malaiyoram veesum katru Serial Stories மலையோரம் வீசும் காற்று

மலையோரம் வீசும் காற்று .- 10

10

” ஹப்பா அடிக்கிற அனல்ல இந்த செடியெல்லாம் கருகிடும் போல …” கேலிக்குரல் கேட்டது .இங்கேயும் வந்துவிட்டானா ? கோபமாய் பார்த்தாள் .

” நீ அங்கே கிளம்பிய வேகத்தில் இங்கேதான் வந்து கொதித்துக் கொண்டிருப்பாயென்று தெரியும் .அதனால்தான் நானும் வந்தேன் “

ஆதியின் மேல் வந்த கோபத்தில் வீட்டின் பின்புறம் வந்து நின்று கொண்டிருந்தாள் மணிரூபா .

” ஆஹா பெரிய கண்டுபிடிப்புதான் .உங்களுக்கு என்ன அவார்டுக்கு சொல்லட்டும் ..? “
” அது உன் இஷ்டம் பாப்பா .நீ என்ன குடுத்தாலும் நான் வாங்க ரெடியாக இருக்கிறேன் ” குறும்பாய் கூறிவிட்டு உதடுகளை குவித்தான் .

பாப்பாவா …இவனை …இவனுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது …? கோபத்தின் கனல் கூடிக் கொண்டே போக , அவன் செய்கை வேறு அதில் நெய் ஊற்றியது .

” அம்மா ..! தாயே ..! சும்மா கிண்டலுக்கு சொன்னேன் .கல்லெடுத்து போட்டு என் மண்டையை உடைக்கும் ஐடியா ஏதாவது இருந்தால் தயவுசெய்து விட்டுடும்மா …” மன்னிப்பு போல் காதுகளை பிடித்துக் கொண்டான் .

உண்மையில் அங்கிருந்த துவைக்கும் கல்லின் பின்னால் உட்கார போடப்பட்டிருக்கும் சிறு கல்லை  தூக்கி இவன் மண்டையில் போட்டால் தான் என்ன ்..?ஆனால் என்னால் அந்த கல்லை தூக்க முடியுமா ..? இந்த சிந்தனையில்தான் மணிரூபா இருந்தாள் .

இவனென்ன எல்லாவற்றையும் இப்படி தெரிந்து கொள்கிறானே ..? என்று நினைத்தவளுக்கு காதுகளை பிடித்தபடி மன்னிப்பு கேட்டு நின்ற அவன் தோற்றம் சிரிப்பை உண்டாக்கியது .அவசரமாக தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள் .

எவ்வளவு இனிமையாக இலகுவாக பேசுகிறான் .இவன் மட்டும் அந்த குடும்பத்தை சேர்ந்தவனாக இல்லாதிருந்தால் ….,தறி கெட்டு ஓடிய மனதை இழுத்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள் .

” இப்போ எதற்கு இங்கே வந்து நிற்கிறீர்கள் ..? “

அவன் முகத்தில் குறும்பு மறைந்து சீரியஸ் வந்த்து .” ரூபா உன் அப்பாவிற்கு நான் எங்களை உணர்த்தி விட முயன்று கொண்டிருக்கிறேன் .நீ ஏன் இடையில் வந்து கெடுத்து கொண்டிருக்கிறாய் ..? உன் திருவாயை மூடிக் கொண்டு கொஞ்சம் சும்மா இருந்தாயானால் என் வேலை முடிந்து விடும் .பிறகு …? “

” பிறகு …பிறகு …என்ன செய்வாய் ? இங்கே இருக்கிற எல்லார்் தலையிலும் மிளகாய் அரைத்து விட டு நீ பாட்டுக்கு லண்டனுக்கு ப்ளைட் ஏறிடுவாய் …இங்கே இந்த அப்பாவி ஜனங்க சோத்துக்கு வழியில்லாமல் வயிற்றில் ஈரத்துணியை போட்டுட்டு இருக்கட டுமென்கிறாய் ..அப்படித்தானே ..? ” எல்லை மீறிய கோபத்தில் ஏக வசனத்தில் பேசத் துவங்கினாள் .

” ஏய் என்னடி ரொம்ப பேசுகிறாய்..? எங்கள் நிலைமை பற்றி என்ன தெரியும் உனக்கு ..? ” ஆதியும் கோபத்தில் மரியாதையை விட்டான் .

” உன் நிலைமையை பற்றி எனக்கென்ன கவலை ..? ஒழுங்கா சேத்துல காலை வச்சி உழைச்சி பாரு ்அப்போ எங்க நிலைமை உனக்கு தெரியும் .சொகுசா வானத்துல பறக்கிறவனுக்கு என்ன புரியும் ..? “

” உழைப்புக்கு அஞ்சுற குடும்பம் எங்கள் குடும்பமில்லை .நாங்களும் விவசாயக் குடும்பந்தான் .சேத்துல இறங்குறது எங்களுக்கு ஒண்ணும் புதிசில்ல .”

” அப்படி சொல்றவன் அந்த நிலத்தை வாங்க எதுக்கு அப்படி யோசிக்கிற ..? வாங்கினால் உடல் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி வந்திடுமோங்கிற பயந்தானே ..?”

” எனக்கெல்லாம் அந்த பயம் இல்லை .உன் வீட்டாளுங்களுக்குத்தான் அந்த பயம்னு நினைக்கிறேன் .இல்லைன்னா பக்கத்துலயே பொன்னாய் விளைஞ்சி கிடக்கிற பூமியை முழுசா தூக்கி அடுத்தவன் கையில் கொடுப்பாங்களா ..? ஏன்டி உன் அப்பாவுக்கும் , அண்ணன்களுக்கும் அறிவே கிடையாதா …? “

ம்ஹூம் …இவனை இனிமே விடக் கூடாது …அதிகரித்து விட்ட ஆத்திரத்தில் கைக்கு ஒன்றும் கிடைக்காமல் போக கொடியில் கிடந்த துண்டினை எடுத்து அவனை அடிக்கும் நோக்கத்துடன்  கோபத்துடன் அவன் மேல் வீசினாள் .அதனை அப்படியே பிடித்தவன் வேகமாக இழுக்க துண்டோடு சேர்ந்து இழுபட்டு அவனுக்கு மிக அருகே வந்து நின்றாள் .

முன்பு துண்டினை இழுத்து விளையாடிய விளையாட்டு இருவருக்குமே நினைவு வந்து விட , கோபமெல்லாம் வடிந்து விட ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர் .

” ரூபி ..” என்ற மென்மையான அழைப்புடன் அவள் கன்னம் தொட முயன்றான் ஆதிநாதன் .தன் கைப்பிடியில் இருந்த துண்டினை அப்படியே அவன் முகத்தின் மீது போட்டவள் தள்ளி போய் நின்று ஜாக்கிரதை என்று ஒற்றை விரல் ஆட்டினாள் .

அந்த பத்திரம் காட்டிய விரலை அழுந்த பற்றியவன் ” ரூபி ..நாம் கொஞ்சம் பேசலாம் டியர் …”

டியரா …ஆதியை பற்றி வித்யா சொன்னது நினைவு வர ” என்னது டியரா ..? உன்னை பார்த்து பல்லிளித்துக் கொண்டு உன் பின்னால் வருவார்கள் பார் அவர்களிடம் சொல்லு இந்த டியரை …” விரலை பிடுங்க முயல அவன் விடாமல் அழுத்தி பிடித்தான் .

” உனக்கு என்ன தெரியும் என்னை பற்றி ….?எப்போது பார்த்தாலும் தப்பாகவே நினைப்பாயா ..? “

” பார்த்து நான்கே நாட்களான ஒருத்திக்கு தங்க கொலுசு வாங்கி கொடுப்பவனை பற்றி என்ன நினைப்பது ? உஷ் …கையை விடு வலிக்குது …”

” பார்க்கும் பெண்களுக்கெல்லாம் பரிசு வாங்கிக் கொடுக்குமளவு கேவலமானவன் நானில்லை ரூபி .என் மனதுக்கு பிடித்தவளுக்காக  மட்டுந்தான் அதை செய்வேன் …செய்தேன் ” ஆதியின் கை இப்போது மணிரூபாவின் விரலை மென்மையாக வருடியது .
இல்லை இது சரி வராது .இவனுடன் இன்னும் சிறிது நேரம் இருந்தால் அந்த கேஸினை வாபஸ் வாங்கி விடுங்கள் அப்பா ..என்று என்னையே என் அப்பாவிடம் சொல்ல வைத்துவிடுவான் .இப்படி எண்ணிய மணிரூபா இப்போது தளர்ந்து விட்ட அவன் பிடியிலிருந்து தன் விரலை விடுவித்துக் கொண்டு வேக நடையில் உள்ளே ஓடி விட திரும்பினாள் .

” எங்கே ஓடுகிறாய் ..? நாம் இன்னும் பேசி முடிக்கவில்லை ..? ” வழி மறித்தான் .

அப்போது வெளியே ஏதேதோ இனம் புரியா சத்தங்கள் கேட்க தொடங்க , ஆட்கள் அங்குமிங்குமாக ஓடத்துவங்க, வீதியே அலறிக் கொண்டிருந்த்து .

மணிரூபாவும் வீட்டினுள் நுழைந்து வெளியே போக , ஆதிநாதன் முன்வாசலை நோக்கி விரைந்தான் .தெருவில் அனைவரும் சற்று தள்ளியிருந்த அந்த வீட்டினை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர் .

மணிரூபாவின் அருகே வந்த்தும் நடை வேகத்தை குறைத்து ” என்ன விசயம் ரூபா ..? ” ரகசியமாக கேட்டான் ஆதிநாதன் .

” போய் பார்த்தால்தான் தெரியும் ” அவனை முறைத்தபடி பதிலளித்து விட்டு அந்த வீட்டினுள் நுழைந்த மணிரூபா ஐந்தே நிமிடங்களில் முகம் முழுவதும் துக்கம் வழிய அதிர்ந்து வெளியேறினாள் .

” என்னம்மா …என்ன ஆச்சு ..? ” அவளது சோக முகத்தில் பதறி கேட்டான் ஆதிநாதன் .கண்கள் பொழிய அவனை ஏறிட்டவள் ” பாவி எல்லாம் உன்னால்தான்டா ..இனிமேல் என் கண் முன்னாலேயே வராதே ..போ …போய்விடு .இந்த உலகிலேயே நான் வெறுக்கும் ஒரே ஜீவன் நீதான் .போடா …போ…போ …” கத்தினாள் .

அதிர்ந்து நின்றான் ஆதிநாதன்.

Categories

Facebook Page Widget

error: Content is protected !!Our Official Facebook Page Click like For Regular Updates