malaiyoram veesum katru Serial Stories மலையோரம் வீசும் காற்று

மலையோரம் வீசும் காற்று – 16

16

அந்த பெரிய ஆலையை விழி விரித்து பார்த்தாள் மணிரூபா .எவ்வளவு பெரிய இடம் . ஆதியின் சொத்துக்களின் மதிப்பை முன்தினம் அப்பாவும் ,அண்ணன்களும் பேசியது நினைவு வந்த்து .அவர்கள் நினைத்து பார்க்க முடியாத கணக்கில் அது இருந்தது .அவ்வளவு பெரிய இடத்துப்பிள்ளை நம் வீட்டில் வந்து தங்கி ,எளிமையாக பேசி சாப்பிட்டு உறங்கியதே …பேசிப் பேசித் தீரவில்லை சடகோபனுக்கும் ,விசாலத்திற்கும் .

அவன் வந்த காரணம் இவர்களுக்கு தெரியாது .தெரிந்திருந்தால் இப்படி பேச மாட்டார்கள் .ஆதிநாதன் அளித்த பரிசின் மதிப்பு கூட இப்போது மணிரூபாவிற்கு புரிந்த்து .வைரங்களில் புரள்பவனுக்கு தங்கம் சாதாரணம்தானே .என்னை பற்றி அறியாமல் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் ..? ஆதி அன்று சீறியது நினைவு வந்த்து .
உளவு பார்க்க வந்தாயா ? என்று தான் அவனை கேட்டதும் நினைவு வந்த்து .இவன் ஏன் தன் நிலையை விட்டு இறங்கி , அன்று எங்கள் இடம் தேடி வந்தான் ..? அதனால் அல்லவோ ..? எனக்கு இவ்வளவு துயரங்கள் ..?என்று எண்ணிவிட்டு ,சை…அப்படி ஆதி வரவில்லையென்றால் இந்த அப்பாவி ஜனங்களின் வாழ்வில் விடிவு ஏது ..? தன் தலையில் தானே கொட்டிக் கொண்டவளை விசித்திரமாக பார்த்தான் அரவிந்தன் .

” என்ன …பைத்தியம் மாதிரி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய் ..? ” அரவிந்தன் சடகோபனின் தங்கை மகன் .விடுபட்டு போன சில சிறு விவசாயிகளின் பட்டியலை ஆதிநாதனிடம் கொடுக்க மகன்களுக்கு வேலையிருந்த்தால்  தங்கை மகனை அனுப்பியிருந்தார் சடகோபன் .இதையே ஆதியை பார்ப்பதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டு தானும் ஆதிக்கு நன்றி கூறி வருவதாக சொல்லி அரவிந்தனுடன் சேர்ந்து கொண் டாள் மணிரூபா .

” ஏன் மணி இந்த ஆதி இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறானே ..? இவன் எப்படி அங்கே வந்து விவசாயம் செயது கொண்டிருந்தான் ..? ” அரவிந்தனின் குரலில் ஆச்சரியம் .

” ப்ச் …தெரியவில்லை ….” தெரிந்தும் பொய் சொன்னாள்.

” அப்படியா ..? நிச்சயம் உனக்கு தெரியாதா ..? ” இப்போது அவன் குரலில் அழுத்தம் இருந்த்து .

” ஏன் அத்தான் இந்த வெட்டிப்பேச்சு .வந்த வேலையை முடித்துவிட டு போகலாம் .சொல்ல வேண்டியதெல்லாம் நினைவிருக்கிறதல்லவா ..? ” அவன் முகம் பார்க்காமல் முன்னால் நடந்தாள் .

” அந்த முதலாளியை பார்க்க நீதான் போய் காத்துக் கொண்டிரு . நான் உள்ளே போய் ஒரு சுற்று சுற்றிவிட டு வருகிறேன் ” எரிச்சலோடு சொல்லிவிட்டு நடந்தான் .

” ஏய் ரூபி ..எப்போ வந்தாய் ..? வா..வா ..உள்ளே போய் பேசலாம் .சாரிடா நானே வரலாம்னு இருந்தேன் .ஆனால் வேலை நிறைய அதனால்தான் வர முடியவில்லை .வா …போகலாம் “ஆதியின் குரலில் பரவசம்.

” ம் …வேலைதானே…இருக்கும் .இப்போது நீங்கள்தான் பெரிய ஆளாகி விட டீர்களே “

” தனது அறைக்கதவை திறந்தவன் திரும்பி ரூபாவை பார்த்து ” இல்லை ரூபி , நான் எப்போதும் உன் ஆதிதான் ” என்றான் .

அதனை காதில் வாங்காமல் தன் போனை எடுத்தவள் ” ம் ..சீக்கிரம் வாங்க ” என்றாள் .

யார் என்ற ஆதியிடம் வந்து கொண்டிருந்த அரவிந்தை கை காட்டினாள் .வேகமாக வந்த அரவிந்தனின் கை குலுக்கிய ஆதிநாதன் வாங்க என உள்ளே அழைத்து சென்று அமர வைத்தான் .

” நான் சடகோபன் மாமாவின் தங்கை பையன் ” தன்னை அறிமுகம் செய்து கொண்ட அரவிந்தன் ” மாமா இந்த விபரங்கள் உங்களிடம் சொல்லி வர சொன்னார் “

கண்களை மணிரூபாவிற்கும்  , காதினை அரவிந்தனுக்கு கொடுத்திருந்தான் ஆதிநாதன் .

” ஹலோ சார் ..நான் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்தானே ” விரல்களை ஆதிநாதன் முன் சொடுக்கினான் அரவிந்தன் .

ஒரு நொடி அரவிந்தனை சந்தித்த ஆதியின் கண்கள் ” கவனிக்கிறேன் சொல்லுங்கள் ” என்ற போது ரூபாவின் புறம் மாறியிருந்த்து .

இப்போது மணிரூபாவின் தோள்களை தொட்டு எழுப்பிய அரவிந்தன் ” நான் வந்த வேலை முடிந்துவிட்டது .உங்களுக்கு ஒரு போனஸ் செய்தி.விரைவில் எனக்கும் மணிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.நேற்றுதான் எங்கள் வீட்டோடு நிச்சயம் கூட முடிந்துவிட்டது. ” என்றான் .

மணிரூபா தரையை பார்த்தபடி குனிந்திருக்க ஒரே ஒரு நிமிடம் அங்கே மௌனம் நிலவியது .பின்னர் ” வாழ்த்துக்கள் ” அரவிந்தனின் கை குலுக்கினான் ஆதி .

மணிரூபாவின் தோள்களை விடாமல் பற்றியபடி அரவிந்தன் திரும்ப , சற்று இரு பேச வேண டுமென்ற ஆதியின் பார்வையை சந்திக்காமலேயே சென்று விட்டாள் மணிரூபா .

புழுதியைக் கிளப்பிக் கொண்டு தன் வீட்டு வாசலில் அந்த கார் வந்து நிற்பதை மொட்டை மாடியிலிருந்து பார்த்த மணிரூபா அவசரமாக தண்ணீர் தொட்டியின் அடியில் மறைந்து கொண்டாள் .இவனை பார்த்துவிட்டு வந்து அரைமணி நேரம்தானே ஆகிறது .அதற்குள் இங்கே ஏன் வந்தான் ..? நகம் கடித்தாள் .அவன் போகட்டும் பிறகு கீழே போகலாம் .அங்கேயே அமர்ந்து விட்டாள் .
” ஏய் ..என்னடி இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாய் …? வெளியே வாடி …” ஆதியின் குரல்தான் முரட்டுத்தனமாக ஒலித்தது .

இவன் …இங்கே எப்படி இங்கே …? திருதிருவென விழித்தாள் .அவள் கைகளை வலிக்கும்படி இழுத்து நிறுத்தியவன் அவள் தோள்களில் தன் கைகளை ஊன்றியபடி கண்களுக்குள் உற்று பார்த்தான் .

விடுங்க ..என்ன ரவுடித்தனம் பண்றீங்க ..? எப்படி இங்கே வந்தீங்க ..? ” அவன் கைகளை உதற முயன்றாள் .

” ஓஹோ …இப்போ உனக்கு நான் ரவுடியா ..? அவன் ஹீரோவா ..? அவனை திருமணம் செய்ய போகிறாயா ? ம் .. ” தோள்களை பற்றி உலுக்கினான் .

” ஆமாம் …அது எங்கள் வீட்டினர் சேர்ந்து முடிவெடுத்தது .இதை நீங்கள் தடுக்கனும்னு நினைக்காதீர்கள் .அது நடக்காது “

” ஏய் ..எவ்வளவு திமிர்டி உனக்கு .என்னிடமே இப்படி பேச ..? ” அவனது குலுக்கலில் தன் கைகள் சுழன்று வந்து விடுமோ என பயந்தாள் .

” சை ..விடுங்க நான் அப்பாவை கூப்பிடுவேன் “

” வரும்போதே உன்னை இங்கே பார்த்துவிட்டு , ஐந்து நிமிடம் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் காற்றாட நின்றுவிட டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன் .அவர்கள் வரமாட்டார்கள் “

” நான் கத்துவேன் …அம்மா ்..”

” கத்தாதே …எனக்கு பதில் சொல்லு …எதற்காக அவனை மணம் முடிக்க சம்மதித்தாய் ?”

” அது என் இஷ்டம் .நீங்கள் போங்க …அம்மா …அப்பா …”

” ஏய் கத்தாதேன்னு சொல்றேன் …” என்றவன் அவளை அப்படியே அந்த தண்ணீர் தொட்டிக்கு அடியில் இழுத்து அவள் உதடுகளை வெறியோடு தன் இதழ்களால் மூடினான் .

முதலில் போராடியவள் பின் நெகிழ, முரட்டுத்தனமாய் ஆரம்பித்த முத்தம் , மென்மையாகி காதல்  கலந்து , ரசிக்க தொடங்கப்பட , இதழகள் சிவக்க தொடங்கின.

நிதானமாக முத்தத்தை முடித்தவன் சிவந்துவிட்ட இதழ்களை வருடியபடி ” இப்போது சொல்லு .அவனை திருமணம் செய்ய போகிறாயா ..? ” என்றான் .

இப்படி சட்டென நெகிழ்ந்த்தற்காக தன் மீதே கோபம் கொண்டிருந்தவள் அவன் மீது அதனை திருப்பி , ” ஆமாம் ..அவரைத்தான் திருமணம் செய்ய போகிறேன் ” வேகமாக கூறினாள் .

ஆத்திரமாக மீண்டும் ஒரு முரட்டு முத்தத்தை அவள் இதழ்களில் பொருத்தியவன் ” இதையெல்லாம் மறந்து எப்படி அவனை மணம் முடிக்கிறாய் என பார்க்கிறேன் ” என்றவன் அவளை கீழே உதறிவிட்டு வெளியேறினான் .

Categories

Facebook Page Widget

error: Content is protected !!