karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 47

      47

விலாசமில்லாத தபால் என்னை

உரிமையோடு உன் சட்டை பையில்

சொருகிக் கொண்டுள்ளாய்

உனக்குள்ளே விலாசம் தேடி

புதைந்து கொண்டிருக்கிறேன் நான் …

1992 – காஷ்மீர் .




பனி …மழை போல் கொட்டிக் கொண்டிருந்த ஒரு கடுமையான குளிர்கால இரவு .அந்த வீட்டில் அந்த பெண் இருந்தாள் .இல்லை அவளை பெண்ணென்று சொல்ல முடியாது .அவள் சிறுமி .பதினான்கே வயதான சிறுமி . அவள் அங்கு ரொட்டிகளை பக்குவமாக கரி அடுப்பின் மேலிருந்த இரும்பு தோசைக்கல்லின் மீது போட்டு சுட்டு எடுத்து கொண்டிருந்தாள் .

அவள் அம்மா சொல்லி தந்த்து போலவே பிசைந்து வைக்கப்பட்டிருந்த பக்குவமான மாவை தனது கைகளாலேயே தோசை கல்லின் மீது பரப்பி , ஓரளவு வட்டமாக வந்த ரொட்டிகளை பார்த்து ” ஐ…எனக்கும் ரொட்டி சுட வருதே …”என குழந்தையாய்  குதூகலித்து கொண்டாள் .

” இன்று அம்மா வந்து என் ரொட்டியை பார்த்து அசந்து போவார்கள் …” தனக்கு தானே பேசிக்கொண்டாள் .தூங்கிக் கொண்டிருந்த தம்பியை எழுப்பி சாப்பிட சொல்லலாமா என யோசித்தவள் , வேண்டாம் இன்று அதிக குளிர் .அவன் பாவம் .தூங்கட்டும் .அம்மா வந்த்தும் எழுப்பி கொள்ளலாம் …உற்சாகத்தோடு தொடர்ந்து சுடலானாள் .

வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது .அவள் கதவை திறக்க எழுந்தாள் .பொதுவாக இது போன்ற இரவு நேரங்களில் சரியான பாதுகாப்பற்றிருக்கும் ஒரு பெண்ணிற்கு , இந்த  நேர அழைப்புகளை ஏற்க கூடாதென்றே சொல்லி வைத்திருப்பார்கள் வீட்டு பெரியவர்கள் ்ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர் அவளிடம் அப்படி சொல்லவில்லை .அவர்கள் இருக்கும் இடத்தையும் , சூழ்நிலையை யும் உத்தேசித்து  எந்த நேரமானாலும் நம்மை தேடி உதவி கோரிக்கைகள் வரலாம் .நாம் தயாராக இருக்க வேண்டுமென்றே கூறியிருந்தனர் .




எனவே தயங்காமல் கதவை திறந்த சிறுமி அது போலொரு உதவி தேவைப்பட்டவர்களைத்தான் வெளியே பார்த்தாள் .உடல் முழுவதும் காயம் பட்ட நிலையில் , கொட்டும் பனி காயங்களின் வலியை அதிகப்படுத்த , உயிரை கண்களில் தேக்கியபடி நின்ற ஐந்து பேரை வெளியே பார்த்தாள் .அவர்கள் காயங்களில் பதறியவள் கதவை முழுவதும் திறந்து அவர்களை உள்ளே அனுமதித்தாள் .கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த அவர்கள் உடையில் எதிரி நாடு தெரிவதை அவள் கண்டுகொள்ளவில்லை .எந்த நாட்டினருக்கும் உயிர் ஒன்றுதானே ….

வேகமாக அவர்களுக்கான சேவையில் இறங்கினாள் .முதலில் அவர்களுக்கு காய்ந்த உடைகளை கொடுத்து கணப்பினை விறகு சொருகி நெருப்பை அதிகமாக்கினாள் .மருந்து பெட்டியை எடுத்து காயங்களுக்கு மருந்திட்டாள் .சற்று தெளிவாக இருந்தவர்கள் தனக்கான மருத்துவத்தையே தாங்களே பார்த்து கொண்டனர் .அவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை வழங்கினாள் .இவை எல்லாவற்றிற்கும் மேலாக …சமைத்து வைத்திருந்த ரொட்டிகளை அவர்களுக்கு பரிமாறினாள் .

ஒரு மணி நேரத்தில் வந்தவர்கள் அனைவரும் உடல் தெளிவாகி கண் சொருகி உறக்கத்திற்கு சென்றனர் .மெல்ல விடிய தொடங்க இன்னமும் பனி மழை குறையாத்தால் வெளிச்சம் பூமிக்கு வருவதாயில்லை .இன்னமும் அம்மாவை காணோமே …கவலையுடன் சன்னல் வழியாக பார்த்தபடி டீக்கு இலையை சுட வைத்துக் கொண்டிருந்தாள் அவள் .முதுகை ஏதோ உறுத்த திரும்பி பார்த்தவள் அங்கே அவளை வெறித்தபடி நின்றவனை பார்த்தாள் .

” குட் மார்னிங் அண்ணா .இரவு நன்றாக தூங்கினீர்களா …? ப்ளாக் டீ குடிக்கிறீர்களா …? இந்த குளிருக்கு நன்றாக இருக்கும் …” பேசியபடி டீ கலந்தவளின் வாளிப்பான மேனியில் படிந்திருந்த்து அந்த மிருகத்தின் கண்கள் .டீயை நீட்டிய கையை பற்றி இழுத்தான் .அவளது கத்தலில் விழித்த மற்றவர்களில் யாருமே மனிதர்களாக அந்த நேரத்தில் இல்லை .இது போன்றதோர் நேரத்திற்காக காத்திருந்த்து போலவே வரிசையாக அந்த பூஞ்சிட்டின் மீது பாய்ந்தனர் .கதற , கதற அவளை வேட்டையாடி முடித்தனர் .பாதியிலேயே அவள் சுயநினைவிழந்து வுட்ட போது கூட அவளை விடவில்லை .தங்கள் தேவை தீர்ந்த்தும் அவளை உதறிவிட்டு வெளியேறினார்கள் .

உயிர் காத்த தெய்வத்தையே யாராவது சீரழிப்பார்களா …? அந்த மனித மிருகங்கள் அதை செய்தார்கள் .சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அந்த பெண்ணின் தாய் அதிர்ந்து நின்றாள் .தலையிலடித்து கதறினாள் .அவள் தந்தைக்கு தகவல் சொல்லப்பட , அவர் பதறி ஓடி வர நூல் போல் சுவாசம் ஓடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை அள்ளி போட்டுக் கொண்டு அந்த குடும்பம் காஷ்மீரை விட்டு வெளியேறியது .டில்லியில் அவளுக்கு உயர்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவள் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டது .ஆனால் மனம் ….அது உடல் பட்ட அதிர்வை தாங்க முடியாமல் மரித்து போனது .

நிற்க சொன்னால் நின்று , நடக்க சொன்னால் நடந்து …சாப்பிட சொன்னால் வாய் திறந்து என ஒரு எந்திர பொம்மையாகி போனாள் அவள் .அவளுக்கான மேல் சிகிச்சைக்காக வெளிநாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்த போது மற்றொரு பேரிடி அந்த பெற்றோரை தாக்கியது. அந்த பெண் கர்ப்பமாக இருந்தாள் .அவளுக்கான மற்ற உயிர் காக்கும் சிகிச்சைகளில் இதனை கவனிக்காமல் விட்டிருந்தனர் .அந்த கரு அழிக்கப்படும் காலத்தை தாண்டி வலிமையாக அவளுள் வளர்ந்து ஊன்றியிருந்த்து .இந்த கொடுமையை தாங்க முடியாத அவள் பெற்றோர் கதறினர் .

சந்திரிகாவின் இதமான மடி வெப்பத்தில் இருந்தாலும் சாத்விகாவின் உடல் இந்த கொடுமை செய்திகளை தாங்காமல் குலுங்கியது .கண்கள் சுரந்து சந்திரிகாவின் சேலையை நனைக்க , மறைக்க முயலாமல் சத்தமாகவே அழத் துவங்கினாள் அவள் .

” இந்த துன்பம் உனக்கு வேண்டாமென்றுதான் நாங்கள் எல்லோரும்  இதனை உனக்கு மறைக்க நினைத்தோம் பேபி ” வீரேந்தர் அவள் கன்னத்தை கண்ணீரை துடைத்தான் .

” பரவாயில்லை , இது நான் பட வேண்டிய துன்பம்தான் .மேலே சொல்லுங்கள் அத்தை ” அன்பு காட்டிய சொந்தங்களின் தயவால் நிமிர்ந்து அமர்ந்தாள் சாத்விகா .

” அந்தக் கருவை அழிக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன் .ஆனால் பிரேமலதா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை .அந்த கருவை அழிப்பதால பலவீனமான உடல்நிலையில் இருக்கும் .  அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து வருமென்றார் .இதனை கேட்டதும் இவர் கருவை அழிக்க சம்மதிக்கவில்லை .” கணவரை காட்டினாள் .

” வேறு வழியின்றி அந்த கருவை அவள் வயிற்றிலேயே வளர்க்க ஆரம்பித்தோம் .அதுவும் அந்த பெண்ணின் உடல்நிலையை கருதி , அந்த கருவுக்கான போஷாக்கான , உணவு , மருந்து மாத்திரைகளோடு ….மனம் கொதிக்க கொதிக்க அழிக்க வேண்டிய கருவையே பக்குவமாக போற்றி வளர்க்கும் கொடுமை இருக்கிறதே …ஆறு மாதமாக அந்த நரக வேதனையை நான் அனுபவித்தேன் ….”

” அந்த பெண்ணைத்தான் ஆயா ரேணுகாதேவியின் பொறுப்பில் விட்டிருந்தீர்களா …? “

” ஆமாம் .அவளால் அவளது பெற்றோர்களுக்கு களங்கம் வருவதை விரும்பாமல் , அவளை மறைவாக அந்த ஆயா வீட்டில் விட்டு ….”

” புரிகிறது …இப்படி களங்கங்களும் , வெறுப்புகளும் சூழ யாரும் விரும்பாத ஒரு சூழ்நிலையில் பிறந்த குழந்தைதான் நான் .இல்லையா …? ” சாத்விகாவிற்கு பேசி முடிக்கும் முன் அழுகை வந்த்து .

” விளைவுகள் எப்படியும் இருக்கட்டுமென்று உன்னை அன்றே அழித்திருக்க வேண்டும் .இன்று இந்த வேதனை உனக்கும் இல்லை .எங்களுக்கும் இல்லை ….” சந்திரிகாவின் குரலில் இப்போதும் வெறுப்பிருந்த்து .

” போதும் சந்திரா .குழந்தை மிகவும் கவலை படுகிறாள் பார் .” சக்கரவர்த்தி அதட்டினார் .

” பிறகு அந்த பெண் என்ன ஆனாள் …? இப்போது எங்கே இருக்கிறாள் …? “

” அது எதற்கு உனக்கு …? அவளுக்கு சுயநினைவில்லாத நிலையிலேயேதான் குழந்தை பிறந்த்து .சுயநினைவு அவளுக்கு வருவிக்கவும் நாங்கள் விரும்பவில்லை .இப்போது அவள் தன் முந்தைய வாழ்வின் துயரங்கள் எதுவும் நினைவின்றி தனக்கென ஒரு புது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .அவளை அவள் போக்கிலேயே விட்டு விட்டோம் .இப்போது நீ போய் ….”

” அவளை சந்திக்க நினைக்க மாட்டேன் .வாழ்வின் ஒட்டு மொத்த துயரங்களையும் ஒரிரு மாதங்களில் அனுபவித்து விட்டவளை , திரும்பவும் அவள் பழைய காலத்திற்கு திருப்பி தொல்லை செய்யமாட்டேன் …” உறுதி தெறிக்க சாத்விகா இப்படி வெளியே கூறினாலும் ,ஆனால் அவள் யாரென அறிந்து கொள்வதில் மட்டும் ஆர்வமாக இருக்கிறேன் என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் .

சாத்விகாவின் மன ஓட்டத்தை அறியாத அவளின் குடும்பத்தினர் , அவள் மனம மாறிவிட்டதாக மகிழ்ந்தனர் .காயம் பட்டிருந்த அவளை பாதிக்க கூடாதென மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு அவளை கையாண்டனர் .இவ்வளவு ஆதரவான இந்த உறவுகள் இல்லாமல் இது போன்ற ஒரு கொடுமையான சூழ்நிலையை என்னால் தாண்டி வந்திருக்க முடியுமா …? வேதனையோடு நினைத்தபடி அவர்கள் மூவரையும் பேசாமல் பார்த்தபடியே இருந்தாள் சாத்விகா ..அனைவருமாக சிரித்தபடி இரவு உணவை உண்டு முடித்துவிட்டு படுக்க சென்றனர் .

மாடிக்கு வந்த்தும் குட்நைட் சொல்லிவிட்டு தன் அறைப்பக்கம் திரும்ப போன வீரேந்தரை நெருங்கி அணைத்து கொண்டாள் சாத்விகா .” வீரா இன்று நான் உங்களுடன் உங்கள் அறையில் தங்க விரும்புகிறேன் ்உங்கள் மனைவியாக ….”

மௌனமாக அவள் தலையை வருடி நின்ற வீரேந்தர் ” இன்று வேண்டாம் பேபி .இன்னொரு நாள் பார்க்கலாம் …”

” ஏன் …? “

” இன்று நீ மிகவும் மனதால் களைத்திருக்கிறாய் .இது போன்ற நேரத்தில் நடக்கும் நம் சங்கம்ம் நிச்சயம் நமக்குள் ஒரு நிறைவை தராது .வேறு எந்த நினைவுகளுமின்றி நாம் ஒருவரையொருவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பூரண உறவு நடக்க வேண்டும் .நீ இப்போது உன் மனதில் என்னை உயரமான இடத்தில் …ஏதோ உனக்கு வாழ்க்கை கொடுத்தவன் என்பது போன்ற நினைப்பில் இருக்கிறாய் .இப்போது நமக்குள் நடக்கும் உறவு ஒரு நன்றி அறிவித்தலாய் இருக்குமே தவிர , காதலாக இருக்காது …அதனால் நீ இந்த அதிர்வுகளிலிருந்து வெளியே வா .அதன் பிறகு நாம் …நமக்காக மட்டும் இணையலாம் ….”




சாத்விகா பெருமிதம் பொங்க அவனை பார்த்தாள் .” என்ன மனுசன்டா நீ …” செல்லமாக அவன் மார்பில் குத்தினாள் .” ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் .நான் அது போல் …நீங்கள் சொல்வது போல் உங்களை தீவிரமாக காதலிக்கிறேனா …என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது .என்னால் காதலை இன்னமும் உணர முடியவில்லை …”

” ம் …இந்த மாதிரி குழப்ப நேரத்தில் நாம் கணவன் மனைவியாக சேரலாமென்கிறாயே ….இது சரியா ..?நீயே சொல்லு …”

” இல்லை வேண்டாம் . ஆனால் இன்று இரவு நான் உங்களுடன் படுத்து கொள்கிறேன் .இனி தனியாக தூங்க முடியுமென்று எனக்கு தோணவில்லை .ஏனோ பயமாக இருக்கிறது …” வீரேந்தர் சாத்விகாவை இறுக்க அணைத்துக் கொண்டான் .

” வாடா …நானிருக்கிறேன் …” அவளை கைகளில் தூக்கிக் கொண்டு போய் மென்மையாக கட்டிலில் கிடத்தினான் .மென்மையாக அவள் நெற்றியை வருடியபடி அவள் தூங்கும் வரை அவளை பார்த்திருந்தான் .சாத்விகா தூங்கியதும் தானும் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான் .சீரான அவன் மூச்சு வெளிப்பட ஆரம்பித்ததும் சாத்விகா பட்டென விழித்துக் கொண்டாள் .

” என்னை மன்னிச்சிடுங்க வீரா .எனக்கு வேறு வழி தெரியவில்லை .நான் திரும்ப வருவேனா இல்லையோ …உயிரோடிப்பேனோ ….சாக போகிறேனோ …எதுவும் தெரியாது ஆனால் ஒன்று மட்டும் உறுதி .நான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு விநாடியும் உங்களை மட்டும்தான் நினைத்திருப்பேன் …” வீரேந்தரின் முகத்தை பார்த்தபடி தனக்குள் கூறிக்கொண்டவள் குறிப்பிட்ட நேரத்திற்காக படுத்தபடி காத்திருந்தாள் .

அந்த நேரம் வந்த்தும் சத்தமின்றி எழுந்து உடை மாற்றிக்கொண்டு  வீரேந்தர் அங்கே வைத்திருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் .

What’s your Reaction?
+1
11
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!