karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 45

   45

உத்தரவுகளையும் , மிரட்டல்களையும்

உன்னுள்ளேயே வைத்துக்கொள்

உன் கண்ணளவு அவை

பாதிப்பதில்லை என்னை …

” ஆமாம் நிறைய …அந்த கலவர நேரத்தில் எத்தனை ஆயிரம் டாக்டர் ,நர்ஸ்கள் இருந்தாலும் அங்கே காணாது .நானும் சௌந்தரியும் எங்கள் வீட்டை கூட கவனிக்காமல் ஓடிக்கொண்டிருந்தோம் ” சந்திரிகாஙின் குரலில் துயர் இருந்த்து .

” சௌந்தரி ..்என் அம்மா .அவர்களுக்கு என்ன வைத்தியம் தெரியும் …?”

” காயம்பட்டவர்களுக்கு , மருந்திட , உணவிட தெரியாதா …? தன் கணவன் , குழந்தையை மறந்து அவள் என்னுடன் ஓடி வந்து உதவிக்கொண்டிருந்தாள் “

” குழந்தை …அது கார்த்திக் அண்ணாவா …? அப்போதே நானும் இருந்தேனா …? இந்த கலவரம் எந்த வருடம் நடந்த்து …? ” சாத்விகாவின் இந்த துருவல் கேள்வியில் சக்கரவர்த்தியும் , சந்திரிகாவும் விழித்து கொண்டனர் .

” அப்பா …அம்மா …எவ்வளவு நேரமாக இவளுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கறீர்கள் …? என்ன பேசுகிறீர்கள் …? ” சந்தேக துளைக்கும் பார்வை ஒன்றுடன் வந்து நின்றான் வீரேந்தர் .அவன் வெளியே கிளம்ப தயாரான உடையில் இருந்தான் .

போச்சு இவன் வந்துட்டானா …? இனி ஒன்றும் பேச முடியாதே …இவர்களை போல் இவனிடம் குழைந்து பேசி சாதிக்க முடியாதே …இவன்தான் எதற்கும் மயங்க மாட்டானே …மனைவி என்ற உரிமையில் அவனுடன் நெருங்கியேனும் தனக்கு தேவையான விபரங்களை பெறும் தனது முந்தைய முயற்சி கூட அவனிடம் தோற்றதை ஏக்கத்துடன் நினைத்து பார்த்தபடி …ஜடம் …என முணுமுணுத்தாள் .

” ஏன் நாங்கள் என்ன பேசினால் உங்களுக்கென்ன ..?உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்களேன் …” என்ற சாத்விகா சக்கரவர்த்திக்கும் , சந்திரிகாவிற்கும் நடுவில் போய் அமர்ந்து கொண்டு இருவரது கைகளையும் தன் இரு கைகளால் பிடித்து கொண்டாள் .

” டியூட்டிக்கு நேரமாச்சு .நீங்கள் போகலாம் ” மகாராணி போல் உத்தரவிட்டாள் .உண்மையில் அது போல் சக்கரவர்த்தி , சந்திரிகாவிற்கிடையே அவர்கள் அருகாமையை உணர்ந்தபடி அமர்ந்திருந்த போது அவள் தன்னை மகாராணியாகத்தான் உணர்ந்தாள் .குறையேதுமற்ற சிம்மாசன ராணி போல் ஒரு நினைப்பு அவள் மனம் முழுவதும் பரவி இதமளித்தது .




நிறைவில் ஜொலித்த அவள் முகத்தை உற்று பார்த்தபடி ” அம்மா எனக்கு டிபன் எடுத்து வைக்க வாங்கம்மா ” என்றான் வீரேந்தர் .

” சாந்தினியிடம் கேட்டு சாப்பிடுங்கள் .நாங்கள் வரமாட்டோம் …” இருவரின் கைகளையும் அழுத்தி பிடித்தபடி சாத்விகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,சந்திரிகா எழுந்துவிட்டாள .

” வெளியே போகும் பிள்ளைக்கு சாப்பாடு போட வேண்டாமா …? ” என்றபடி .

ம்க்கும் இவர்கள் தவறாமல. வேளா வேளைக்கு மகனுக்கு சாப்பாடு பரிமாறுகிறார்களாக்கும் , இவன் வீட்டில் சாப்பிடுவதே அபூர்வம் ” சாத்விகா முணுமுணுக்க …

” அதனால்தான் , நான் அவசரமாக போகிறேன் …” என பதிலளித்துவிட்டு போனார் சந்திரிகா .

” சை இந்த வீட்டில் எல்லோருக்கும் பாம்பு காது …” முனங்கிவட்டு திரும்பி , தன்னையே பார்த்து கொண்டிருந்த சக்கரவர்த்திக்கு ஒரு இளிப்பை கொடுத்து அசடு வழிந்துவிட்டு , ” வாங்க மாமா , நாமும் சாப்பிட போகலாம் ” என அவர் கையை பிடித்து இழுத்து போனாள் .

” ஏய் காலையில் எழுந்து ஜாக்கிங் மட்டும்தானே முடித்தாய் .இன்னமும் குளிக்கவே இல்லையே .அதற்குள் சாப்பிட வந்து உட்காருகிறாயே ….” வீரேந்தர் அவளை விரட்டினான் .

உடனே ஜாகிங் வியர்வையை உடலில் உணர்ந்தாலும் , வீரேந்தர் சொன்னதற்காகவே அதனை மறுக்கும் எண்ணத்துடன் , ” இங்கே என்ன வியர்த்தா வழிகிறது …? நான் இன்று சாப்பிட்டு விட்டுத்தான் குளிக்க போகிறேன் …” சொல்லிவிட்டு இட்லிகளை தட்டில் பரிமாறிக்கொண்டாள் .

” அதானே இந்த குளிரில் யாருக்காவது வேர்க்குமா ….? ” வீரேந்தரின் குரலில் கிண்டல் இருந்த்து . ஏனெனில் அப்போது டில்லியில் வெயில் காலம் தொடங்கியிருந்த்து .

பொதுவாக இயற்கை டெல்லி மக்களை நிறையவே சோதிக்கும் .குளிர் காலங்களை போன்றே அங்கே வெயில் காலங்களும் மிக கடுமையானவை .கொடுமையானவை .வெயிலோடு திடுமென புழுதிக் காற்றும் சேர்ந்து கொள்ளும். இது போன்ற கடுமையான ஙெயிலுக்கும் , உறைய வைக்கும் குளிருக்கும் என இரண்டு தனித்தனியான உடைகளை வாங்கி வைத்திருப்பர் அம்மாநில மக்கள் .அந்தந்த கால முடிவில் அந்தந்த ஆடைகள் அலமாரிக்குள்ளோ , பரணுக்குள்ளோ மூட்டை கட்டி போடப்படும் .ஒன்றினை ..மற்றொன்றிற்கு உபயோகிக்க முடியாது .இது போன்ற எதிரெதிர் காலநிலைக்கேற்பதான் அம்மாநில மக்களின் உடைகளில் முக்காடும் , முகம்  மறைத்தலும் ,  தலைப்பாகையும் இடம்பெறுகிறது .அவையே பாரம்பரிய உடையாக அடையாளம் காணப்படுகின்றன.

இப்போது முன்தினம்தான் டில்லியின் காலநிலையை விளக்கி , சாத்விகாவிற்கான வெயில் கால உடைகளை வாங்கி தந்திருந்தாள் சந்திரிகா .ஆவலோடு தேர்ந்தெடுத்து வாங்கி ஆசையாய் அலமாரியில் அடுக்கியிருந்த உடைகளின் ஞாபகம் வர , உடனே போய் குளித்துவிட்டு அந்த புது உடைகளில் ஒன்றை அணிய வேண்டுமென்ற எண்ணம் சாத்விகாவிற்கு உண்டானது .

” வகை வகையாய் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறாயே ….அந்த புது டிரஸ்ஸை போடவில்லை …? “

இவன் முன்னால் எதையும் நினைக்க முடியாதே …உடனே அதையே கேள்வியாக கேட்பான் …இட்லியை வாயில் அடைத்தபடி ” சாப்பிட்டு போவேன் …” என பதிலளித்தாள் .

சாப்பிட்டு குளித்து முன்தினம் எடுத்து வந்த அந்த சோளி உடையை அணிந்தாள் .எலுமிச்சை மஞ்சளில் டாப்பும் , வயலட் நிற பாவாடையும் …அப்பப்பா இது போல் அடிக்கும் வண்ணங்களை இந்த வடநாட்டு பெண்கள் ஏன்தான் விரும்புகின்றனரோ …? இந்த உடை சாத்விகாவிற்கு பிடிக்கவேயில்லை . தன்னை அது கறுப்பாக காட்ணுமென்ற எண்ணம் அவளுக்கு .ஆனால் சந்திரிகாதான் அழகாக இருக்கிறதென கட்டாயப்படுத்தி வாங்கி வந்துவிட்டாள் .இன்று அணிந்து பார்த்த போது அழகாக இருப்பதாகவே தோன்றியது . உடை முழுவதும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் கனமாக இருந்த்தை தவிர அந்த உடை அவளுக்கு மிக பொருந்தியதாக உணர்ந்தாள் .சாத்விகாவின் ஒவ்வொரு அசைவிலும் பளபளத்து மின்னின உடையின் கண்ணாடி துண்டுகள் .

” ம் …அழகாக இருக்கிறது …” பின்னால் கேட்ட வீரேந்தரின் குரலில் துள்ளிய உள்ளத்தை வெளியே காட்டாமல் , திரும்பியும் பாராமல் ” என்ன கேப்டன் சார் . இன்னைக்கு இந்த பக்கம் தலை தெரியுது …? ” கிண்டலாக கேட்டாள் .

” வீட்டுப் பக்கம் கேட்கிறாயா …? உன் அறைப் பக்கம் கேட்கிறாயா …? “

” இரண்டும்தான் …”

பார்ட்டி முடிந்து வந்த அன்று  இருவருக்கும் நடந்த சண்டையின் பிறகு வீரேந்தர் அவள் அறைப்பக்கமே வரவில்லை .இன்றென்னவோ …உள்ளே வந்து நின்று கொண்டு பொண்டாட்டியை ரசிக்க வேறு செய்கிறான் . இவன் சிரித்தால் நான் குழைய வேண்டும் .எரித்தால் நான் விரைக்கவேண்டும் .இவனுக்கு தலையாட்டி பொம்மை நான் …தனக்குள் பேசியபடி தலையை சிலுப்பக் கொண்டாள் .

” புதிய உடை உனக்கு எப்படி இருக்கிறது என பார்க்கத்தான் வந்தேன் …” அவன் விழிகள் ரவிக்கைக்கும் , பாவாடைக்குமிடையே சாத்விகாவின் சிறு அசைவிலும் பளீர் பளீரென தெரிந்து மறைந்த இடைப்பகுதியில் ஊர்ந்த்து .

கணவனின் கள்ள பார்வையை உணர்ந்த சாத்விகா உடல் சிலிர்க்க உடையின் தாவணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டாள் .” கேள்வி கேட்பவளுக்கு பதில் சொல்ல முடியாமல் கீழே உருட்டி விட்டுத்தானே போவீர்கள் …? ” என்றாள் .

” சும்மா …ஒரு சின்ன விளையாட்டு .பெரிய அடியா என்ன …? ” கேட்டபடி அருகே வந்து அவள் முழங்கையை பற்றி திருப்பிஅங்கிருந்த சிறு கீறலை ஆராய்ந்தான் .

சாத்விகாவிற்கு வஹீப் காட்டிய முழங்கை காயம் நினைவு வந்த்து .” உங்கள் பேச்சை கேட்காதவர்களை இப்படித்தான் காயம் வரும் வரை தண்டிப்பீர்களா கேப்டன் சார் …? “

” யாரை சொல்கிறாய் …? இது என்ன பெரிய காயமா ..ரொம்ப வலிக்கிறதா …? வேறு எங்கும் காயம் ….? பரபரத்தவனை கையுயர்த்தி நிறுத்தினாள் .”

” என்னை சொல்லவில்வை. உங்களிடம் வேலை செய்பவர்களை பற்றிக் கேட்டேன் …”

” யாரோ …எதுவோ …சொல்லியிருக்கிறார்கள் .அதனை நம்பி என்னடம கேள்வி கேட்கிறாய் .நான் பதிலாக சொல்வதை நம்பவா போகிறாய் …? “

” உண்மையை சொல்லிவிட்டால் நம்பிவிட்டு போகிறேன் …”

” அதை உண்மையென்று உன்னை நம்ப வைப்பதற்குள் எனக்கு அறுபது வயதாகி , தலை நரைத்து கம்பூன்றி நிற்பேன் ்அப்போதும் நீ நம்பமாட்டாய் ….” வீரேந்தர் விவரித்த தோற்றத்தில் சாத்விகாவிற்கு சிரிப்பு வந்த்து .

” அறுபது வயதிலேயே தலை நரைத்து கம்பூன்றுவீர்களா …?”

” எப்போதும் முறைத்து கொண்டிருக்கும் மனைவி கிடைத்த கணவன்கள் எல்லோரும் அப்படித்தான் , சீக்கிரமே தாத்தாவாகி விடுகின்றனர் …”

” நான் எந்நேரமும் முறைக்கிறேனாக்கும் …? ” என முறைத்தவளின் முகத்தை கண்ணாடியின் பக்கம் திருப்பி ” பார் ..” என்றான் .அவசரமாக முகத்தை மாற்றி கொண்டாள் .

” ம் …இப்போது பரவாயில்லை பேபி …” என்றவன் பின்னிருந்து அவளை அணைத்து அவள் தோள்களில் முகம் வைத்துக்கொண்டு கண்ணாடியில் அவளை பார்த்தான் .” இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகாக பொருந்தியிருக்கிறது பேபி “

கொஞ்ச நாட்களாக அவன் தன்னை பேபி என்று அழைப்பதில்லை என உணர்ந்தவள் ” ரொம்ப நாட்கள் கழித்து இப்படி கூப்பிடுகறீர்கள் …” என்றாள் .

” அப்படியா …உன் வீராவை கேட்டு கூட நாளாகிவிட்டது போலிருக்கறது .நாம்  பேசிக் கொள்ளவே இல்லைதானே .ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் பேபி .நான் வீட்டிலேயே இல்லையே .

” என்ன வேலை …? “

” அது ….ரகசியமான அரசாங்க வேலை .உன்னிடம் சொன்னால் யாரிடமாவது உளறி வைப்பாய் .வேண்டாம் …”

” உளறுவாயா நான் …? யாரிடம் என்ன பேசுவதென தெரியாமல் பேசுவேனா …” தன் இடையை சுற்றியிருந்த அவன் கரங்களில் கிள்ளினாள் .

” பேசமாட்டாயா …இப்போதுதானே ஏதோ வேலை செய்பவர்களையெல்லாம் காயப்படுத்துவீர்களோ என என்னை சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தாய் …? “

” அ…அது …வந்து ….”




” திணற வேண்டாம் பேபி .உன் மனதிலிருப்பதை வெளிப்படையாகவே கேள் …”

கணவனின் அருகாமையுடன் சேர்ந்த அன்பு பேச்சு தந்த தைரியத்தில் சாத்விகா கேட்டாள் .” அந்த காஷ்மீர் கலவரம் நடந்த போது நான் பிறந்திருந்தேனா …?கார்த்திக் சிறு பிள்ளையெனில் நீங்களும் அப்போது சிறு பிள்ளையாகத்தானே இருந்திருக்க வேண்டும் .அப்போது உங்கள் வயது என்ன …? ஏன் இந்த விபரங்கள் சொல்வதையெல்லாம் தவிர்க்கிறீர்கள்.ஒரு வேளை என் பிறப்பிற்கும் , அந்த சம்பவங்களுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதோ  ….? ” வீரேந்தரின் கைகள் இறுகியது .அவன் கைகளுக்குள் இருந்த சாத்விகாவின் இடை நெரிபட்டு வலித்தது .

” ஷ் ..்வலிக்கிறது வீரா …விடுங்கள் …” அவனின் பிடியிலிருந்து விடுபட முயன்றவளை அவன் விடவில்லை .

” வேண்டாம் சாத்விகா .நீ    பூ போன்றவள் .அந்த பூகம்ப உண்மையை  தாங்க மாட்டாய் .அந்த விபரங்களை விட்டு விடு …”

” இல்லை வீரா .எந்த பூகம்பத்தையும் தாங்கும் தைரியத்தை நான் வளர்த்து கொண்டுள்ளேன் .அத்தோடு எனக்கு நீங்கள் அனைவரும் துணை இருக்கிறீர்களே . அப்பா , அம்மா , அண்ணா , அத்தை , மாமா ..்இவர்களோடு …நீங்கள் .இத்தனை பேரின் அன்பிற்கு மேலேயா  அந்த பூகம.பம் என்னை காயப்படுத்த போகிறது …? “

வீரேந்தர் பதில் சொல்லவில்லை .தனது பிடியை விடவும் இல்லை .” வேண்டாம் …” என மீண்டும் முணுமுணுத்தான் .அதில் பலவீனம் நிறைந்திருப்பதை பார்த்தவள் , ” முதலில் இந்த கைகளை கொஞ்சம் தளர்த்தி கொண்டீர்களானாலே எனக்கு போதும் .இந்த இறுக்கத்தைத்தான் என்னால் தாங்க முடியவில்லை ….” செல்லமாய் சிணுங்கினாள் .

பெருமூச்சுடன் அவள் இடையை மெனமையாக வருடியபடி தனது கரத்தை எடுத்தவன் ” அப்பாவிடம் பேசிவிட்டு உனக்கு சொல்கிறேன் .இப்பவாஓது வா  இந்த காயத்திற்கு மருந்து போட்டு கொள்ளலாம் …” அவள் முழங்கையை காட்டி அழைத்தான் .

அவன் அவளது முன்வாழ்க்கை பற்றி சொல்கிறேன் என்றதே பெரு மகிழ்ச்சியை கொடுக்க …மனம் நிறைய ,இது ஒரு காயம் …இதற்கு ஒரு மருந்து …என எண்ணி சிரித்தபடி ” இதற்கெல்லாம் மருந்து வேண்டாம் …” என்றாள் .

அவள் முழங்கையை திருப்பி காயத்தின் மேல் எச்சில் பட முத்தமிட்டன் ” இதுவும் மருந்துதான் .நாம் அனைவரும்சி றுவயதில் இந்த மருந்தை போட்டிருப்போம் …

” நம் விசயத்தில் ஜடம் நானல்ல …நீதான் ….நமக்குள் வரும்  இயல்பான உணர்ச்சிகளை மறைத்து உண்மைகளை தேடிக்கொண்டு திரிகிறாய் ….” சிறு வெறுப்புடன் கூறிவிட்டு ஙெளியேறினான் .

சாத்விகாவிற்கு அந்த கணம் தனது எல்லா தேடல்களையும் மறந்துவிட்டு கணவன் கைகளுக்குள் அடங்கி விட்டாலென்ன என தோன்றியது .ஒவ்வொரு முறை அவன் கணவனாக நெருங்கும் போதெல்லாம் அவள்தான் நெருப்பில்லா தீப்பந்தமாய் எரிந்து கொண்டிருக்கிறாள் .அவன் என்னவோ …அவனுக்கு மட்டும்தான் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு போல் பேசி போகிறான் .

மனம் முழுவதும் பரவிய வெறுமைநுடன் வந்தவளுக்கு ஜூஸ் கொடுத்தாள் சாந்தினி .” இன்று பேசலாமா …? ” கிசுகிசுத்தாள் .

சக்கரவர்த்தியின் மீது வஹீப் சொல்லிய குற்றங்களுக்கான விடைகளை , இன்று அவரின் விளக்கங்களே தந்துவிட்டன. இனியும் அந்த வஹீப்பின் குற்றச்சாட்டுகளை கேட்க போகத்தான் வேண்டுமா …என்ற எண்ணம்தான் சாத்விகாவிற்கு .ஆனாலும் சாந்தினியின் பிள்ளை முகம் அவளை சலனப்படுத்தியது .

அன்று காலை தூக்கம் பிடிக்காமல் விரைவில் எழுந்து கீழே இறங்கி வந்தவள் , அடுப்படியனுள் ஒரு சாலை விரித்து கீழே அமர்ந்து இஸ்லாமிய முறைப்படி தொழுது கொண்டிருந்த சாந்தினியை பார்த்ததும் ஆச்சரியமானாள் . அப்போது அவளை பார்த்து வுட்ட சாந்தினி கொஞ்சம் இருக்குமாறு சைகை காட்டிவிட்டு தனது தொழுகையை முடித்து கொண்டு எழுந்து வந்தாள் .

” சாந்தினி …நீ இந்துதானே ….இப்போது தொழுகிறாயே ….”

” எங்கள் திருமணம் முடிந்த்தும் நான் முஸ்லீமாக மதம் மாறவிட வேண்டுமென வஹீப் கட்டாயமாக சொல்லிவிட்டார் திதீ .அதுதான் இப்போதே அந்த மத முறைகளையெல்லாம் பயின்று கொண்டிருக்கிறேன் “

வேறு மத்த்தவனை மண முடிக்க நேர்ந்தால் , பெண்ணும் அதே மத்ததுக்கு மாற வேண்டுமா …? ஏன் இந்த வேலையை ஆண் செய்ய மாட்டானா …? இல்லை இருவருமே மனம் ஒத்து வாழும்போது அவரவர் மதங்களை அவரவர் பின்பற்றுவது தானே நியாயம் …? மனக்குமுறலுடன் இதனை சாந்தினியிடமே கேட்ட போது அவள் இவளை விநாதமாக பார்த்தாள் .

” இதுலென்ன இருக்கிறது திதீ …? அவர்களே நமது வாழ்க்கை என்றான பின் சாதாரண இந்த மத்ம் மாறுவதில் என்ன வந்து விட போகிறது …? “

அவளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என தோன்றிவிட எப்படியும் போ என கையசைக்கும் போதே ஒன்று தோன்ற ” ஏன் சாந்தினி இந்த மதம் மாறும் விசயம்தான் அந்த மத ஆதரவாளர்களை கோப படுத்துகிறதோ …? அதுதான் உங்கள் உயிருக்கு ஆபத்தாகிறதோ …? ” என்றாள் .

” அதேதான் திதீ .தீவிர இந்து மத ஆதரவாளர்கள்தான் இந்த வேலை செய்கிறார்கள் .நான் அவரை விரும்புகிறேன் .என் மனமுவந்து அவரின் மத்திற்கு மாறுகிறேன் ்இதை தடுக்க இவர்கள் யார் …? நம் சாப் கூட அவர்கள் பக்கம் பேசிவதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது “

” ம்ஹூம் , வீராவும் ,மாமாவும் சூழ்நிலை கைதிகள் சாந்தினி நிச்சயம் ஒரு கலவரம் உறுதியெனும் போது அதனால் உயிர்சேதங்கள் வருவதால் அந்த அடிப்படையே வேண்டாமென நினைப்பது ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்களின் இயல்புதானே …”.

சக்கரவர்த்தியும் , வீரேந்தரும் சொல்வது போல் இது பெரிய பிரச்சனையாகத்தான் மாறுமென சாத்விகாவிற்கு இப்போது தோன்றியது .வஹீப்பிற்கும் , சாந்தினிக்கும் நிச்சயமாக உதவ வேண்டுமென அவள் முடிவெடுத்தாள் .




” நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை திதீ .ஒன்று மட்டும் தெரிகிறது .நீங்கள் உங்கள் கணவரையும் , மாமனாரையும் விட்டு கொடுக்காமல் பேசுகறீர்கள் .ம் …நம்மை போன்ற பொண்களின் நிலையே அதுதானே .கணவரையும் , கணவர் வீட்டினரையும் அவர்கள் தவறே செய்திருந்தாலும் ஆதரித்து பேசுவது ….”

” உன்னை போல. என்னை நினைக்காதே சாந்தினி .நான் எந்த இடத்திலும் நியாயத்தை மட்டுமே பார்ப்பவள் .உறவுகள் எனக்கு இரண்டாம்பட்சம்தான் .இப்போது கூட உங்கள் இருவரையும் இணைக்கும் வழியைத்தான் யோசித்து கொண்டிருக்கிறேன் …”

” ரொம்ப நன்றி திதீ .நீங்கள் வஹீப் சொல்வது போல் அந்த லேப்டாப்பை மட்டும் எடுத்து வந்துவிட்டீர்களானால் , எல்லாம் சரியாகிவிடும் .” சாந்தினி சந்தோசமாக உள்ளே செல்ல சாத்விகா மெல்ல வீட்டை நோட்டம் விட்டு யாருமில்லை என உறுதியானதும் சக்கரவர்த்தியின் அறைக்கிள் நுழைந்தாள் .

What’s your Reaction?
+1
8
+1
9
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

மேம் இன்னைக்கு இல்லியா

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!