karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 46

   46

மிதவாத போர்வை போர்த்து கொண்டு

தீவிரவாதத்தை என்னுள் விதைக்கிறாய்

என் ஏகாந்தக்குள்ளும் ஏய்த்து நுழைந்து விடுகிறாய்

எனதென்ற ஒன்றை நான் மறந்து

காலங்கள் பல போய்விட்டது

குளிர்கால போர்வையாய் உனை மட்டும்

சுமந்து திரிகிறேன் ….

” இவர் பெயர் மாலிக் .என் நண்பர்மேடம் …” வஹீப் சாத்விகாவிற்கு அறிமுகம் செய்வித்தான் .

” நமஸ்தே சிஸ்டர் ” கரம் குவித்தவனுக்கு முப்பத்தியைந்து வயதிருக்கலாம் .உயரமாக , தலை நிறைய மண்டியிருந்த முடியோடு , தாடியோ மீசையோ இன்றி சுத்தமாக மழிக்கப்பட்ட முகத்துடன் இருந்தான் .அவன் குரல் மெலிந்து பெண்மை சொட்டுவதாக இருந்த்து .அவன் விழிகள் பச்சை நிறத்தில் இருந்தன .அது ஒரு மன பிசைதலை சாத்விகாவினுள் உண்டாக்கியது .அவன் விழிகளை பார்த்தபடி கரம் குவித்தாள் .

” அப்படி பார்க்காதீர்கள் சிஸ்டர் .இந்த கணகளாலேயே  நிறைய பெண்கள் என்னை காதலிக்க மறுத்துவிட்டார்கள் .வேறு வழியில்லாமல் நான் எனது முப்பத்தியேழு வயது வரை திருமணம் முடிக்காமலேயே இருக்க வேண்டியதாய் போய்விட்டது …” மழலை தமிழ் பேசினான் .

” அட தமிழ் அழகாக பேசுகிறீர்களே …”




” தமிழ் எனக்கு பிடித்த மொழி .அதனால் கற்றுக்கொண்டேன் .இரண்டு வருடங்கள் உங்கள் சென்னையில் வேலை பார்த்திருக்கிறேன் …”

” அப்படியா …? எங்கே ….? என்ன வேலை …? “

” அதை விடுங்கள் ஏதோ ஒரு சந்தில் உட்கார்ந்து கொண்டு , எதையோ எதிர்பார்த்து , எதற்காகவோ காத்திருக்கும் வேலை .விளக்கி சொன்னால் அவ்வளவ்வாக சுவாரஸ்யம் இருக்காது “

” நீங்கள் வந்துவிட்டீர்களா திதீ …? மார்கெட் போவதாக சொல்லிவிட்டு நான் வர நேரமாகிவிட்டது ” அப்போதுதான் வந்து சேர்ந்தாள் சாந்தினி .

” சாந்தினி போட்டோவை விட நேரில் உன் திதீ ரொம்ப அழகு …” மாலிக் சொல்ல சாத்விகா ஆச்சரியப்பட்டாள் .

” நானா …? போட்டோவா …? எந்த போட்டோவை பார்த்தீர்கள் …? “

” அன்று உங்கள் திருமணத்தின் போது நாம் போட்டோ எடுத்து கொண்டோமே , அதை மாலிக்கிடம் காட்டினேன் .அதைத்தான் சொல்கிறார் திதீ .மாலிக் திதீ பாவம் .பிடிக்காத திருமணம் செய்து கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் .அந்த வீட்டில் யாரும் திதீயை மதிப்பதில்லை …”

” அப்படியா சிஸ்டர் …? “

மாலிக்கின் நேரடி கேள்வியில் சாத்விகா தடுமாறினாள் .” இல்லை …அப்படி ஒன்றும் இல்லை .வீராவை நான் விரும்பத்தான் மணந்து கொண்டேன் …”

” பொய் .விரும்பி மணந்து கொண்டவர்கள் ஏன் தனித்தனி அறைகளில் தூங்கிகிறீர்கள் …? ” சாந்தினியின் கேள்வியில் திக்கிட்டாள் .இவள் ஏன் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறாள் .

” கேப்டன் வீரேந்தரை மணந்து கொண்டு யாரால் சந்தோசமாக இருக்க முடியும் மாலிக் …? பாவம் மேடம  அவர்கள் வீட்டினரை பற்றி அறியாதவர்கள் .நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் ….”

என் வீட்டினருக்கு விசாரணை கமிசன் அமைக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது …பல்லை கடித்தபடி சாத்விகா சாந்தினியை முறைக்க , அவள் அதை கவனிக்காமல் மாலிக்கிடம் ஆவலுடன் பேசிக்கொண்டிருந்தாள் .

சாந்திறியிடம் பேசியபடி இடையிடையே திரும்பி தன் பச்சை விழிகளால் சாத்விகாவை ஆராய்ந்தபடி இருந்த மாலிக் , இவள் பார்வையை சந்தித்ததும் பளிச்சென சிரித்தான் .

” எங்களோடு நீங்களும் வந்து விடுகிறீர்களா சிஸ்டர் …? ” என்றான் .

” எங்கே …? “

” பாகிஸ்தானுக்கு .அங்கே நாங்கள் உங்களை நன்றாக பார்த்து கொள்கிறோம் …”

” நீங்கள் பாகிஸ்தானியா …? “

” ஏன் …அப்படி இருந்தால் தவறா …? “

” அதனால் என்ன …? பாகிஸ்தானும் ஒரு நாடு இஸ்லாமும் ஒரு மதம் ..அங்குள்ளோரும் நம் சகோதர்ர்கள்தானே …” முன்போரு முறை வீரேந்தர் அவளிடம் கூறியதையே தானும் நினைவு கூர்ந்து சொன்னாள் .

” வெரிகுட் சிஸ்டர் .பாகிஸ்தானியர்களை உங்கள் சகோதர்ர்களாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி …” மாலிக்கிற்கு மிகுந்த மகிழ்ச்சி .

” இதை என் கணவர்தான் கூறினார் .நான் பாகிஸ்தானியர்களை விரோதிகளாக நினைத்து கொண்டிருந்த போது , அது தவறு என்று …இப்படி கூறினார் …”

” ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவியது .

” கேப்டன் வீரேந்தரிடமிருந்து இது போலொரு வார்த்தைகளா …நம்ப முடியவில்லை …”

” ஏன் அப்படி கூறுகிறீர்கள் …? “

” அவர் பாகிஸ்தானியர்களை கண்ட இடத்திலெல்லாம் சுடும் ஆத்திரத்தில் இருப்பவர் …”

மாலிக் முடிக்கும் முன்பே ” நான் நம்ப மாட்டேன் ” என்றாள் சாத்விகா .

” விடுங்கள் .இது அவர்களது அதிர்ஷ்டம் .சொல்வதையெல்லாம் நம்பும் ஆட்கள் கிடைப்பது .அந்த விசயத்தில் எனக்கு எப்போதுமே துர்அதிர்ஷ்டம் .நான் உண்மையே சொன்னாலும் யாரும் நம்புவதில்லை .ஒரு வேளை என் முக லட்சணமே அப்படி போல …” மாலிக்கின் பாவனையில் சாத்விகா புன்னகைத்தாள் .

” சிரித்தே சமாளிக்காதீர்கள் சிஸ்டர் .சொல்லுங்கள் எங்களோடு பாகிஸ்தான் வந்து விடுகிறீர்களா …? “

” எதற்கு …? “

” ஒரு வேளை அங்கே உங்கள் சொந்தக்காரர் கள் இருக்கலாம் …” 
” என் சொந்தங்கள் எல்லோரும் இந்தியாவில்தான் இருக்கின்றனர் …”

” ரேணுகாதேவியை மறந்துவிட்டு பேசுகிறீர்களே மேடம் …” வஹீப்பின் குரலில் திடுக்கிட்டாள் .

” நீங்கள் சரியென்றால் நான் உங்களை பாகிஸ்தானில் ரேணுகாதேவியிடம் அழைத்து போகிறேன் …”

” அ…அவர்கள் அட்ரஸ் உங்களுக்கு எப்படி தெரியும் …? “

” அன்று அந்த அட்ரஸை எழுதி கையில் வாங்கும் போதே மனப்பாடம் செய்துவிட்டேன் .மாலிக் மூலம் அவர்கள் இருப்பிடத்தையும் விசாரித்து விட்டேன் .பாகிஸ்தானில் ஒரு சிறிய கிராமத்தில் தன் தம்பி குடும்பத்துடன் அந்த ரேணுகாதேவி இருக்கிறார்கள் .நீங்கள் சம்மதித்தால் அவர்களை உடனேயே பார.க்கலாம் “




மின்னலொன்று சாத்விகவின் உடல் முழுவதும் ஊர்வலம் சென்றது .அவள் தாயை அறிந்த ரேணுகாதேவி .அவளை சந்தித்தால் தாயை அறியலாம் .தாயை சந்தித்தால் தந்தையை அறியலாம் .கண்களை இறுக மூடினாள் .இதற்காகத்தானே போராடிக் கொண்டிருக்கிறேன் .

” வருகிறேன் .எனக்கு ரேணுகாதோவியை சந்திக்க வேண்டும் …”

” குட் …சக்கரவர்த்தியின் லேப்டாப்பை எடுத்துக் கொண் டு வாருங்கள் .நாம் பாகிஸ்தான் போய்விடலாம் .”

” எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் .லேப்டாப்பை மாமா கையில் , வீரேந்தர் கையில் பார்க்கிறேன் .ஆனால் அதன் பிறகு அது காணாமல் போய்விடுகிறது .எங்கே மறைத்து வைக்கின்றனர் என தெரியவில்லை .பார்த்து எனுத்துவிட்டு சொல்கிறேன் ….”

” நிச்சயமாக , தேவையான நேரம் எடுத்து கொள்ளுங்கள் .லேப்டாப்பை எடுத்தது ம் எங்களுக்கு தெரிவியுங்கள் …” அவர்கள் கிளம்பினார்கள் .

————————

” நீங்கள் ஐந்தாவது படிக்கும் போது எத்தனை சப்ஜெக்டில் பெயிலாகி இருப்பீர்கள் வீரா …? ” சூப்பில் மிளகு தூளை தூவிக்கொண்டு ஸ்பூனால் கலக்கியபடி வீரேந்தரை வம்புக்கிழுத்தாள் சாத்விகா .

” பெயிலா …நானா …எல்லா சப்ஜெக்ட்டிலும் பர்ஸ்ட் க்ளாஸ் மார்க்காக்கும் …” வீரேந்தர் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டான் .

” ஆமாம்மா வீரா எப்போதும் நல்ல மார்க்தான் எடுப்பான் ” சக்கரவர்த்தி மகனிக்கு சப்போர்ட் பண்ணினார் .

” ஏன் மாமா …இங்கேயுள்ள ஸ்கூலில் எல்லாம் .  நாற்பது மார்க்தான் பர்ஸ்ட் கிளாஸ்.  மார்க்கா …? “

” இல்லையேம்மா .நம்ம பக்கம் மாதிரிதான் .தொண்ணூற்றியைந்துக்கு மேல் எடுக்கனும் …ஏன் கேட்கிறாய் …?

” அய்யய்யோ அப்போ உங்கள் ப்ராடு மகன் உங்களுக்காக தனி ரேங்க கார்டு தயாரித்தார் போல .இப்படி ஏமாந்து விட்டீர்களே மாமா …இங்கே பாருங்கள் ஒரிஜினல் .எல்லா சப்ஜெக்டிலும் நாறபது ,ஐம்பது …” சாத்விகா கையிலிருந்த ரேங்க் கார்டை பிடுங்கி பார்த்த சந்திரிகா …

” இந்த பரீடசையின் போது வீராவிற்கு டைபாய்டு .அதனால்தான் …” என்ற போது வீரேந்தர் சாத்விகா தலையில் கொட்டினான் .

” ஏய் வாலு இதை எங்கேயிருந்து எடுத்தாய் …? “

” மாமா ரூமிலிருந்து .அட..அட எவ்வளவு பெரிய பொக்கிசம் இது …விடலாமா .பார்த்த உடனேயே கையோடு கொண்டு வந்துவிட்டேன் .,”

” அது எப்போதோ என் சிறு வயதில் நடந்த்து .உன சமீபத்திய லடசணத்தை இப்போது நான் சொல்லவா …? “

” அது …அதை பற்றி சொல்ல என்ன இருக்கிறது …? நான் ஒழுங்காக எல்லாம் கிளியர் பண்ணிவிட்டுத்தானே வந்தேன் “

” ம் .்இங்கே வரும் முன் சேர்த்து வைத்த நான்கு அரியரை எழுதி விட்டு வந்தாயாமே .அதில் இரண்டு திரும்பவும் போச்சாம் .உன் அண்ணன் நேற்றுத்தான் சொன்னான் …”

” அடப்பாவி அண்ணா .யாரிடமும் சொல்லாதே என்று அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டுக் கொண்டேனே .இப்படி என் மானத்தை வாங்கி விட்டாயே ்இருடா உனக்கிருக்கு …” புலம்பியவளிடம் …

” கார்த்திக்கிற்கு போன் செய்து தரவா …? ” எனக் கேட்டு கடுப்பேற்றினான் வீரேந்தர் .

” போடா …” என்றவளின் தலையில் கொட்டினாள் சந்திரிகா .” அதென்ன எப்போது பார்த்தாலும் ” டா ” .புருசனுக்கு மரியாதை கொடுக்க மாட்டாயா …? “

சாத்விகாவின் முதுகை அம்மாவிற்கு வாகாக திருப்பியவன் ” இங்கே நானகு போடுங்கள் அம்மா .அப்போதாவது புத்தி வருகிறதா பார்க்கலாம் ” எனஙும் உடனே தனது தாக்குதலை முதுகிற்கு மாற்றினாள் சந்திரிகா .

குனிந்து மெத்தென்று விழுந்த சந்திரிகாஙின் அடிகளை வாங்கிக் கொண்டிருந்த சாத்விகாவின் முகத்தின் முன்தானும்  குனிந்து ” அப்பா ரூமில் என்னடி நோண்டிக் கொண்டிருந்தாய் …? ” என்றான் வீரேந்தர் .

” சொல்ல முடியாது போடா …” அவன் தோள்களை பிடித்து தள்ளினாள் .இப்போது சந்திரிகாவின் அடிகள் வலுவாக அவள் முதுகில் விழுந்தன.

” ஆ…என்ன அடி …நீங்களெல்லாம் ஒரு உயிரை காப்பாற்றும் வேலையில் இருந்தவரென சொல்லிக் கொள்ளாதீர்கள் .நம்ப முடியாது .”

சந்திரிகாவின் கைகள் ஸ்தம்பித்து நின்றன. ” ஆனால் தேவைப்பட்டால் உயிரை அழிக்கவும் நீங்கள் தயங்கமாட்டீர்களாமே .டாக்டர் பிரேமலதா சொன்னார்கள் ” சாத்விகா தொடர்ந்து சொற்களில் கத்தியை சொருகி இழுத்தாள் .

உதடுகள் துடிக்க நின்ற சந்திரிகா சட்டென திரும்பி வீட்டினுள் நடந்தாள் .” சந்திரா …” அவளை சமாதானப்படுத்தும் எண்ணத்தோடு சக்கரவர்த்தி தொடர்ந்து போக , வீரேந்தர் சாத்விகாவை வெறித்து பார்த்தான் .

” நாக்கில் எப்போதும் கத்தியை தயாராக வைத்திருப்பாயா …? யார் மனதை நம் சொற்கள் காயப்படுத்துமோ …என்ற கவலையே உனக்கு கிடையாதா …? “

” என் மனமும்தானே ரண காயத்தில் இருக்கிறது .அதை நீங்கள் யாரும் உணர மறுக்கன்றீர்களே …”

” சீ …நீயெல்லாம் ஒரு பொண்ணு …” வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அவனும் உள்ளே எழுந்து போனான் .

அன்று அதிசயமாக சக்கரவர்த்தியும் , வீரேந்தரும்  மாலை நேரம் வீடு வந்துவிட , மாலை  ஸ்நாக்சை நால்வருக்குமாகதோட்டத்து புல்வெளியில் ஏற்பாடு செய்திருந்தாள் சந்திரிகா.  சூடான வெஜிடபிள் சூப்போடு , கொஞ்சம் உப்பு பிஸ்கட்டுகளுடன்  நால்வரும் தோட்டத்து நாற்காலிகளில் அமர்ந்திருந்தன. அப்போதுதான் இந்த பிரச்சினை நடந்த்து .பாதி மட்டுமே காலியாகியிருந்த சூப் கிண்ணங்களில் வெண்ணெய் கரைந்து காணாமல் போயிருந்த்து .மெல்ல சுற்றிலும் இருள் சேர ஆரம்பிக்க ஒரு முடிவோடு எழுந்து வீட்டினுள் சென்றாள் சாத்விகா .

வீரேந்தரும் , சக்கரவர்த்தியும் தங்கள் லேப்டாப் முன் இருக்க சந்திரிகாவை காணவில்லை .எங்கேயென்ற சாத்விகாவின் சைகை கேள்விக்கு மாடியை கை சைகையாக காட்டினார் சக்கரவர்த்தி . நான் போய் சமாதானப்படுத்த போகிறேன் …சைகையிலேயே சொன்னாள் .வேண்டாமென சக்கரவர்த்தியும் , போ என வீரேந்தரும் கையாட்டினர் .கொஞ்ச நேரத்தில் மேலே வாருங்கள் …அவர்கள் இருவருக்கும் கையசைத்துவிட்டு சாத்வகா மாடியேறினாள் .

சந்திரிகா மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள் .தரையில் முழங்கால்களை கட்டி அமர்ந்து கைப்பிடி சுவரில் முதுகு சாய்த்திருந்தாள் .சாத்விகா வந்து நிற்கும் ஓசை கேட்டும் திரும்பாமல் இருந்தாள் .

” உங்களுக்கும் கோபம் வந்தால் இப்படித்தான் வந்து உட்கார்ந்து கொள்வீர்களா அத்தை …நானும் இப்படித்தான் .யாருமில்லாத இடத்திற்கு போய்விடுவேன் .நீங்களும் என்னை போலத்தான் போல ….”

சந்திரிகா பதில் சொல்லவும் இல்லை .திரும்பவும் இல்லை .

” தப்பு …நீங்கள்தானே சீனியர் .நான்தான் உங்களை போல் .அப்படித்தானே அத்தை ” பேசியபடி சந்திரிகா எதிரில் மண்டியிட்டு அமர்ந்தாள் .

சந்திரிகா முகத்தை திருப்பிக் கொண்டாள் .சாத்விகா அவள் கைகளை பற்றிக் கொண்டாள் .” சாரி அத்தை ” என்றாள் .அவள் குரல் தழுதழுத்தது .

” நாங்கள் மூவரும் எங்களுக்கான வாழ்க்கை இதுதான் என நிர்ணயித்துக் கொண்டு மன சமாதானத்தோடு அதையே வாழவும் பழகிக் கொண்டிருந்தோம் .இதில் நீ ஏன்டி பிசாசு போல் இடையில் வந்தாய் …? எதற்காகடி எங்கள் மனபுண்ணை தினம் தினம் கிளறி எங்களை கொன்று கொண்டிருக்கிறாய் …? ” சந்திரிகாவின் குரல் உணர்ச்சியில் நடுங்க சாத்விகாவிற்கு அழுகை வர ஆரம்பித்தது .

சட்டென சம்மணமிட்டு அவள் மடியில் தலை வைத்துபடுத்துக்கொண்டாள் . ” மன்னித்து விடுங்கள் அத்தை .இனி இது போல் பேச மாட்டேன் .”

” உன்னை பெற்றவளை …சொல்லு …சொல்லு என்கிறாயே நான் சொன்னால் நீ தாங்குவாயா …? நாங்கள் பட்ட துன்பங்கள் தெரியுமா உனக்கு …? உன்னை பெற்றவள் அனுபவித்த வேதனை அறிவாயா நீ …? இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள் .உன்னை பெற்றவள் உத்தமி்ஆனால் உன்பிறப்பு இழி பிறப்பு .ஒருஅறியா  பெண்ணின் வாழ்க்கையையே சிதைத்து கொண்டு பிறந்தவள் நீ .தொரியுமா …? ” சாத்விகாவை தன் மடியிலிருந்து தள்ளினாள் .




சந்திரிகாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாக இதயத்திற்குள் நேரடியாக இறங்க ” சொல்லுங்கள் அத்தை .என்னுடைய அந்த கேவலமான பிறப்பை சொல்லுங்கள் .அதன் பிறகாவது எனது அகங்காரமும் , ஆணவமும் அழிகிறதா என்று பார்க்கலாம் .ஆனால் அந்த கொடூரத்தை சொல்லும் முன் உங்கள் மடியின் ஓர் ஓரத்தில் எனக்கு இடம் கொடுங்கள் .உங்கள் தைரியத்தில்தான் நான் என் வாழ்க்கை அவலத்தை கடக்க முடியும் …” பிச்சை போல் கைகளை ஏந்தினாள் .சந்திரிகா விம்மல் தெறிக்க சாத்விகாவின் கைகளை இழுத்துஅவளை தன் மடியில் போட்டுக் கொண்டாள் .

கண்களை மூடிய சாத்விகாவின் தலை ஆதரவோடு வருடப்பட , விழிகளை திறந்து பார்தாள் .சக்கரவர்த்தி மென்மையான தலை வருடலோடு அருகே அமர்ந்திருக்க , மிருதுவாக அவள் கால்களை வருடியபடி அமர்ந்திருந்தான் வீரேந்தர் .

” வேண்டாம் பாப்பா .நீ தாங்க மாட்டாய் …” சக்கரவர்த்தி மெல்லிய குரலில் வேண்னினார் .

” எத்தனை அரண்கள் என்னை பாதுகாக்க …இவர்களை மீறி எனக்கு பெரிய துயரம் வருமா …? சொல்லுங்கள் அத்தை …”தாங்கி பிடிக்க சொந்தங்கள் சூழ்ந்திருந்த தைரியத்தில்  சாத்விகா தனது பிறப்பை நோக்கிய பயணத்திற்கு தயாரானாள் .
சந்திரிகா பேச தொடங்கினாள் .குரல் கம்ம அவள் தடுமாறும் நேரங்களில் சக்கரவர்த்தி உதவினார் .சாத்விகா அறிய நினைத்த அவளது பிறப்பு கொடூரமாக அவள் முன் வரத்துவங்கியது .

What’s your Reaction?
+1
14
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!