ம் …பார்க்கலாம் .சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கலாம் …”

” அதுதான் நீங்கள் கேட்டபடி லேப்டாப்பை கொண்டு வந்து விட்டேனே .இனி இதை வைத்து இந்த திருமணத்தை தடுக்க நினைக்கும் என மாமனாரையும் , கணவரையும் நறுத்திவிடலாம் .வேறு என்ன தடங்கல் அவர்கள் திருமணத்திற்கு வர போகிறது …? “

” ஆமாம் ஒன்றுமில்லைதான் .ஆனால் நாம் முதலில் எதற்கும் பத்திரமாக பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விடுவோம் .பிறகு திருமண விசயம் பேசலாம் …”

சாத்விகா மௌனமானாள் .

” நீங்கள் வரப்போகும் தகவலை ஆயா ரேணுகா தேவிக்கு சொல்லி விட்டோம் .அவர்கள் ஆவலாக உங்களிக்காக காத்திருக்கிறார்கள் …”

” ம் …” என்ற சாத்விகாவின் உடலில் சிலிர்ப்பு ஓடியது .

ப்ளைட் ஏறி அவர்கள் காஷ்மீரில் இறங்கியதுமே ,ஜீப்பில்  அவர்களுடன் வஹீப்பும் , சாந்தினியும் சேர்ந்து கொண்டார்கள் .முக்காடிட்ட வடநாட்டு பெண்களின் பாரம்பரிய உடையில் எப்போதும் இருக்கும் சாந்தினி இன்று பேன்ட் , சட்டையில் இருந்தாள் .

” இதென்ன சாந்தினி உன் உடை வித்தியாசமாக இருக்கிறதே …? “

” அது …அங்கே குளிருமே திதீ .அதுதான் இது போன்ற உடை …” 
சாந்தினி சொன்னது போலவே இங்கே இறங்கியதிலிருந்தே குளிர் ஊசி போல் உடலை ஊடுறுவிக் கொண்டுதான் இருந்த்து .தன் பேக்கிலிருந்த கனத்த ஸ்வட்டரை எடுத்து சிடிதாரின் மேல் அணிந்து கொண்டாள் சாத்விகா .

இலவம் பஞ்சுகளை பிய்த்து பறக்க விட்டது போல் வெண்மையாக பனி பொழிந்து கிடக்கும் இடத்தை அவர்கள் கார் நெருங்கிய போது , மிகவும் அதிகமாகவே குளிர ஆரம்பித்திருந்த்து .சாத்விகாவின் கடிகாரம் அதிகாலை மூன்றரை மணி காட்டியது .

காலில் அணிந்திருந்த ஷூவையும் தாண்டி குளிர் பாதங்கள் வழியாக உச்சந்தலை வரை ஊடுறுவியது .கால்களுக்கடியில் பனி நறநறத்தது .ஜீப்பிலிருந்து இறங்கி சுற்றிலும் பார்த்த சாத்விகாவின் நெஞ்சில் பயக்குளிர் ஊடுறுவியது .தவறான முடிவுக்கு வந்துவிட்டோமோ …? சில்லிட்டிருந்த நகங்களை கடிக்க தொடங்கினாள் .

” டென்சன் வேண்டாம் சிஸ்டர் .இதோ இப்போது பாதுகாப்பான இடத்திற்கு போய்விடலாம் …அதோ அங்கே பாருங்கள்….” சுட்டிக் காட்டினான் .

அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு ஒரு பத்தடி தொலைவில் இரும்பி வேலி ஒன்று நெடுக வரிசையாக போனது .” இதுதான் எல்லை .நம் இரு நாட்டு எல்லை .அந்த வேலிக்கு இந்தப் பக்கம் இந்தியா .அந்தப் பக்கம் பாகிஸ்தான் .நாம் வேலியை தாண்டி ஒரு கிலோமீட்டர் வரை நடந்துவிட்டால் போதும் .நமக்கான உதவி வந்துவிடும் ….”




சாத்விகா இருளும் , பனியும் சூழ்ந்திருந்த அந்த இடத்தை தடதடக்கும் இதயத்தோடு பார்த்தாள் .ஒரு சிறிய வேலிதான் .இந்தப்பக்கம் ஒரு நாடு .அந்தப் பக்கம் வேறு நாடு  .இங்கே பொழியும் பனிதான் அந்தப் பக்கமும் பொழிகிறது .ஆனால் அங்கே பாகிஸ்தானிய மண் , இங்கே இந்திய மண் எனக் கூறிக் கொள்கிறோம் .இயற்கை எந்த இடத்திற்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை ்ஆனால் நாம் …மனிதர்கள்தான் இயற்கைய கூட பிரித்து பார்க்கிறோம் .என்ன விந்தை …பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டாள் .

“அந்த லேப்டாப்பை கொடுங்கள் .” கையை நீட்டினான் மாலிக் .சாந்தினியும் , வஹீப்பும் அவளுக்கு இருபுறமும் நின்று கொண்டு அவளை உறுத்தபடி இருந்தனர் .

சாத்விகா யோசித்தாள் .” யோசிக்காதீர்கள் சிஸ்டர் .எங்களுக்கு தேவையான விபரங்களை அதில் நாங்கள் சரி பார்க்க வேண்டாமா ..? “

பேக்கை திறந்து லேப்டாப்பை எடுத்து நீட்டினாள் .அதனைவாங்கி  ஜீப்பின் மேல் வைத்து ஆன் செய்தவன் ” பாஸ்வேர்ட் சொல்லுங்கள் சிஸ்டர் ” என்க சாத்விகா திகைத்தாள் .

” பாஸ்வேர்டா …அதெல்லாம் எனக்கு தெரியாது …”

” தெரியாதா …பிறகு எப்படி லேப்டாப்பை ஓபன் பண்ணுவது …? “

” நீங்கள் லேப்டாப் கேட்டீர்கள் .கொண்டுவந்து கொடுத்தேன் .பாஸ்வேர்ட் எனக்கு எப்படி தெரியும் …? “

” உன் புருசனிடம் நீ பாஸ்வேர்ட் கேட்கவில்லையா …? ” சாந்தினிதான் .இவ்வளவு கடூரமான குரல் அவளுக்கு இருக்குமென சாத்விகா எதிர்பார்க்கவில்லை .

” என்ன சாந்தினி உன் பேச்சே மாறுகிறது …? ” கோபமாக கேட்டாள் .

” லேப்டாப்பிற்கு பாஸ்வேர்ட் இருக்குமென்று தெரியாதா உனக்கு …அது கூட தெரியாத முட்டாளா நீ …பாஸ்வேர்டையும் சேர்த்து தெரிந்து கொண்டு வர வேண்டாமா …? “

” மாலிக், இவள் பேச்சு சரியில்லை .நான் இவளுக்காகத்தான் என் வீட்டினருக்கு எதிராக செயல்பட துணிந்தேன் .இவள் இப்போது என்னையே மரியீதையின்றி பேசுகிறாள் .இனி இவளுக்காக எதுவும் செய்ய நான் தயாரில்லை .நான் கொடுத்த உறுதியின் படி லேப்டாப்பை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் .இனி இவள் பாடு .உங்கள் பாடு .நான் வருகிறேன் …” விலகி நடக்க முயன்ற சாத்விகாவின் வழியை மறித்தபடி நின்றான் வஹீப் .

” கொஞ்சம் இருங்கள் சிஸ்டர் .இப்படி திடீரென எங்களை பாதியில் விட்டு போனால் எப்படி …? உங்களுக்கு நிஜம்மாகவே பாஸ்வேர்ட் தெரியாதா …? ” மாலிக்கின் பச்சை விழிகள் சாத்விகாவின் கண்களை ஊடுறுவியது .

” தெரியாது …” சாத்விகாவின் பார்வை தூரத்து பனிமலையின் மீதிருந்த்து .

” சரி .அப்போது வேறு வழியில்லை .நாம் காத்திருக்க வேண்டியதுதான் …”

” எதற்கு …? “

” இந்த லேப்டாப்பை திறக்கும் திறமையுள்ள ஆளுக்கு …”

” அது யார் ..? “

” வருவார் பாருங்கள்…” சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டு ஜீப்பின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் மாலிக் .வஹீப்பும் , சாந்தினியும்  சாத்விகாவிற்கு ஒரு அரண் போல் நின்றபடி அவளை கண்காணித்துக் கொண்டிருந்தனர் .

” வரும் ஆளை வைத்து நீங்களே லேப்டாப்பை திறந்து பார்த்துக் கொள்ளுங்கள் .இப்போது என்னை விட்டு விடுங்கள் …”

” உங்களுக்கு ரேணுகாதேவியை பார்க்க வேண்டாமா மேடம் ..? “

” வேண்டாம் .நான் என் வீட்டிற்கு போகிறேன் …”

” ஆனால் எங்களிக்கு நீங்கள் வேண்டும் சிஸ்டர்.நீங்களில்லாமல் நாங்கள் பாகிஸ்தானிற்குள் போக மாட்டோம் .அங்கே உங்களை வைத்து எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது .”

” நீங்களெல்லாம் யார் …? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் …? “

” உடனே புரிந்து கொண்டதற்கு பாராட்டுகள் சிஸ்டர் .நாங்கள்
ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் .”

” தீவிரவாதிகள் ….”

” இல்லை .எங்கள் உரிமைக்காக போராடும் ஒரு சாதாரண சொந்த நாட்டு விசுவாசிகள் ..”

” ஹிஸ்புல் முஜாகிதீன் …  காலித் வானி …” சாத்விகா மெல்லிய குரலில் முணுமுணுக்க , அருகிலிருந்து அதை கேட்டுக் கொண்டிருந்த வஹிப்பிற்கும் , சாந்தினிக்கும் உடலில் ஒரு விரைப்பு வந்த்து .

” அவரேதான் …எங்கள் தலைவர் .உங்கள் ராணுவத்தினரால்  அநியாயமாக கொல்லப்பட்டவர் …அவருடைய என்கவுன்டரில் பெரும் பங்கு அந்த சக்கரவர்த்தியுடையது தான் தெரியுமா …? அதற்கு நாங்கள் பதில் மரியாதை செய்ய வேண்டாமா ..? ” மாலிக்கின் சிரிப்பு கோணலாக விரிந்த்து .

” அது அவரது கடமை …தனி மனிதனாக அவர் அதனை செய்யவில்லை .அதற்காக தனிப்பட்ட முறையில் அவரை பலி வாங்க துடிப்பது சரியில்லை “

” அது போலெல்லாம் யாரையும் விட்டு எங்களுக்கு பழக்கமில்லை சிஸ்டர் .நாங்கள் நல்லபாம்பு போல .எத்தனை வருடமானாலும் காத்திருந்து பழி வாங்குவோம் …”

” உன் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்க துடிக்கிறாய் நீ .இதில் சொந்த நாட்டு விசுவாசம் எங்கிருந்து வந்த்து மாலிக் வானி …? “

சாத்விகாவின் அழுத்தமான கேள்வியில் மாலிக்கின் பச்சை விழிகள் பயங்கரமாக   ஒளிர்ந்தன. ” ஓ…உங்களுக்கு என்னை தெரியுமா சிஸ்டர் …எப்போதிருந்து …? “

” உன்னை இரண்டாம் முறை சந்தித்த போதே .உன் அண்ணன் காலித்தின் போட்டோவை மாமா எனக்கு காட்டியிருந்தார் .உன்னை பார்த்ததுமே ஜாடை பரிச்சியம் தெரிந்த்து .இப்போது உங்கள் இயக்கத்தின் பெயர் சொன்னதும் நானாக ஊகித்தேன் “

” நான் நினைத்ததை விட நீங்கள் புத்திசாலி சிஸ்டர் …”

” இப்போது என்ன காரியத்திற்காக என்னை பிடித்து வைத்துக் கொண்டுள்ளாய் …? “

” உங்கள் மூளை அதிகமாக வேலை செய்கிறதே சிஸ்டர் .நீங்கள் கொண்டு வந்த இந்த லேப்டாப் எங்களுக்கு உபயோகமாகிறதா எனத் தெரிய வேண்டாமா …? “

” உண்மையில் இந்த லேப்டாப்பில் என்னதான் இருக்கிறது …? ” 
மாலிக்கின் இதழ்கள் மீண்டும் விரிந்த்து . ” பட் பட்டென பாயிண்ட்டை கேட்ச் பண்ணுகிறீர்கள் சிஸ்டர் .இதில் உங்கள் ராணுவ படை ரகசியங்கள் இருக்கிறது .”

” அவ்வளவு முக்கியமான விபரங்களை எளிதாக உனக்கு சிக்கும்படியா வைத்திருப்பார்கள் என் கணவரும் , மாமனாரும் …? “

” வைத்திருக்கவில்லையென்றால் …அப்படி வைக்க வைப்போம் சிஸ்டர் .அந்த விபரங்களின் முக்கியத்தை விட நீங்கள் அவர்களுக்கு முக்கியமில்லையா …? “

” என்னை நீ எவ்வளவுதான் புரட்டினாலும் அந்த லேப்டாப் விபரம் உனக்கு கிடைக்காது .ஏனென்றால் அது எனக்கே தெரியாது …”

” யெஸ் …அதற்குத்தான் நான் வேறு ஏற்பாடு …அதோ நமக்கு உதவி வந்துவிட்டது …” மாலிக் பரபரப்புடன் கைகளை தேய்த்துக் கொண்டு ஜீப்பின் மேலிருந்து இறங்கினான் .தலைக்கு மேலே ஒரு ஹெலிகாப்டரின் ஓசை கேட்டது .அது பாகிஸ்தான் பக்கமிருந்து வரும் என சாத்விகா எதிர்பார்த்திருந்த்தற்கு மாறாக அது இந்தியா பக்கமிருந்து வந்த்து .

” பார்த்தீர்களா சிஸ்டர் .எங்களுக்கு உதவி எங்கிருந்து வருகிறதென்று …? ” மாலிக் நக்கலாக கேட்க சாத்விகா வெறுப்புடன் முகம் திருப்பக் கொண்டாள் .” மலம் தின்னும் நாய்கள் எல்லா இடத்திலும்தான் இருக்கும் ” குத்தூசியாய் பதிலளித்தாள் .

அந்த பனிக்குவியல்களையெல்லாம் அரைத்து தள்ளுவது போன்ற வேகத்துடன் சுழன்றபடி ஹெலிகாப்டர் தரையிறங்கி சக்கென நின்றது . அதன் கதவுகளை திறந்து இறங்கியவன் தனது முகத்தை மறைத்திருந்த கண்ணாடியை சுழற்றியபடி அங்கு நின்றிருந்தவர்களுக்கு கையசைத்தபடி இறங்கி வந்தான் .அந்த அரையிருள் அனுமதித்த அளவு அவனை எவ்வளவோ கூர்ந்து பார்த்தும் சாத்விகாவால் அவனை அடையாளம் தெரிய முடியவில்லை .




” பாஸ்வேர்ட் வருது …” அவனை கண்காட்டி மாலிக் சிரித்தான் .
வேகமாக அவன் கைகளை குலுக்கினான் .வழியில் எந்த பிரச்சனையும் இல்லையே …நினைத்தபடி எல்லாம் சரியாக நடந்த்தா …யாராவது பின் தொடர்ந்தார்களா …கேள்விகளும் , பதில்களும் இந்தியில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த ஓநாய் மூஞ்சியை பார்த்தால் , லேப்டாப்னா மடியில் வைத்துக் கொண்டு பார்க்கும் டிவிதானே என்று கேட்கும் போல …இதுவா அந்த லேப்டாப்பை ஓபன் பண்ண போகிறது …? சாத்விகா அலட்சியமாக அவனை பார்க்க , அவன் அதை விட அலட்சியமாக அவளை பார்த்தான் .

” பாஸ்வேர்ட் எங்கே நிதின் …? ” மாலிக் கேட்க …” இதோ …” என்றபடி ஹெலிகாப்டருக்கு போன நிதின் ஒரு மூட்டையோடு வந்தான் .கோதுமை மூட்டை போல் தோற்றமளிந்த்த அந்த மூட்டையை மாலிக்கின் காலடியில் போட்டு அவிழ்த்தான்.உள்ளிருந்து …மயங்கிய நிலையில் வெளியே வந்து விழுந்தான் வீரேந்தர் .

சாத்விகா அறியாமலேயே அவள் வாயிலிருந்து அலறல் ஒன்று வெளியேறியது .தன்னிலை மறந்து கத்தியபடி அவள் வேகமாக ஓடி பனியில் கிடந்த தன் கணவனின் தலையை தன் மடியில் ஏந்திக் கொண்டாள் .

” வீரா …வீரா …உங்களுக்கு என்ன ஆச்சு …?இங்கே என்னை பாருங்கள் …” பட்பட்டென அவன் கன்னத்தில் தட்டினாள் .

எந்த சலனமும் இல்லாமல் விழி மூடிக் கிடந்தான் வீரேந்தர் .

What’s your Reaction?
+1
16
+1
9
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!